இரவில் நகம் வெட்டுவது கூடுமா?

بسم الله الرحمن الرحيم

இரவில் நகம் வெட்டுவதில் மார்க்க ரீதியாக எந்த தடையுமில்லை. இரவில் நகம் வெட்டுவது வெறுக்கத்தக்கது என்பதற்கோ அல்லது அது பாவமான காரியம் என்பதற்கோ ஆதாரம் கிடையாது.

அஷ்ஷெய்ஹ் இப்னுபாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:
இரவிலும் பகலிலும் நகம் வெட்டுவது ஆகுமானது. பொதுவாகவே இரவு அல்லது பகலில் நகத்தை வெட்டிக்கொள்வது மார்க்க அடிப்படையில் அனுமதிக்கப்பட்டது.
(அஷ்ஷெய்ஹ் இப்னுபாஸ் (ரஹிமஹுல்லாஹ் அவர்களின் இணையதளத்திலிருந்து...)