பிக்ஹின் அடிப்படைகள்

தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும் அடிப்படைகள்

(பிக்ஹின் அடிப்படைகள் - 01)

مبادئ الفقه

عن أبي أمامة الباهلي رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع فقال: ' اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم ' وهو حديث حسن

பிக்ஹின் அடிப்படைகள்

அபூ உமாமா அல்பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ஹஜ்ஜதுல் வதாவின் போது நபியவர்கள் (பின்வருமாறு) உரை நிகழ்த்த நான் (அதனைச்) செவிமடுத்துள்ளேன். 'உங்களது இரட்சகனான அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். உங்களது ஐவேளைத் தொழுகைகளைத் தொழுது கொள்ளுங்கள். உங்களது ரமளான் மாத நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள். உங்களது சொத்துக்களின் ஸகாத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். உங்களது விவகாரம் பொறுப்பளிக்கப்பட்டவருக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள். உங்களது இரட்சகனின் சுவனபதியில் பிரவேசிப்பீர்கள்.' இது ஒரு ஹஸனான ஹதீஸாகும்.

كل عبادة لابد لها من نية، والنية محلها القلب، والدليل حديث عمر بن الخطاب - رضي الله عنه- أن النبي - صلى الله عليه وعلى آله وسلم- قال: ((إنما الأعمال بالنية)) متفق عليه

51. ஒவ்வொரு வணக்கத்திற்கும் நிய்யத் - எண்ணம் - அவசியமாகும். மேலும், அந்நிய்யத்தின் இருப்பிடம் உள்ளமாகும். அதற்கான ஆதாரமாவது உமர் இப்னு அல்ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸாகும். நபியவர்கள் கூறினார்கள். 'நிச்சயமாக செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே உள்ளன.' (புகாரி முஸ்லிம்)

التلفظ بالنية بدعة، والدليل حديث عائشة - رضي الله عنها- أن النبي - صلى الله عليه وعلى آله وسلم- قال: ((من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد)) متفق عليه

52. நிய்யத்தை நாவால் மொழிவது பித்அத் ஆகும். அதற்கான ஆதாரமாவது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸாகும். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: 'யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உண்டாக்குகிறாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும்.' (புகாரி முஸ்லிம்)

فإذا قيل لك: ما هي البدعة؟ فقل: هي ما أحدث بعد موت النبي - صلى الله عليه وعلى آله وسلم- بقصد التعبد، وليس عليها دليل من الكتاب، ولا من السنة

53. பித்அத் என்றால் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், நபியவர்களின் மரணத்திற்குப் பின்னர் வணக்கத்தை நோக்காகக் கொண்டு அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாஹ் ஆகியவற்றில் இருந்து எவ்வித ஆதாரத்தையும் அடிப்படையாகக் கொள்ளாமல் புதிதாக உருவாக்கப்பட்டதே அதுவாகும் என்று கூறு.

خلق الله الماء طهورا يطهر النجاسات والأحداث، والدليل قول الله تعالى ﴿وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُوراً﴾ الفرقان: 48 ، وقوله تعالى ﴿وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ﴾الأنفال: 11

54. அழுக்குகள் மற்றும் தொடக்குகள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பொருட்டு அல்லாஹுத்தஆலா நீரைச் சுத்தமாகப் படைத்துள்ளான். அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'பின்னர் வானத்திலிருந்து தூய்மையான நீரை நாம் இறக்கினோம்.' (அல்புர்கான்: 48) மேலும் கூறுகின்றான்: 'இன்னும் (தண்ணீரின் மூலம்) உங்களைச் சுத்தப்படுத்திடவும், அவன் உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கிவைத்தான்.' (அல்அன்பால்: 11)

ماذا يقول من أراد دخول الخلاء؟

عن أنس بن مالك - رضي الله عنه- قال: كان النبي - صلى الله عليه وعلى آله وسلم- إذا دخل الخلاء قال: ((اللهم إني أعوذ بك من الخبث والخبائث)) متفق عليه

55. மலசல கூடம் நுழைய நாடுகின்றவர் என்ன சொல்ல வேண்டும்? அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நபியவர்கள் மலசல கூடத்தில் நுழைய நாடினால்

اللهم إني أعوذ بك من الخبث والخبائث

என்று கூறுவார்கள். (புகாரி முஸ்லிம்)
பொருள்: 'இறைவா! நிச்சயமாக நான் ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கை விட்டும் உன்னிடத்தில் பாதுகாப்புத் தேடுகின்றேன்.'

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK