நாம் தொழுகையில் விடும் தவறுகள் – 02

بسم الله الرحمن الرحيم

 

மெல்லிய ஆடையுடன் தொழுதல்

 

உடல் வெளியில் தெரிகின்ற அளவுக்கு மெல்லிய ஆடை அணிந்து தொழுவது

கூடாது. (ஷெய்க் மஷ்ஹூர் ஹஸன், அல்கவ்லுல் முபீன்)

 

அல்லாஹ் கூறுகின்றான் : "ஆதமுடைய மக்களே ஒவ்வொரு மஸ்ஜிதிலும் உங்களை

(ஆடைகளால்) அலங்கரித்துக் கொள்ளுங்கள்". (சூரதுல் அஃராப் : 31)

 

தோலின் நிறத்தை மறைக்கின்றவாறு (ஆடை) இருப்பது கடமையாகும். ஆடைக்குப்

பின்னால் தோலின் நிறம் வெள்ளை அல்லது சிவப்பு என்று தெரிகின்ற அளவுக்கு

மெல்லியதாக இருந்தால் அதை அணிந்து தொழுவது கூடாது. ஏனெனில் அதன்

மூலம் மறைத்தல் என்பது நிகழ்வதில்லை. (இமாம் இப்னு குதாமா, அல் முங்னீ)

 

- அபூ உபைதில்லாஹ் ஸில்மி (மதனி)