நவீன ஜஹ்மிய்யாக்களுக்கான பகிரங்க மறுப்பு!!!

بسم الله الرحمن الرحيم

05.01.2014 அன்று பலகத்துறை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடந்தேறியது ஏகத்துவ ஷரீஆ மாநாடா? அல்லது இலங்கை முஸ்லிம்களின் உள்ளங்களில் குப்ரை விதைப்பதற்கான அங்குரார்ப்பண மாநாடா?

இலங்கை முஸ்லிம்களின் உள்ளங்களில் குப்ரையும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் உண்டுபன்னுவதற்காக அரங்கேற்றப்பட்ட முதல் அங்குரார்ப்பண மாநாடு 05.010.2014 அன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து இரவு 10:00 மணி வரை பலகத்துறை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்று சொல்பவரும் அல்லாஹ்வுக்குரிய பண்புகளை உறுதிப்படுத்தியவரும் காபிராகிவிடுவார் என்ற கருத்தை வலுப்படுத்துவதற்காக கம்பஹா மாவட்ட ஜம்இய்யதுல் உலமா செயலாளர் மௌலவி நூஸ்ரானும் அவருடன் வந்தவர்களும் பகீரதப் பிரயத்தனம் எடுத்தார்கள்.

இத்தகைய நச்சுக்கருத்துக்களை சமுகத்திற்கு மத்தியில் நிலைநாட்ட முன்வந்த இக்கூட்டத்தினர் தாம் கூறும் கூற்றுக்கள் ஸலபுஸ் ஸாலிஹீன்களின் கூற்றாகும் என்று சாயம் பூசி அவர்கள் கொண்டு வந்த கொள்கைக்கு மாற்றமாக உள்ள ஒட்டு மொத்த ஸலபுஸ் ஸாலிஹீன்களையும் காபீர்கள் என்ற நிலைக்குத் தள்ளிவிட்டார்கள். அவர்களுள் இந்த உம்மத்தில் மிகச் சிறந்த மனிதனாகத் திகழும் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் உள்ளடங்குவார்கள்.

உண்மையில் இத்தகையவர்களுக்கு இடம் கொடுத்தது பலகத்துறை வாழ் ஸலபித்துவ சிந்தனையில் உள்ளவர்களை எதிர்க்க தமது ஈமானையே பரிகொடுத்த பலகத்துறை பள்ளிவாசல் நிர்வாகமாகும். இக்கருப்பொருளை நிலைநாட்டும் தோரணையிலே அவர்கள் மக்களை குறித்த மாநாட்டிற்கு ஒன்று சேர்த்தும் உள்ளார்கள் என்பது களநிலவரம் எமக்கு உணர்த்தும் உண்மையாகும்.

மேலும், இவர்கள் இஸ்லாமிய உம்மத்தில் தோன்றிய வழிகெட்ட கூட்டத்தினரான ஜஹ்மிய்யாக்கள், முஃதஸிலாக்கள், ஹுலூலிய்யாக்கள் போன்றோரின் வாரிஸ்களாகத் திகழுகிறார்கள் என்பதே வரலாறு எமக்குணர்த்தும் உண்மையாகும்.

மற்றொரு சந்தேகமும் எழுகின்றது அதாவது, இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய வழி கொட்ட பிரிவினரான ஷிய்யாக்களின் அடிவருடிகளோ என்று சந்தேகிக்க வைக்கின்றது. ஏனெனில், ஸகாபாக்களைக் காபீர்கள் என்று சொல்லக்கூடிய ஷீஆக்களைப் போன்று இவர்கள் மறைமுகமாக பிழையான ஒரு கோட்பாட்டை முன்வைத்து அக்கோட்பாட்டிற்கு மாற்றமாகவுள்ள ஸகாபாக்களை காபீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். ஆயினும், இதனை பகிரங்கமாக வெளிப்படுத்தினால் தமக்கு ஒரு களம் கிடைக்காது என்பதற்காகத் தமது உரைகளின் துவக்கத்தில் ஸகாபாக்களை ஆதரிப்பவர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு பிறகு தமது நச்சுக் கருத்துக்களின் மூலம் ஸகாபாக்களை காபீர்கள் என்று சொல்ல வருகிறார்கள்.

இன்னும், இவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உருப்பினர்களாகத் தங்களை இனங்காட்டிக் கொண்டு குறித்த சபையின் தலைவர்களின் கொள்கைக்கு மாற்றமான கொள்கையைப் பரப்பி வருகின்றார்கள். இப்படியிருக்க ஏன் ஜம்இய்யதுல் உலமா இவர்கள் விடயத்தில் இன்னும் மௌனம் சாதிக்கின்றது ?!!!

இலங்கை வாழ் முஸ்லிம்களே! எச்சரிக்கை! எச்சரிக்கை! உங்கள் பள்ளிகளின் மிம்பர்களையும் அங்கு நடாத்தப்படும் பயான் நிகழ்ச்சிகளையும் நுஸ்ரான் குழுவின் பகிரங்க குப்ர் சிந்தனைகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இவர்களுக்கான பகிரங்க மறுப்புரை - இன்ஷா அல்லாஹ் 12.01.2014 ஞாயிற்றுக்கிழமை இஷாத் தொழுகைகையைத் தொடர்ந்து (இரவு 7.50 மணியளவில்)

மறுப்புரை: அபூ உபைதில்லாஹ் சில்மி இப்னு ஷம்சுலாப்தீன்

இடம்: மஸ்ஜித் அத்தார் அஸ்ஸலபிய்யா

இன்ஷா அல்லாஹ் எமது இணையதளத்தில் நேரடியாக அஞ்சல் செய்யப்படும்.