நவீன ஜஹ்மிய்யாக்களுக்கான பகிரங்க மறுப்பு !!!

بسم الله الرحمن الرحيم

05.01.2014 அன்று பலஹத்துறை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற ஏகத்துவ ஷரீஆ மாநாட்டில் கம்பஹா மாவட்ட ஜம்இய்யதுல் உலமா செயலாளரும் அவருடன் வந்த குழுவினரும் நிகழ்த்திய உரைகளில் மீண்டும் ஜஹ்மிய்யாக் கொள்கையை நிலைநாட்டும் முகமாக...

அல்லாஹ்வின் பண்புகளை மறுத்து மாற்று விளக்கம் கூறி...

அவற்றை உறுதி செய்யும் அறிஞர்களை வழிகேடர்களாக சித்தரித்துக் காட்டி...

அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்பதை மறுத்து அவ்வாறு கூறக்கூடியவர்களை காபீர்களாக்கி...

தலைசிறந்த அறிஞர்கள் மீது அவதூறு கூறி...

தமது கொள்கையை நிலைநாட்டும் முகமாக அல்குர்ஆனுக்கு போலி வியாக்கியாணம் செய்து...

நபியவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை தமது கூற்றுக்கு ஆதாரமாக எடுத்துக்கூறி...

தமது கொள்கையே ஸலபுஸ்ஸாலிஹீன்களின் கொள்கையாகும் என்று  பொய்யுரைத்து....

தம்மைச் சார்ந்தவர்களை மாத்திரம் முஸ்லிம்களாக இனம்காட்டி அனைத்துலக அஹ்லுஸ்ஸுன்னாக்களையும் காபிர்களாக்கி...

தமது வழிகெட்ட கொள்கையை அகில இலங்கை மட்டத்தில் எடுத்துச் செல்வதற்கு அங்குரார்ப்பண கூட்டமாக ஏற்பாடு செய்து நடாத்தி முடித்துள்ளார்கள்.

இத்தகைய நவீன ஜஹ்மிய்யாச் சிந்தனை வாதிகளுக்கு 12.01.2014 அன்று ஞாயிற்றுக் கிழமை இஷாத் தொழுகையைத் தொடர்ந்து மத்ரஸா அல்கமா அறபுக்கல்லூரி அதிபரான ஸில்மி இப்னு ஷம்ஷிலாப்தீன் அவர்களால் அத்தார் அஸ்ஸலபிய்யாப் பள்ளிவாசலில் மறுப்பு ஒன்று தயார் செய்யப்பட்டு ஒப்புவைக்கப்பட்டது. அதன் ஒலிப்புதிவுச் சுட்டியை கீழே இடம்பெறச் செய்துள்ளோம். அதனை சொடுக்கி கேட்டுப் பயன்பெறலாம். மேலும், விரும்பியவர்களுக்கு பதிவிறக்கம் செய்யக்கூடிய ஏற்பாடும் அதனுடன் செய்து வைக்கப்பட்டுள்ளது. நீங்களும் கேட்டுப் பயன்பெற்று ஏனைய சகேதரர்களுக்கும் பயம்பெறச் செய்யுங்கள்.

[audio: http://www.salafvoice.org/audio_db/17156418.mp3] Click Here to Download