முஸ்லிமே! சுத்தத்தைப் பேணிக்கொள்!

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"முஸ்லிமே! சுத்தத்தை வெளிரங்கமாகவும் உள்ரங்கமாகவும் பேணுவது உனது கடமையாகும். பேச்சிலும் சொல்லிலும் அல்லாஹ்வுக்காக ஏகத்துவத்தையும் மனத்தூய்மையையும் உள்ரங்கமாகப் பேண வேண்டும். அதேபோன்று, தொடக்குகள், நஜீஸ்கள் ஆகியவற்றிலிருந்து வெளிரங்கமாக சுத்தத்தைப் பேண வேண்டும். ஏனெனில், எங்களுடைய மார்க்கமானது உணர்வு ரீதியான மற்றும் கருத்து ரீதியான அழுக்குகளை விட்டும் சுத்தத்தையும் தூய்மையையும் பேணுகின்ற மார்க்கமாகும். எனவே, முஸ்லிமானவன் சுத்தமானவனாகவும் சுத்தத்தைப் பேணி நடப்பவனாகவும் இருக்கிறான். நபியவர்கள் கூறினார்கள்: சுத்தம் என்பது ஈமானின் பாதியாகும். (முஸ்லிம்)

எனவே, அல்லாஹ்வின் அடியானே! சுத்தத்தின் விடயத்திலும் நஜீஸ்களை விட்டும் தூரமாகும் விடயத்திலும் கவனம் செலுத்துவது உனது கடமையாகும். நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக கப்ருடைய வேதனையின் பெரும் பகுதி மனிதன் சிறுநீர் கழிக்கும் போது தன்னைப் பேணிப்பாதுகாத்துக் கொள்ளாமையினாலாகும்'. (ஹாகிம், தாரகுத்ணி)

எனவே, உன்னில் ஒரு நஜீஸ் பட்டுவிட்டால், நீ சுத்தமாக இருக்கும் பொருட்டு உன்னால் முடியுமான அளவு அதனைச் சுத்தம் செய்ய விரைந்து செல்! அதிலும் குறிப்பாக, நீ தொழுகையை நாடும் சந்தர்ப்பத்தில் இதனைப் பேணிக் கொள்!"

(அல்முளஹ்ஹஸுல் பிக்ஹி)