பிக்ஹின் அடிப்படைகள் – 5

أذكار الركوع، والسجود: عن حذيفة –رضي الله عنه- أن النبي –صلى الله عليه وعلى آله وسلم- كان يقول في ركوعه: ((سبحان ربي العظيم))، وفي سجوده ((سبحان ربي الأعلى)). أخرجه مسلم رقم (772)، وأدنى التسبيح في الركوع والسجود ثلاث تسبيحات، ثبت ذلك عن النبي -صلى الله عليه وعلى آله وسلم- بمجموع طرقه. وليكثر في ركوعه من الذكر، ويكثر في سجوده بعد التسبيح المذكور من الدعاء، والدليل حديث ابن عباس –رضي الله عنه- أن النبي –صلى الله عليه وعلى آله وسلم- قال: ((فأما الركوع فعظموا فيه الرب عز وجل، وأما السجود فاجتهدوا في الدعاء، فقمن أن يستجاب لكم)). أخرجه مسلم.

77. ருகூஉ மற்றும் சுஜூதினுடைய துஆக்கள்: ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் இடம் பெற்றுள்ளதாவது, நிச்சயமாக நபியவர்கள் தனது ருகூஉவிலே سبحان ربي العظيم   என்றும் தனது சுஜூதிலே  سبحان ربي الأعلى  என்றும் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம்: 772) ருகூஉ மற்றும் சுஜூது ஆகியவற்றில் மிகக் குறைந்த தஸ்பீஹின் அளவு மூன்று தஸ்பீஹ்கள் ஆகும். இச்செய்தி நபியவர்களைத் தொட்டும் (பல) அறிவிப்பு வரிசைகளின் கூட்டாக உறுதியாகியுள்ளது. மேலும், தனது ருகூஉவிலே திக்ரை அதிகரித்துக் கொள்ளட்டும், மற்றும் தனது சுஜூதிலும் குறிப்பிடப்பட்ட தஸ்பீஹிற்குப் பிறகு துஆக்களை அதிகரித்துக் கொள்ளட்டும். அதற்கான சான்றாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் செய்தியைக் குறிப்பிடலாம். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: ருகூஉவைப் பொருத்தளவில் அதனில் இரட்சகனை மேன்மைப்படுத்துங்கள். மேலும், சுஜூதைப் பொருத்தளவில் துஆ விடயத்தில் முயற்சி செய்யுங்கள். அதுவே உங்களுக்கு பதிலளிக்கப்படுவதற்கு (ஏதுவானதாக) இருக்கும். (முஸ்லிம்)

 

ما يقول الإمام والمنفرد بعد الرفع من الركوع ، عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقوم، ثم يكبر حين يركع ، ثم يقول : )سمع الله لمن حمده( حين يرفع صلبه من الركوع ، ثم يقول وهو قائم : ( ربنا لك الحمد ) ... الحديث . متفق عليه وفيه الأمر بتكبيرات الانتقال .

 

78. ருகூஉவில் இருந்து எழுந்ததன் பின்னர் இமாம் மற்றும் தனியாகத் தொழுபவர் கூறவேண்டியது: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் தொழுகைக்காக வேண்டி எழுந்து நின்றால் எழும்பும் போது தக்பீர் சொல்லுவார்கள், பிறகு ருகூஉ செய்யும் போது தக்பீர் சொல்லுவார்கள், பிறகு தனது முள்ளந்தண்டை ருகூஉவில் இருந்து உயர்த்தும் போது سمع الله لمن حمده என்று கூறுவார்கள், பிறகு அவர்கள் நின்ற நிலையில்  ربنا لك الحمد என்று கூறுவார்கள்.' (புகாரி முஸ்லிம்) இச்செய்தியில் ஒரு நிலையில் இருந்து மற்றுறொரு நிலைக்கு நகருவதற்கான தக்பீர்கள் குறித்து ஏவப்பட்டுள்ளது.

التشهد في الصلاة: وأصح صيغ التشهد حديث ابن مسعود -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: ((فإذا جلس أحدكم في الصلاة فليقل: التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله)). متفق عليه.

79. தொழுகையில் தஷஹ்ஹுத்: தஷஹ்ஹுதின் மிகச் சரியான வசன அமைப்பு இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் இடம்பெறக்கூடியதாகும். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகையில் உட்கார்ந்தால், அவர்

التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله

என்று கூறட்டும். (புகாரி முஸ்லிம்)

பொருள்: காணிக்கைகள்,  புகழ்ச்சியுடன் கலந்த பிரார்த்தனைகள், சிறப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியதாக இருக்கின்றன. மற்றும், நபியே! உங்கள் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் அபிவிருத்தியும் உண்டாவதாக! சாந்தியானது எங்கள் மீதும் அல்லாஹ்வின் ஸாலிஹான அடியார்கள் மீதும் உண்டாவதாக! நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன். மேலும், நிச்சயமாக முஹம்மத் நபியவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்.

صفة الجلوس في الصلاة والإشارة في التشهد: كما في حديث عبدالله بن الزبير -رضي الله عنهما- قال: كان رسول الله -صلى الله عليه وعلى آله وسلم- إذا قعد في الصلاة وضع يده اليمنى على فخذه اليمنى، ويده اليسرى على فخذه اليسرى، وأشار بأصبعه السبابة. أخرجه مسلم.

 

80. தொழுகையில் உட்காரும் விதமும் தஷஹ்ஹுதில் சுட்டிக்காட்டுதலும்: அப்துல்லாஹ் இப்னு சுபைர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸில் இடம் பெறுவதாவது நபியவர்கள் தொழுகைக்காக உட்கார்ந்தால் தனது வலது கையை தனது வலது தொடையின் மீது வைப்பார்கள். மேலும், தனது இடது கையை தனது இடது தொடையின் மீது வைப்பார்கள். இன்னும், தனது சுட்டு விரலைக் கொண்டு சுட்டிக்காட்டுவார்கள். (முஸ்லிம்)

الصلاة على النبي -صلى الله عليه وعلى آله وسلم- بعد التشهد: والدليل حديث فضالة بن عبيد -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: ((إذا صلى أحدكم فليبدأ بتحميد ربه سبحانه وتعالى، والثناء عليه، ثم يصلي على النبي -صلى الله عليه وعلى آله وسلم-، ثم يدعوا بعد بما شاء)). رواه أبوداود، وهو حديث صحيح.

ومن أحسن صيغ الصلاة على النبي -صلى الله عليه وعلى آله وسلم- ما جاء في حديث أبي مسعود البدري -رضي الله عنه- أن بشير بن سعد قال للنبي -صلى الله عليه وعلى آله وسلم-: أمرنا الله أن نصلي عليك يارسول الله، فكيف نصلي عليك؟ قال: ((قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم، وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد)). رواه مسلم.

 

81. தஷஹ்ஹுதிற்குப் பிறகு நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லல்: இதற்கான ஆதாரம் பலாலா இப்னு உபைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸாகும். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுதால், தூய்மையான மேன்மைக்குரிய தனது இரட்சகனைப் புகழ்வது கொண்டும் போற்றுவது கொண்டும் ஆரம்பிக்கட்டும். பிறகு நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லட்டும். அதனை அடுத்து தான் நாடியதைக் கொண்டு அழைக்கட்டும். (அபூதாவுத்) இது ஸஹீஹ் எனும் தரத்தையுடைய ஹதீஸாகும்.

நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதற்கான அமைப்புக்களில் மிகச் சிறந்த அமைப்பு அபூ மஸ்ஊத் அல்பத்ரிய்யி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் குறிப்பிடப்பட்டதாகும். பஷீர் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு அல்லாஹ் உங்கள் மீது ஸலவாத்துச் சொல்ல ஏவியுள்ளான் எனவே, எப்படி நாங்கள் உங்கள் மீது ஸலவாத்துச் சொல்வது? என வினவினார்கள். அதற்கு நபியவர்கள்

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم، وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد

எனக் கூறுமாறு பணித்தார்கள். (முஸ்லிம்)

பொருள்: இறைவா! இப்றாஹிமின் குடும்பத்தினர் மீது ஸலவாத்துச் சொன்னதைப் போன்று முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தினர் மீதும் ஸலவாத்துச் சொல்வாயாக! மேலும், உலகத்தாரில் இப்றாஹிமின் குடும்பத்தினர் மீது நீ அருள் புரிந்ததைப் போன்று முஹம்மதின் மீதும் முஹம்மதுடைய குடும்பத்தினர் மீதும் அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும் கீர்த்தியுடையவனாகவும் (இருக்கின்றாய்).

الدعاء قبل التسليم، ثم الذكر بعده ، عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وعلى آله وسلم-: ((إذا فرغ أحدكم من التشهد الآخر فليتعوذ بالله من أربع: من عذاب جهنم، ومن عذاب القبر، ومن فتنة المحيا والممات، ومن شر المسيح الدجال)). رواه مسلم رقم (588). وعن معاذ بن جبل رضي الله عنه ، أن النبي صلى الله عليه وسلم أخذ بيده وقال : يا معاذ والله إني لأحبك ، أوصيك يا معاذ لا تدعن في دبر كل صلاة تقول : ( اللهم أعني على ذكرك ، وشكرك ، وحسن عبادتك ) وهو حديث صحيح .

82. ஸலாம் கொடுப்பதற்கு முன்பாக துஆச் செய்தல். பிறகு அதனை அடுத்து திக்ரில் ஈடுபடுதல். நபியவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் இறுதி தஷஹ்ஹுதில் இருந்து நிறைவு பெற்றால், அவர் அல்லாஹ்விடத்தில் நரக வேதனை, கப்ருடைய வேதனை, உயிர்வாழ்தல், மரணித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய சோதனை, மற்றும் மஸீஹுத் தஜ்ஜாலுடைய தீங்கு ஆகிய நான்கு விடயங்களைவிட்டும் பாதுகாப்புத் தேடிக் கொள்ளட்டும். (முஸ்லிம்: 588) மேலும், முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் இடம்பெற்றுள்ளதாவது, நிச்சயமாக நபியவர்கள் அவரது கையைப் பிடித்து பின்வருமாறு கூறினார்கள்: முஆதே! அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நான் உன்னை விரும்புகின்றேன். முஆதே! ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும்

اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك

என்ற பிரார்த்தனையை விட்டுவிடாமல் இருக்க உன்னை நான் வஸிய்யத் செய்கின்றேன் எனப் பணித்தார்கள். இதுவும் ஸஹீஹான ஒரு ஹதீஸ் ஆகும்.

பொருள்: இறைவா! உன்னை ஞாபகப்படுத்துவதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உனக்குரிய வணக்கவழிபாட்டைச் சரிவரச் செய்வதற்கும் உதவி புரிவாயாக!

من أذكار النوم والاستيقاظ: عن حذيفة -رضي الله عنه- قال: كان رسول الله -صلى الله عليه وعلى آله وسلم- إذا أراد أن ينام قال: ((باسمك اللهم أموت وأحيا)) وإذا استيقظ من منامه قال: ((الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور)). رواه البخاري.

 

83. தூங்கச் செல்லும் போதும் தூக்கத்தில் இருந்து விழிக்கும் போதும் ஓதப்படும் துஆக்களில் நின்றும் உள்ளவை: ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் தூங்கச் செல்ல நாடினால்,

باسمك اللهم أموت وأحيا

என்று கூறுவார்கள்.

பொருள்: இறைவா! உன்னுடைய பெயரைக்கொண்டு நான் மரணிக்கின்றேன் மேலும், உயிர்த் தொழுகின்றேன்.

இன்னும், தனது தூக்கத்தில் இருந்து விழிக்கும் போது,

الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور

 என்று கூறுவார்கள். (புகாரி)

பொருள்: எங்களை மரணிக்கச் செய்ததின் பின் மீண்டும் உயிர்ப்பித்தவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும். மேலும், அவனிடமே மீளுதல் இருக்கின்றது.

التسمية على الطعام ، والدليل حديث عمر بن أبي سلمة أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال له: ((يا غلام سم الله ، وكل بيمينك ، وكل مما يليك)) فما زالت تلك طعمتي بعد. متفق عليه.

84. உணவு பரிமாறலின் போது பிஸ்மில்லாஹ் சொல்லல்: இதற்கான ஆதாரமாக உமர் இப்னு அபீ ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். நிச்சயமாக நபியவர்கள் அவரை நோக்கி : சிறுவனே! உணவு உண்ணும் போது பிஸ்மில்லாஹ் என்று கூறு, மேலும், உனது வலது கரத்தினால் சாப்பிடு, இன்னும், உனக்கு முன்னால் இருப்தையே சாப்பிடு. (இச்சம்பவத்திற்குப்) பிறகு இவ்வழிமுறை என்னுடைய வாழ்வில் நீங்காமல் இருந்து கொண்டே இருக்கின்றது. (புகாரி முஸ்லிம்)

أذى الجيران وغيرهم من المسلمين حرام ، والدليل حديث ابن عمرو - رضي الله عنهما- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: ((المسلم من سلم المسلمون من لسانه ويده)). متفق عليه.

85. முஸ்லிம்களில் உள்ள அண்டை வீட்டார் மற்றும் ஏனையோருக்கு அநியாயம் செய்வது ஹராமானதாகும். இதற்கான ஆதாரமாக இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: தனது நாவினாலும் கையினாலும் பிற முஸ்லிம்களுக்குத் தீங்கு செய்யாதவனே உண்மையான முஸ்லிமாவான். (புகாரி முஸ்லிம்)

إذا أردت أن تدخل بيتا فاستأذن وسلم قبل دخولك ، والدليل قول الله تعالى: ﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَدْخُلُوا بُيُوتاً غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا﴾ النور:27

وعن رجل من أصحاب النبي -صلى الله عليه وعلى آله وسلم- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال لخادمه: ((اخرج إلى هذا وعلمه الاستئذان، فقل له: قل: السلام عليكم، أأدخل)).

وعن أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: ((... أفشوا السلام بينكم)). أخرجه مسلم.

 

86.  நீர் ஒரு வீட்டில் பிரவேசிக்க நாடினால், அதனுள் பிரவேசிக்க முன்பாக வீட்டில் உள்ளவர்களிடத்தில் அனுமதி கேள்! மேலும், அவர்களுக்கு ஸலாம் கூறு! இதற்கான சான்றாகப் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடலாம், நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகளில் அல்லாத வேறெந்த வீடுகளிலும் நீங்கள் அனுமதி கோராமலும், அதில் உள்ளோருக்கு ஸலாம் கூறாமலும் நுழைய வேண்டாம். (அந்நூர்: 27)

மேலும், நபியவர்களின் தோழர்களில் ஒருவரைத் தொட்டும் இடம்பெறும் ஒரு செய்தியில் நிச்சயமாக நபியவர்கள் தனது பணியாளனை நோக்கி, இந்நாரிடத்தில் வெளிக்கிளம்பிச் செல், மேலும், அவருக்கு அனுமதி கோட்பதைப் பற்றி கற்றுக் கொடு, (அப்படிக் கற்றுக் கொடுக்கையில் வீடுகளுக்குள் பிரவேசிக்கும் போது) அஸ்ஸலாமு அழைக்கும் என்று சொல்லுமாறும், நான் பிரவேசிக்கவா? என வினவுமாறும் கூறு.

இன்னும், நபியவர்கள் கூறியாதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:  .... உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புங்கள். (முஸ்லிம்)

عليك بالصدق فإنه يهدي إلى الجنة، والدليل حديث ابن مسعود -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: ((إن الصدق يهدي إلى البر، وإن البر يهدي إلى الجنة، وإن الكذب يهدي إلى الفجور، وإن الفجور يهدي إلى النار)). متفق عليه.

87. உண்மையைப் பற்றிப்பிடித்துக் கொள்! நிச்சயமாக அது சுவனத்தின் பால் வழிவகுக்கும். அதற்கான ஆதாரமாக இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக உண்மையானது நன்மையின் பால் வழிகாட்டும் மேலும், நிச்சயமாக நன்மையானது சுவனத்தின் பால் வழிகாட்டும், இன்னும் நிச்சயமாக பொய்யானது பாவங்களின் பால் வழிகாட்டும் மற்றும் நிச்சயமாக பாவங்களானது நரகத்தின் பால் வழிகாட்டும்.' (புகாரி முஸ்லிம்)

عليك ببر الوالدين، فقد أمر الله عز وجل بذلك، فقال: ﴿وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَاناً﴾ الإسراء:23.

88. பெற்றோருக்கு நல்லுபகாரம் செய்வதைப் பற்றிப் பிடித்துக் கொள்! அதனைக் கொண்டே அல்லாஹுத்தஆலா எமக்குப் பணித்துள்ளான். உமது இரட்சகன் தன்னையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யுமாறும் கட்டளையிட்டுள்ளான் என்று கூறியுள்ளான். (அல்இஸ்ரா: 23)

احذر التشبه بالكافرين، فإن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: ((من تشبه بقوم فهو منهم)). أخرجه أحمد وغيره من حديث ابن عمر، والحديث حسن.

89. காபீர்களுக்கு ஒப்பாவதை விட்டும் எச்சரிக்கையாக இருந்து கொள்! நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: யார் பிறிதொரு கூட்டத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கிறாரோ அவர் அவர்களைச் சேர்ந்தவராவார். இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் அஹ்மத் மற்றும் அதுவல்லாத கிரந்தங்களில் இச்செய்தி பதிவாகியுள்ளது. மேலும், இச்செய்தி ஹஸன் எனும் தரத்தை உடையாதாகும்.

عليك بكثرة ذكر الله عزوجل، على ما ثبتت به الأدلة فإن ذلك من أسباب الفلاح في الدنيا والآخرة، قال تعالى: ﴿وَاذْكُرُوا اللَّهَ كَثِيراً لَعَلَّكُمْ تُفْلِحُونَ﴾ الجمعة:10، وعن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وعلى آله وسلم-: ((كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن: سبحان الله وبحمده، سبحان الله العظيم)) متفق عليه.

90. ஆதாரங்களில் உறுதியானதின் அடிப்படையில் இன்மை மறுமையில் வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய அல்லாஹ்வை அதிகமாக ஞாபகப்படுத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்! அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுங்கள். (அல்ஜும்ஆ: 10) மேலும், நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நாவுக்கு இலகுவானதும் தராசியில் கனமானதும் ரஹ்மானுக்கு விருப்பமானதுமான இரு வார்த்தைகள் உள்ளன அவை சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹியும் சுபஹானல்லாஹில் அளீமும் ஆகும். (புகாரி முஸ்லிம்)[1]

كفارة المجلس: عن عائشة -رضي الله عنها- أن رسول الله -صلى الله عليه وعلى آله وسلم- كان إذا جلس مجلسا، أو صلى تكلم بكلمات، فسألته عائشة عن الكلمات، فقال: ((إن تكلم بخير كان طابعا عليهن إلى يوم القيامة، وإن تكلم بغير ذلك كان كفارة: سبحانك وبحمدك لا إله إلا أنت، أستغفر الله وأتوب إليه)). أخرجه أحمد، وهو حديث صحيح.

 

91. சபையில் நிகழும் குற்றங்களுக்கான பரிகாரம்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் இடம்பெற்றுள்ளதாவது, நிச்சயமாக நபியவர்கள் ஒரு சபையில் உட்கார்ந்தால் அல்லது தொழுதால் சில வார்த்தைகளை மொழிவார்கள். அப்போது, ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அவ்வார்த்தைகள் தொடர்பாக வினவினார்கள் அதற்கு நபியவர்கள் நல்லவற்றைப் பேசினால் அவை மறுமை நாள் வரை குறித்த வார்த்தைகளுடன் பின்துயர்ந்து வரும். மேலும், அதுவல்லாதவற்றைப் பேசினால், குறித்த துஆ அவற்றுக்கு பரிகாரமாக அமையும். அவ்வார்த்தைகளாகின்றன

سبحانك وبحمدك لا إله إلا أنت، أستغفر الله وأتوب إليه

 (அஹ்மத்) இச்செய்தி ஸஹீஹான செய்தியாகும்.

பொருள்: (இறைவா) நீ தூய்மையானவன், மேலும் உனது புகழைக் கொண்டு (உன்னைத் துதிக்கின்றேன்.) வணக்கத்திற்குரிய நாயன் உன்னைத்தவிர வேறு யாரும் இல்லை. அல்லாஹ்விடத்தில் நான் பாவமன்னிப்புக் கோருகின்றேன். மேலும், அவனிடத்தில் பாவமீட்சி செய்கின்றேன்.