மரணித்தவரை அடக்கம் செய்த பின்பு ஒருவர் அவருக்காக துஆச் செய்ய ஏனையவர்கள் ஆமீன் கூறலாமா?

بسم الله الرحمن الرحيم

விடை: துஆ என்பது ஒரு வணக்கமாகும். வணக்க வழிபாடுகள் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஆதாரங்களுடன் நின்றுகொள்வதுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. அல்லாஹ் மார்க்கமாக்காத ஒன்றைக்கொண்டு யாருக்கும் வணக்கம் செய்ய முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் ஜனாஸாத் தொழுகையின் பின்பு எந்த ஒரு ஜனாஸாவிற்கும்; அவர்கள் ஸஹாபாக்களை வைத்து துஆச் செய்ததாக உறுதியாகவில்லை. உறுதியான செய்தி என்னவென்றால் கப்ரு சமப்படுத்தப்பட்டதன் பின்பு கப்ருக்கு அருகாமையில் நின்று உங்கள் சகோதரருக்கு நீங்கள் பாவமன்னிப்புத் தேடுங்கள், அவருக்கு உறுதியைக் கேளுங்கள் ஏனென்றால் அவர் தற்பொழுது வினவப்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்று கூறியதே ஆகும். ஆகவே, இதன் மூலம் தெளிவாகும் சரியான முடிவு என்னவென்றால் மரணித்தவருக்கு  தொழுகைக்குப் பின்னால் கூட்டாக துஆச் செய்வது கூடாது என்பதாகும். அது பித்அத்தாகும்.

-     சஊதி பத்வாக் குழு

தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்