சுத்ரா விடயத்தில் அலட்சியம் வேண்டாம்!

بسم الله الرحمن الرحيم

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் கப்ரு வணக்கம்இ கூட்டு துஆ போன்ற மார்க்கத்திற்கு முரணான அம்சங்களைக் கண்ட போது எமது ஏகத்துவ சகோதரர்கள் தியாகத்துடன்
ஏகத்துவத்தையும் சுன்னாவையும் நிலைநாட்டுவதற்காக நபிவழிக்கு முரணான இத்தகைய பள்ளிவாசல்களை விட்டும் விலகி தமக்கென ஒவ்வொரு கிராமங்களிலும் ஏகத்துவ பள்ளிவாசல்களை உருவாக்கிக் கொண்டனர்.

ஆனாலும்இ சுன்னாவை நிலைநாட்ட எழுப்பப்பட்ட இத்தைகய சில பள்ளிவாசல்களில் நபிகளார் வலியுறுத்திக் கூறிய சுத்ரா (தொழும்போது முன்னால் வைக்கும் தடுப்பு) பேணப்படுவதில்லை.

அந்த மக்களுக்கு அதுபற்றி தெரியாமல் இருக்கலாம். எனவே பள்ளி மௌலவிமார்கள் இது விடயத்தில் பொதுமக்களுக்கு தெளிவை வழங்க வேண்டும். சில பள்ளிவாசல்களில் மார்க்கத்தைக் கற்ற சில மௌலவிமார்களும் சுத்ரா இன்றி தொழக்கூடிய நிலையைப் பார்க்கிறோம்.

நபியவர்கள் கூறினார்கள்: சுத்ராவை நோக்கியே அன்றி நீ தொழ வேண்டாம். (இப்னுஹுசைமா)

மேலும் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழும்போது அவர் சுத்ராவை நோக்கித் தொழட்டும். அந்த சுத்ராவுக்கு அவர் நெருங்கியிருக்கட்டும். (அபூதாவூத்)

சுத்ரா பற்றிய தெளிவு சில ஏகத்துவ பள்ளிவாசல்களில் தெளிவுபடுத்தப்பட்ட போதிலும் பல இடங்களில் அது பற்றிய தெளிவு வழங்கப்படுவதில்லை.

எனவேஇ சகோதரர்களே! சுன்னாவை நிலைநாட்ட நாம் உருவாக்கிய இறையில்லங்களில் சுத்ரா விடயத்திலும் கவனம் செலுத்துவோம். இதுபோன்று ஏகத்துவ பள்ளிவாசல்களில் பேணப்படாத சுன்னாக்கள் நிறைய உள்ளன.