வாகன விபத்தில் இறப்பவர் ஷஹீதாக கருதப்படுவாரா?

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

உயிர்த் தியாகிகள் ஐந்து பேர்கள் ஆவர்:

1. பிளேக் நோயால் இறந்தவர்

2. வயிற்று(ப் போக்கு போன்ற) வியாதிகளால் இறந்தவர்

3. தண்ணீரில் மூழ்கி இறந்தவர்.

4. வீடு, கட்டிடம் ஆகியவை இடிந்து விழும் போது) இடிபாட்டில் சிக்கி இறந்தவர்

5. இறைவழியில் (அறப்போரில் ஈடுபட்டு) இறந்தவர்.

(புஹாரீ: 2829)

அஷ்ஷெய்ஹ் இப்னுபாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:

வாகனங்கள் மோதிக் கொள்வதன் காரணமாக அல்லது தடம்புரள்வதின் காரணமாக இறப்பவர்களும் இவர்களில் உள்ளடங்குவர்.

அவர்கள் இடிபாடுகளில் சிக்கி இறப்பவர்களுக்கு ஒப்பாகின்றனர். இவர்களும் ஷஹீத்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும், வயிற்று வியாதிகளால் இறந்தவர்கள் அல்லது நீரில் மூழ்கி இறந்தவர்களைப் போன்று வாகன விபத்துக்களால் இறந்தவர்களும் குளிப்பாட்டப்பட வேண்டும். மேலும் அவர்களுக்கு ஜனாஸா தொழுவிக்கப்பட வேண்டும்.

 

பதாவா "நூருன் அலத்தர்ப் (3/1426)