பயனுள்ள துணுக்குகள் – 02

بسم الله الرحمن الرحيم

காலத்தை தெரிந்து கடமையாற்றுவோம்!

இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"இன்றைய காலம் மென்மை, பொறுமை, அறிவு ஞானத்துடன் செயற்படல் ஆகியவற்றிக்குரிய காலமாகும். மாறாக, கடும் போக்குக்குரிய காலமன்று.
மனிதர்களில் அதிகமானோர் உலகத்தின் தாக்கத்தினால்
அறியாமை மற்றும் பொடுபோக்கில் இருக்கிறார்கள். எனவே, தாஃவா அவர்களை சென்றடையும் வரை பொறுமையுடனும், மென்மையுடனும் இருப்பது அவசியமாகும். மேலும், மனிதர்கள் அதனை அடைந்து அமல் செய்யும் வரை இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்".

- பதாவா இப்னி பாஸ்

மார்க்க அறிவை பரப்புவது கொண்ட போராட்டம்.

அல்லாமா ஸாலிஹ் ஆலி ஷேய்க் அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ் மற்றும் ஷைத்தானின் விரோதிகளோடு நீ போராடுவதில் மிக மகத்தானது, மார்க்க அறிவை பரப்புவது கொண்ட போராட்டமாகும். எனவே, உன்னால் முடியுமான வகையில் எல்லா இடங்களிலும் அதனை நீ பரப்பி விடு!"

- அல்வஸாயா அல்ஜலிய்யா, பக்கம் : 45

உண்மையான புத்திசாலி...!

அபூ ஹாதிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"புத்தியுள்ளவர் நல்லவர்களின் தோழமையைப் பேணி நடப்பார், கெட்டவர்களின் தோழமையை விலகி நடப்பார்".

- ரவ்ழதுல் உகலா

கெட்டவர்களுடன் நட்பு வைத்தால்...?!

அபூ ஹாதிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"கெட்டவர்களுடனான நட்பு நல்லவர்களைப் பற்றி தீய எண்ணங்களைத் தோற்றுவிக்கும்".

- ரவ்ழதுல் உகலா

பித்னாக்களில் மிகக் கடுமையானது!

பித்னாக்களில் மிகக் கடுமையானது எது? என்று ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் கேட்கப்பட்டது.
அதற்கவர்கள்: உன்னிடத்தில் நல்லது, கெட்டது ஆகியன எடுத்துக் காண்பிக்கப்படுகின்ற வேளையில்
அவை இரண்டிலும் எதனை நீ மேற்கொள்வது என்பதை அறியாதிருப்பாய்! அதுவே பித்னாக்களில் மிகக் கடுமையானது என்றார்கள்".

- ஹில்யதுல் அவ்லியா: 7/271

வெயிலுக்கும் நிழலுக்கும் மத்தியில் உட்காருவது வெறுக்கத்தக்கது.

புரைதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெயிலுக்கும் நிழலுக்கும் மத்தியில் உட்காருவதை தடுத்தார்கள்".

- இப்னுமாஜா

சோதனைகளின் போது ஈமானை பலப்படுத்திக் கொள்வோம்!

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

"எத்துன்பமும் அல்லாஹ்வுடைய அனுமதி கொண்டே தவிர (எவரையும்) பிடிப்பதில்லை. ஆகவே, எவர் அல்லாஹ்வை விசுவாசிக்கிறாரோ, அவருடைய இதயத்திற்கு (அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்டதை பொருந்திக் கொண்டு, பொறுமையுடனிருக்க) அவன் வழி காட்டுகிறான்".

- அத்தகாபுன்: 11

பாவங்களை தவிர்க்க தொழுகையைப் பேணி நடப்போம்!

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஒரு மனிதர் வந்து, நிச்சயமாக ஒருவர் இரவில் நின்று வணங்குகிறார். ஆனால், காலை பொழுதை அடைந்ததும் திருடுகிறார். அவரின் நிலை? என்னவென வினவினார். அதற்கு நபியவர்கள்: நிச்சயமாக அது நீ கூறுவதை விட்டும் அவரை தடுக்கும் என்றார்கள்".

- அஹ்மத்

தீங்குகளை தடுக்க பொடுபோக்காய் இருப்போம்!

அல்அஃமஷ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"சில விடயங்களில் பொடுபோக்குத் தனமாக இருப்பது போன்று நடிப்பது, அதிகமான தீங்குகள் ஏற்படுவதை விட்டும் தடுக்கக் கூடியதாக இருக்கும்".

- ஷுஅபுல் ஈமான்: 6/347

யாரையும் பார்க்க வேண்டாம்! சத்தியத்தை தெளிவுபடுத்துங்கள்!

ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"அசத்தியத்திலிருந்து சத்தியத்தை நாம் தெளிவுபடுத்துவது கடமையாகும். ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும்!
கோபிப்பவர்கள் கோபித்துக் கொள்ளட்டும்!"

- அல்அஜ்விபதுல் முபீதா: 101

மார்க்கம் தழுவிய முயற்சிக்கே இடேற்றமுண்டு!

அஷ்ஷேக் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"முஸ்லிம்கள் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க நாடுகிறார்கள். அவர்களோ, ஸுன்னா அடிப்படையில் ஒரு பள்ளிவாசலை கூட உருவாக்க சக்தி பெற்றாதவர்களாக உள்ளனர்".

- ஸில்ஸிலதுல் ஹுதா வந்நூர்: 1068

ஹராமான சம்பாத்தியத்தின் விளைவுகள்!

அல்லாமா ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"ஹராத்தை உண்ணக்கூடிய இன்னும், ஹராமானவற்றை சம்பாதிக்கக் கூடியவர்களை, வழிப்படுதல் மற்றும், வணக்க வழிபாடுகள் ஆகிய விடயங்களில் மனிதர்களில் மிகத் தூரப்பட்டவர்களாகவும், தொழுகை விடயத்தில் மிக சோம்பேறித்தனம் உடையவர்களாகவும் நீ காண்பாய்!"

- அல்மின்ஹதுர் ரப்பானிய்யா: 135

திருமண வைபவங்களின் போது பெண்களுக்கு மத்தியில் மணமகன் நுழைவது தவிர்க்கப்படவேண்டும்!

அஷ்-ஷைக் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"திருமண வைபவங்களின் போது மணமகன் பெண்களுக்கு மத்தியில் பிரவேசிப்பது வெட்கக் குறைவை எடுத்துக்காட்டுகின்றது. மேலும், இச்செயல் ஒருபோதும் முஸ்லிம்களின் செயலில் இருந்ததில்லை".

- வீடியோ பதிவின் மொழியாக்கம்.

வாகனங்களில் சத்தத்தை உயர்த்தி பாடல்களை போடுவது பாவத்தை பகிரங்கமாகச் செய்வதில் உள்ளடங்கும்!

நபியவர்கள் கூறினார்கள்: "என்னுடைய உம்மத்தினர் அனைவரும் பாவமன்னிப்பு எதிர்பார்க்கப்பட்டக் கூடியவர்கள், பகிரங்கமாகப் பாவங்களை செய்பவர்களைத் தவிர".

- புகாரி

தொழாதவர்களுடன் நட்பு கொள்ள முடியுமா?

இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"அம்மனிதன் தொழாதவராக இருந்தால் அவரை நண்பனாக எடுக்க முடியாது. மாறாக, அவர் தவ்பா செய்யும் வரை அவரை விரோதியாகவும், கோபத்திற்குரியவராகவும் எடுப்பது கடமையாகும்".

- பத்வா தொகுப்பு

மன இச்சையை பின்பற்றுவது அத்துமீறலாகும்!

இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"சத்தியம் வெளிப்பட்டதன் பின்னர் மன இச்சையை பின்பற்றுவது அத்துமீறலாகும்".

- ஜவாவுல்  இஃதிராழாத் அல்மிஸ்ரிய்யா: 89

தர்க்கம் புரியும் கூட்டத்தின் எதார்த்த நிலை!

இமாம் அல்அவ்ஸாஇ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ் ஒரு கூட்டத்தைக் கொண்டு தீங்கை நாடினால், அவர்களுக்கு தர்க்கம் புரிவதை விதியாக்கிவிடுவான். மேலும், அமல் செய்வதை தடுத்துவிடுவான்".

- ஜாமிஉ பயானில் இல்ம்: 908

கடனுக்குப் பணம் பெற்றாவது திருமணம் செய்து கொள்ளுங்கள்!

இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"அடியான் தனக்கு அனுமதிக்கப்படாதவற்றைப் பார்த்து தனது அமல்களை வீண்ணடித்துக் கொள்ளாமல் இருப்பதற்காக, இக்காலகட்டத்தில் கடனுக்குப் பணம் பெற்றாவது திருமணம் செய்து கொள்வது அவனுக்கு கடமையாகும்".

- அஸ்ஸலாத் வஹுக்மு தாரிகிஹா: 1/85

இப்லீஸ் தூங்குவானா?

"இப்லீஸ் தூங்குவானா?" என்று ஒரு மனிதர் ஹஸனுல் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் கேட்டார். அதற்கு இமாமவர்கள்: "அவன் தூங்கினால் நாங்கள் ஆறுதலை பெறுவோம்" என்றார்கள்.

- தல்பீஸு இப்லீஸ்: 36

மனிதர்களை திருப்திப்படுத்த முடியாது!

இமாம் ஷாபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக உனக்கு மனிதர்கள் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. எனவே, உனக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் உள்ளதை சீர் செய்து கொள்!  பிறகு, நீ மனிதர்களை பொருட்படுத்தாதே!"

- தவாலி அத்தஃனீஸ்: 168

விரிப்பை தட்டி, உதறிவிட்டு தூங்கச் செல்லுங்கள்!

நபியவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தூங்குவதற்காக விரிப்பை நாடிச் சென்றால், அவர் தனது வேட்டியின் உட்பாகத்தின் ஓரப்பகுதியை கொண்டு அவ்விரிப்பை தட்டி, உதறிக் கொள்ளட்டும்! ஏனெனில், நிச்சயமாக அவர் அதற்கு பின்புறத்தால் என்ன இருக்கும் என்பதை அறியமாட்டார். பிறகு:

باسمك ربي وضعت جنبي وبك أرفعه فإن أمسكت نفسي فارحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين

என்ற துஆவை ஓதிக் கொள்ளட்டும்".

- புகாரி, முஸ்லிம்

சுன்னாவை பற்றிப் பிடித்துக் கொள்!

அஷ்-ஷைக் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"சுன்னாவை பற்றிப் பிடித்துக் கொள்வது லேசான ஒன்றல்ல! அதிலே சோதனைகள் காணப்படும். சிலர் உன்னை குறை கூறுவார்கள். நோவினையும் செய்வார்கள். மேலும், உன்னை குறைத்து மதிப்பிடுவார்கள்".

- ஷர்ஹ் அத்துர்ரதில் முழிய்யா: 190