வைபவங்களின் போது கை தட்டுவதின் சட்டம் என்ன?

بسم الله الرحمن الرحيم

வைபவங்களில் கை தட்டுவது ஜாஹிலிய்யச் செயற்பாடுகளைச் சார்ந்ததாகும். அதிலே வெறுப்பு இருக்கின்றது. வெளிப்படையாக அது ஹராம் என்பது ஆதாரபூர்வமான ஒன்றாகும். ஏனெனில், முஸ்லிம்கள் காபிர்களுக்கு ஒப்பாகுவதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள்.

அல்லாஹ் மக்காவாசிகளான காபிர்களை வர்ணித்துக் கூறும் போது: கஃபாவாகிய அவ்வீட்டில் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே அவர்களது வணக்கமாக இருந்தது. – 08:35

உலமாக்கள் அல்முகாஃ - المكاء - என்றால் விசில் அடிப்பது என்றும் அத்தஸ்தியா - التصدية - என்றால் கை தட்டுவது என்றும் கூறுகின்றார்கள். ஒரு முஃமின் தன்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கும் அல்லது வெறுப்பிற்குள்ளாக்கும் ஒன்றைக் கண்டால் அவன் சுப்ஹானல்லாஹ் அல்லது அல்லாஹூ அக்பர் என்று கூறுவதுதான் ஸூன்னாவாகும். இதனை ஸஹீஹான ஏறாளமான நபிமொழிகள் அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

பெண்களுக்கு தொழுகையில் ஏதாவது தவறிவிட்டால் அல்லது ஆண்களுடன் தொழும் போது இமாம் எதனையாவது மறந்துவிட்டால் பெண்களுக்கு ஷரீஅத்தாக்கப்பட்ட ஒன்றுதான் கை தட்டலாகும். இவ்வழிமுறையே அவர்களுக்கு மறந்ததை விளிப்பாக்குவதற்காக ஷரீஅத்தாக்கப்பட்டதாகும்.

ஆனால், ஆண்கள் அதனை விளிப்பாக்குவதற்கு தஸ்பீஹ் கூற வேண்டும் என்று நபியவர்களின் செய்திகள் அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

நிச்சயமாக! கை தட்டுவது காபிர்களுக்கு ஒப்பாகுவதும் பெண்களுக்கு ஒப்பாகுவதுமாகும். இவ்விரண்டுமே தடுக்கப்பட்டவைகளாகும். அல்லாஹ் மிகஅறிந்தவன்.

– அஷ்ஷேக் பின் பாஸ் ரஹிமஹூல்லாஹ்

தமிழாக்கம்: ABU MUAAD JAMALUD DEEN IBN FAROOK