தலைப்பாகை அணிவது சுன்னத்தான காரியமா?

بسم الله الرحمن الرحيم

தலைப்பாகை அணிவது வழக்காறுகளில் ஒன்றாகும். அது வணக்க வழிபாடுகளின் ஓர் அம்சமல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலைப்பாகை அணிந்ததற்குரிய காரணம், அது அவர்கள் வாழ்ந்த சமூகத்தினரின் ஓர் ஆடையாக இருந்தமையே ஆகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலைப்பாகை அணிந்தார்களே அன்றி, அதனுடைய சிறப்புக்கள் குறித்து எவ்விதமான  ஸஹீஹான ஹதீஸ்களும்  இடம்பெறவில்லை. எனவே, ஒரு மனிதர் தமது நாட்டு மக்கள் (வழக்காறாக) அணியும் ஆடைகளில் ஹராம் இல்லாத விதத்தில் தமக்கு முடியுமானதை அணிவதற்கு மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பதாவா அல்லஜ்னதுத் தாஇமா: 22/44