கேள்வி: ஹழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு நபியா? அல்லது ஒரு நல்லடியாரா?

بسم الله الرحمن الرحيم

விடை: ஹழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு நபி என்பதே சரியான கருத்தாகும். ஏனென்றால், அல்லாஹுத்தஆலா சூரதுல் கஹ்பில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சம்பவத்துடன் அவருடைய சம்பத்தையும் இணைத்துக் கூறியுள்ளான்.

கடலில் பணிபுரியும் ஏழைகளுக்கு இருந்த கப்பலை அவர்கள் துளையிட்டார்கள், எப்பாவத்தையும் கையாளாத ஒரு சிறுவனைக் கொலை செய்தார்கள், அவர்கள் இருவருக்கும் விருந்தளிக்க மறுத்த ஓர் ஊரில் எவ்விதக் கூலியுமின்றி இரு அநாதைகளுடைய ஒரு சுவரை நிலைநிறுத்தினார்கள், இவைகள் அனைத்தையும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விமர்சித்தார்கள், பின்பு கடைசியில் அவர்களுக்கு ஹழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது செயல்களின் காரணங்களைத் தெளிவுபடுத்தினார்கள். மற்றும், அவை அனைத்தும் அல்லாஹ்வின் வஹியின்படியே அவர்களிடமிருந்து நடைபெற்றதாகவும் அவற்றின் ஈற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே அல்லாஹ் அவரைக் குறித்துக் கூறும் வசனமாகும்: இதனை நான் என் இஷ்டப்படி செய்துவிடவில்லை. இது தான் எதன் மீது பொருமையாகயிருக்க நீர் சக்தி பெறவில்லையோ அதனுடைய விளக்கமாகும் என்று கூறினார். அல்கஹ்ப்: 82

சஊதி அரேபியா பத்வாக் குழு இல: 5513

தமிழாக்கம்: அஸ்கி இப்னு ஷம்ஷிலாப்தீன்