உங்களை நீங்களே சுயவிசாரணை செய்து கொள்ளுங்கள்!

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "விசுவாசங் கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! ஒவ்வொரு ஆத்மாவும் (மறுமை) நாளுக்காக எதனை முற்படுத்தியிருக்கிறது என்பதைப் பார்க்கட்டும்!” (அல் ஹஷ்ர்: 18)

இமாம் இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மேற்குறித்த வசனத்திற்கு விளக்கமளிக்கையில்: "அதாவது, நீங்கள் விசாரணை செய்யப்படுவதற்கு முன்னதாக உங்களை நீங்களே விசாரணை செய்து கொள்ளுங்கள்! உங்களுடைய மீட்சிக்குரிய நாளுக்காகவும் உங்களுடைய இரட்சகனிடத்தில் உங்களது செயல்கள் வெளிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்திற்காகவும் நீங்கள் எத்தகைய ஸாலிஹான அமல்களை சேகரித்து வைத்துள்ளீர்கள் என்பதையும் எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்! மேலும், அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் உங்களுடைய அனைத்து அமல்களையும் அறிந்தவனாக இருக்கின்றான். மறையக்கூடிய எந்த ஒன்றும் உங்களில் இருந்து அவனை விட்டும் மறைந்து விடாது” என்றார்கள். (தப்ஸீர் இப்னு கஸீர்)