தராவீஹ் தொழுகையில் ஒவ்வோர் இரண்டு ரக்அத்களின் ஆரம்பத்திலும் “துஆஉல் இஸ்திப்தாஹ்” ஓதப்பட வேண்டுமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: தராவீஹ் தொழுகையில் ஒவ்வோர் இரண்டு ரக்அத்களின் ஆரம்பத்திலும் "துஆஉல் இஸ்திப்தாஹ்" ஓதப்பட வேண்டுமா?

பதில்: ஆம். பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் தராவீஹ் தொழகையில் ஒவ்வோர் இரண்டு ரக்அத்களின் ஆரம்பத்திலும் மற்றும், அதுவல்லாத ஸுன்னத்தான தொழுகைகளிலும் துஆஉல் இஸ்திப்தாஹை ஓதுவது எமக்கு மார்க்கமாக்கப்பட்டுள்ளது. அந்தவிதத்தில், குறிப்பாக "கியாமுல் லைல்" தொழுகையின் போது ஓதுவதற்கென்று காட்டித்தரப்பட்ட சில துஆக்களை இங்கு குறிப்பிடுகின்றோம்.

 لا إلهَ إلا الله (மூன்று விடுத்தம்) ، اللهُ أكبَر (மூன்று விடுத்தம்)

 اللهُ أكبَر كبِيْراً ، والحَمْدُ للهِ كثِيْراً ، وسُبْحَان اللهِ بُكْرَة وَأصِيْلاً

இந்த துஆவை ஒரு நபித்தோழர் ஓதினார். அப்போது நபியவர்கள்: "இதனை இட்டு நான் ஆச்சரியப்படுகிறேன். வானத்தினுடைய வாயில்கள் இதற்காகத் திறந்து கொடுக்கப்பட்டது" என்றார்கள்.

الحَمْدُ للهِ حَمْداً كَثِيْراً طَيِّباً مُبَارَكاً فِيْهِ

இந்த துஆவை ஒரு நபித்தோழர் ஓதியபோது, நபியவர்கள்: "நான் பன்னிரெண்டு வானவர்களைப் பார்த்தேன். அவர்களில் யார் இதனை அல்லாஹ்வின் பால் உயர்த்துவது என்ற விடத்தில் தங்களுக்குள் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்" என்றார்கள்.

 اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ مَلِكُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ ، وَلَكَ الْحَمْدُ ، أَنْتَ الْحَقُّ ، وَوَعْدُكَ حَقٌّ ، وَقَوْلُكَ حَقٌّ ، وَلِقَاؤُكَ حَقٌّ ، وَالْجَنَّةُ حَقٌّ ، وَالنَّارُ حَقٌّ ، وَالسَّاعَةُ حَقٌّ ، وَالنَّبِيُّونَ حَقٌّ ، وَمُحَمَّدٌ حَقٌّ ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ ، وَبِكَ آمَنْتُ ، وَإِلَيْكَ أَنَبْتُ ، وَبِكَ خَاصَمْتُ ، وَإِلَيْكَ حَاكَمْتُ ، أنْتَ رَبُّنَا وَإليْكَ المَصِيْر ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ ، وَمَا أَخَّرْتُ ، وَمَا أَسْرَرْتُ ، وَمَا أَعْلَنْتُ ، وَمَا أنْتَ أعْلَمُ بِهِ مِنَّيْ ، أَنْتَ الْمُقَدِّمُ ، وَأَنْتَ الْمُؤَخِّرُ ، أنت إلهي ، لا إِلَهَ إِلا أَنْتَ ، ولا حول ولا قوة إلا بك.

 اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنْ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ .

 اللهُ أكبَر என்று பத்து விடுத்தமும் الحَمْدُ للهِ என்று பத்து விடுத்தமும் سُبْحَان الله என்று பத்து விடுத்தமும் لا إله إلا الله என்று பத்து விடுத்தமும் மேலும் பத்து விடுத்தங்கள் أسْتَغْفِرُ الله என்ற வார்த்தையும் கூறிக் கொண்டு பின்வரும் துஆவை பத்து விடுத்தம் ஓத வேண்டும்.

اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَاهْدِنِي ، وَارْزُقْنِي ، وعَافِنِي

மேலும் பத்து விடுத்தம் இந்த துஆவையும் ஓத வேண்டும்.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الضِّيقِ يَوْمَ الْحِسَابِ

اللَّهُ أَكْبَرُ (மூன்று விடுத்தம்) ذُو الْمَلَكُوتِ وَالْجَبَرُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ

பார்க்க: ஸிபது ஸலாதின் நபி (அல்பானி ரஹிமஹுல்லாஹ்)

பக்கம்: (94,95)

தமிழில்: அபூ ஹுனைப்