நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை

بسم الله الرحمن الرحيم

இந்நூல் இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்களை இனம்காட்டும் நூலாகும். உண்மையில் இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்கள் பல உள்ளன. அவற்றிலிருந்து பிரதானமான பத்து காரியங்களை முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்நூலில் பட்டியல்படுத்தியுள்ளார்கள். பொதுவாக,இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்களை அறிந்து கொள்வது முஸ்லிமான அனைவர் மீதும் கடமையாகும். இக்கடமை உதாசீனம் செய்யப்படும் போது எம்மை அறியாமலே இறைநிராகரிப்பில் வாழக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. இத்தகைய நிலை ஏற்படுவதைவிட்டும் அல்லாஹ் எம்மைப் பாதுகாக்க வேண்டும். எனவே, அன்பார்ந்த இணையதள நேயர்களே! மேற்குறித்த நூலின் விளக்கவுரையை நல்லமுறையில் செவியுற்று இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்கள் விடயத்தில் எச்சரிக்கையாக இருப்பதற்கு எமக்கும் உங்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!

மேற்குறித்த நூலுக்கான விளக்கவுரை வகுப்புக்கள் நீர்கொழும்புப் பிரதேசத்தில் பலகத்துரை எனும் கிரமாத்தில் அமைந்துள்ள அத்தார் அஸ்ஸலபிய்யா பள்ளிவாசலில் திங்கள் முதல் வியாழன் வரையான நாட்களில் சுபஹுத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வகுப்பும் நிறைவுறும் போது இன்ஷா அல்லாஹ் அதனை எமது இணையதளத்தில் பதிவு செய்ய உத்தேசித்துள்ளோம். நீங்களும் அதனைச் செவிமடுத்து பிறருக்கும் செவிமடுக்கச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.