ஹிஸ்னுல் முஃமின் மின் அத்காரி வஅத்இயதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

ஹிஸ்னுல் முஃமின் மின் அத்காரி வஅத்இயதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அபூ அப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் அல்இர்யானி (ஹபிழஹுல்லாஹ்)

தமிழாக்கம்: அபூ ஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்

بسم الله الرحمن الرحيم

முன்னுரை

அதிக கீர்த்தியும் அருள் பொருந்திய சிறப்பும் வாய்ந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும். மேலும், வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாரும் இல்லை என்றும் அவன் தனித்தவன் இணைதுணையற்றவன் என்றும் நான் சாட்சி பகருகின்றேன். இன்னும், நிச்சயமாக முஹம்மத் நபியவர்கள் அவனுடைய அடியாரும் திருத்தூதருமாவார்கள் என்றும் நான் சாட்சி பகருகின்றேன். அடுத்து,

(இறைவனை) ஞாபகித்தல் (அடியார்களுக்கான) பாதுகாப்பரண் என்ற அடிப்படையில் அது எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் பாதுகாக்கும் அரணாக அமைந்துள்ளது. மேலும், உலகத்தாரின் இரட்சகனான அல்லாஹ்வின் பால் நாடிச்செல்பவர்களுக்கான உயரிய படிக்கட்டுக்களாகவும் அமைந்துள்ளது. இன்னும், இறை நேசர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகின்றது. மற்றும் அல்லாஹ்வின் அடியார்களான விசுவாசிகளின் உயிர்நாடியாகவும் நல்லடியார்களின் சபைகளுக்கு அமைதியைத் தேடித்தரவள்ளதாகவும் இருக்கின்றது. (எனவே, இது போன்ற காரணிகளை மையமாக வைத்து) சங்கைமிக்க எங்கள் நபியின் (அன்றாட) திக்ருகளில் இருந்து (என்னால்) முடிந்த சரியான (சிலவற்றைச்) சுருக்கமாகத் தொகுத்துத் தந்துள்ளேன்.

ஒரு நாளின் இரவு பகலில் புரியப்படும் செயல்கள், துஆக்கள் மற்றும் திக்ருகள் குறித்து நன்கறிந்தவர்களிடத்தில் அறியப்பட்ட பல நூட்கள் உள்ளன. எனவே, நான் (எனது இந்த) பிரயோசனம் மிக்க சுருக்க நூலின் மூலம் (நான் மேலே குறிப்பிட்ட விடயங்களின் பால்) ஆசைவைக்கக் கூடியவர்களுக்கு இலகுபடுத்துதலை நாடியுள்ளேன். (அதன் காரணமாகவே திக்ர்) தொடர்பான வார்த்தைகளைக் கொண்டு மாத்திரம் சுருக்கிக் கொண்டு சுருக்கத்தின் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளேன். மேலும், இந்நூல் வணக்கத்தில் ஈடுபாடு உடையவர்களுக்கு ஒரு பிரதான இடமாக விளங்குவதும் (எமது சுருக்கத்திற்கான மற்றொரு காரணமாகும்.)

அத்தோடு (இந்நூல்) திக்ருகள் மற்றும் அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்தல் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைப்பதையும் நேர்வழியை நாடிச் செல்பவர்கள் மீட்சி பெறும் பிரதானமான (அம்சத்தை விளக்கும் திக்ருகளைத்) தெளிவுபடுத்துவதையும் நோக்காகக் கொண்டுள்ளது.

மேலும், இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களை (இந்நூலிற்குத்) தலைப்பிடும் பணியின் போது வார்த்தை அடிப்படையில் பின்துயர்ந்துள்ளேன். மற்றும், 'அல்அத்கார்' எனும் (இமாமவர்களின் நூலை) அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கமைத்துமுள்ளேன். (இமாம் நவவி அவர்களிடத்தில் காணப்பட்ட) பலமான ஒழுங்கமைப்பும் நுணுக்கமான விளக்கமும் தலைப்பிடுவதில் காணப்பட்ட அபார திறமையுமே (இத்தகைய பின்பற்றுதலுக்குக் காரணாகும்.) மேலும், பிரயோசனம் வழங்கும் நோக்கில் அடைப்புக்குறிக்குள் எங்களுடைய ஆசிரியர் 'முக்பில் இப்னு ஹாதி அல்வாதிஇ' ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது நூலான 'அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்' இல் (வழங்கிய) சில தலைப்புக்களையும் (இந்நூலில்) சேர்த்துள்ளேன்.

இன்னும், இச்சுருக்க நூல் சரியான தகவல்களை இனங்காட்டுவதிலும் நுணுக்கமாகத் தலைப்பிடப்பட்டிருப்பதிலும் அழகிய சுருக்க அமைப்பிலும் ஏனைய குறும் நூட்களிலும் பார்க்க உயர்வான இடத்தை வகிக்கின்றது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். மேலும், அல்லாஹ்விடத்தில் இந்நூலைக் கொண்டும் இதன் நூலாசிரியரைக் கொண்டும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பிரயோசனம் அளிப்பதைக் கேட்கின்றேன். எல்லாப் புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK