ஜனாஸா வீட்டில் ஏன் அழுதார்கள்?

بسم الله الرحمن الرحيم

அஃமஷ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:

நாம் ஜனாஸாவில் கலந்து கொள்ளக்கூடியவர்களாக இருந்தோம். அதிகமானோர் அழுது கொண்டிருந்ததால் யாருக்கு ஆறுதல் கூறவேண்டும் என்பதை நாம் அறியாமல் இருந்தோம். (காரணம்) அவர்கள் அவர்களின் நிலைமையை நினைத்தே அழுதார்கள். மரணித்தவருக்காக அவர்களுடைய அழுகை இருக்கவில்லை.

அல்ஆகிபா: 154

குறிப்பு: அஃமஷ் (ரஹிமஹுல்லாஹ்) ஹிஜ்ரி 61ம் ஆண்டு பிறந்த தாபிஈன்களில் ஒருவராவார்