நபியவர்களுடன் மறுமையில் இருக்கக் கிடைத்தால் அதுவே பெரும் பாக்கியம்!

அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: "நிச்சமாக ஒரு மனிதர் நபியவர்களிடம் மறுமை பற்றி, அது எப்போது வரும்? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள்: 'நீ அதற்காக எதனைத் தயார் செய்து வைத்துள்ளாய்?’ என வினவ, ‘எந்த ஒன்றும் கிடையாது, நிச்சயமாக நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிப்பதைத் தவிர’ என்றார். அப்போது நபியவர்கள்: ‘நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் மறுமையில் இருப்பாய்’ என்றார்கள்".

அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: "நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் மறுமையில் இருப்பாய் என்று நபியவர்கள் கூறியதையிட்டு நாங்கள் சந்தோசப்பட்டதைப் போன்று வேறு எந்த ஒன்றுக்காகவும் நாங்கள் சந்தோசப்பட்;டதில்லை".

மேலும், அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: "என்னைப் பொருத்தளவில் நான் நபியவர்களையும் அபூபக்ரையும் உமரையும் நேசிக்கிறேன். எனவே, நான் அவர்களை நேசிப்பதன் காரணமாக அவர்களைப் போன்ற அமலைச் செய்யாவிட்டாலும் அவர்களுடன் மறுமையில் இருக்க ஆதரவு வைக்கிறேன்".

(புகாரி: 3688, முஸ்லிம்: 2639)