எம் முன்னோர்களின் முத்துப் பெட்டகத்திலிருந்து …. 02

بسم الله الرحمن الرحيم

என்றும் நிறைவுறாத இன்பத்தை வாங்க...!

வாழ்வின் ஒவ்வொரு மூச்சும் விலை மதிக்க முடியா முத்தாகும். அதனைக் கொண்டு என்றென்றும் நிறைவுறாத இன்பத்தை வாங்க முடியும்.

-    இமாம் இப்னுல் கையிம்

மறுமையில் அதிகமாக விசாரிக்கப்படுபவர்கள் யாவர்?

மறுமையில் அதிகமாக விசாரிக்கப்படுபவர்கள் சுகதேகியாக இருந்தவர்களும் ஓய்வாக இருந்தவர்களுமாவார்.

-    இமாம் முஆவியா இப்னு குர்ரா

நீங்கள் எப்படி இமாம் ஜமாஆத்துடன் தொழுதுவருகிறீர்கள்?!

ஐம்பது வருடங்களாக எனக்கு முதல் தக்பீர் தவறிவிடவில்லை.

-    இமாம் ஸஈத் இப்னுல் முஸய்யப்

எது உண்மையான ஆச்சரியம்?!

நாசமுற்றவன் எப்படி நாசமுற்றான் என்பதுவல்ல ஆச்சரியம்! தப்பித்துக் கொண்டவன் எப்படித் தப்பித்துக் கொண்டான் என்பதுவே அச்சரியம்!

-    இமாம் இப்னு ரஜப்

நரக நெருப்பை எமது உடல் எப்படித் தாங்கும்?!

எனது உடல் குளிரைத் தாங்காது மற்றும் கடும் சூட்டையும் தாங்காது எவ்வாறு மனிதர்களும் கற்களும் விறகாகும் நெருப்பைத் தாங்கும்?!

-    இமாம் ஷாபி

தொகுப்பு: அபூஉபைதில்லாஹ் சில்மி இப்னு ஷம்சிலாப்தீன்