பித்அத் பற்றிய ஆய்வு – பகுதி 3

இரண்டாம் பாடம்:

மார்க்கத்தில் எல்லா வகையான பித்அத்களுக்குமான சட்டம்

மார்க்கத்தில் எல்லா பித்அத்களும் ஹராமும், வழிகேடுமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'காரியங்களில் அனைத்து நூதனங்களையும் உங்களுக்கு எச்சரிக்கின்றேன். நிச்சயமாக அனைத்து நூதனங்களும் பித்அத்களாகும், அனைத்து பித்அத்களும் வழிகேடாகும். (அபூதாவூத் - 4607) (திர்மிதி - 2676)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் நமது காரிங்களில் இல்லாத ஒன்றை உருவாக்குகின்றாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும். மற்றுமொரு அறிவிப்பில்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை செய்கிறாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும்.

நிச்சயமாக மார்க்கத்தில் நூதனத்தை ஏற்படுத்துவது பித்அத்தாகும், எல்லா பித்அத்களும் நிராகரிக்கப்பட்ட வழிகேடாகும் என இந்த நபிமொழிகள் கூறிக் கொண்டிருக்கின்றன. நிச்சயமாக வணக்கங்களில் கொள்கைகளில் பித்அத்கள் ஹராமாகும். என்றாலும், பித்அத்களின் வகைகளுக்கு ஏற்ப ஹராத்தில் ஏற்றத்தாழ்வுகள் உண்டு

அவற்றில் இருந்தும் உள்ளது தான் : தெளிவான நிராகரிப்பு காணப்படும், கப்ருகளை தவாப் செய்தல், நேர்ச்சைகள், அறுப்புகளை முன்வைத்தல், கப்ருகளில் அடங்கப்பட்டிருப்பவர்களிடத்தில் பிரார்த்தனை செய்தல், உதவி வேண்டுதல் போன்ற அம்சங்களாகும். ஜஹ்மியாக்கள், முஃதஸிலாக்கள் போன்று.

இன்னும் அவைகளில் இருந்தும் உள்ளது தான் : இணைவைப்பிற்கு இட்டுச் செல்லும் காரணிகள், கப்ருகளின் மீது கட்டிடங்கள் கட்டுவது, அதனை நோக்கித் தொழுவது, பிரார்த்தனை செய்வது போன்றன.

இன்னும் அவைகளில் இருந்தும் உள்ளது தான் : நம்பிக்கைச் சார்ந்த பாவங்கள், கவாரிஜ்களின், கத்ரிய்யாக்களின், முர்ஜியாக்களின் நம்பிக்கைகளில் வார்த்தைகளில் ஷரீஅத்தின் ஆதாரங்களுக்கு முரணான பித்அத்களைப் போன்றாகும்.

இன்னும் அவைகளில் இருந்தும் உள்ளது தான் : பாவம் தரக்கூடிய அம்சங்களும் உண்டு. திருமணம் செய்யாமலிருத்தல;> சூரிய ஒளியில் நின்று நோன்பு வைத்தல், உடலுறவு நாட்டத்தைத் தவிர்க்க விதையடித்துக் கொள்ளல் போன்ற பித்அத்களாகும்.

எச்சரிக்கை

யார் பித்அத்தை பித்ஆ ஹஸனா (நல்ல பித்அத்) என்றும், பித்ஆ ஸையிஆ (தீய பித்அத்) என்றும் பிரிக்கின்றாரோ அவர் ஒரு ஏமாற்றுக்காரராகவும், தவறிழைத்தவராகவும், நபி (ஸல்) அவர்களின் ஹதீஸூக்கு மாற்றம் செய்தவராகவும் இருக்கின்றார். நிச்சயமாக பித்அத்கள் அனைத்தும் வழிகேடாகும். ஏனெனில் நிச்சயமாக நபியவர்கள் பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகள் என்று தீர்ப்பளித்துள்ளார்கள். ஆனால், இவர் இல்லை பித்அத்கள் எல்லாம் வழிகேடல்ல, அவற்றில் நல்ல பித்அத்களும் இருக்கின்றன என்கின்றார். அல்ஹாபிழ் இப்னு ரஜப் ரஹிமஹூல்லாஹ் அவர்கள் 'எல்லா பித்அத்களும் வழிகேடுகள் ' என்ற நபிமொழி பற்றி கூறும் போது: இச்செய்தி பல அர்த்கங்களை உள்ளடங்கிய நபிமொழிகளில் ஒன்றாகும் இதிலிருந்து எதுவும் விடுபட முடியாது என்றும், இது மார்க்கத்தின் அடிப்படைகளில் மிகவும் மகத்தான அடிப்படையாகும். நபியவர்கள் கூறியுள்ளவாறு 'யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்குகின்றாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும். யார் ஓர் அம்சத்தை உருவாக்கி அதனை மார்க்கத்துடன் இணைத்து விடுகின்றாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும், இன்னும் அது மார்க்கத்தில் எந்த அடிப்படையும் இல்லாத அம்சமாகும். அது வழிகேடுமாகும், இதற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தமுமில்லை, மார்க்கம் இதிலிருந்து நீங்கிவிடுகின்றது. இவைகள் நம்பிக்கைச் சார்ந்த, செயல்கள், வெளிரங்கமான உள்ரங்கமான வார்த்தைகள் போன்ற எவைகளாக இருந்தாலும் சரியே!

இவ்வாறானவர்களுக்கு நல்ல பித்அத் என்பதற்கு தராவீஹ் தொழுகையில் உமர் (ரழி) அவாக்ளின் வார்த்தையான இது ஒரு நல்ல பித்அத்தாகும் ஒன்றே ஆதாரமாகும். இன்னும் சில அம்சங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன அதனை ஸலபுகள் யாரும் மறுக்க வில்லை என்று அவர்கள் கூறுகின்றார்கள், அல்குர்ஆன் ஒன்று சேர்க்கப்பட்டமை, நபிமொழிகள் எழுதப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்டமை இவைகளை உதாரணமாகக் கூறுகின்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU MUAAD JAMALUD DEEN (GHAFOORI)