வித்ர் தொழுகையின் சட்டம் என்ன? அது ரமழான் மாதத்திற்கு மாத்திரம் குறிப்பானதா?

بسم الله الرحمن الرحيم

வித்ர் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னாவாகும். எந்த அளவுக்கென்றால், இமாம் அஹ்மத், மற்றும் அவர் போன்ற அறிஞர்கள் யார் வித்ர் தொழுகையைவிட்டாரோ அவர் தீயமனிதராவார், அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளக்கூடாது  எனக் கூறியுள்ளார்கள்.

எனவே, வித்ர் தொழுகை வலியுறுத்தப்பட்ட ஒரு நபிவழியாகும். ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் அதைவிடுவது கூடாது.

வித்ர் என்பது இரவுத் தொழுகையை ஒரு ரக்அத்தில் முடிப்பதேயாகும். சில பொதுமக்கள் கருதுவதைப்போல் வித்ர் என்றால் குனூத் அல்ல. குனூத் என்பது ஒரு விடயம், வித்ர் என்பது ஒரு விடயம். ஆகவே, வித்ர் என்பது இரவுத் தொழுகையை ஒரு ரக்அத் அல்லது தொடராக அமையக்கூடிய மூன்று ரக்அத்களைக்கொண்டு முடிக்கப்படுவதாகும். எது எவ்வாறு இருப்பினும் வித்ர் என்பது ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் வலியுறுத்தப்பட்ட ஒரு நபிவழியாகும். ஒரு முஸ்லிமுக்கு அதை விடுவது அவசியமாகாது.

-     அஷ்ஷெய்க் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்

-     தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்