அல்லாஹ்வின் எதிரிகளால் ஏற்படும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இலங்கை, இந்தியா வாழ் ஸலபி சகோதரர்களுக்கு ஓர் நல்லுபதேசம்.

بسم الله الرحمن الرحيم

இலங்கை, இந்தியா வாழ் ஸலபி சகோதரர்களுக்கு ஓர் நல்லுபதேசம்.

உரை நிகழ்த்தியவர்: அஷ்ஷேய்ஹ் அபூ பிலால் அல் ஹல்ரமீ حفظه الله تعالى

11 ஷவ்வால் 1437 (16 ஜூலை 2016)

கேள்வி: 

இலங்கையிலும் இந்தியாவிலும் அல்லாஹ்வுடைய எதிரிகள் மக்களை அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காகவும், ஸலபிக்கொள்கையை விட்டும், இஸ்லாத்தை விட்டும் தடுப்பதற்காக வேண்டியும், ஸலபிக்கொள்கையை பின்பற்றுகின்ற சகோதரர்களின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும் பயமுருத்தல்களையும் நெருக்கடிகளையும் போட்டுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

எனவே நீங்களும்; மாணவர்களும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நாம் ஆசை வைக்கின்றோம்.

மேலும் அவர்களை உறுதிப்படுத்துவதற்காக உம்மிடமிருந்து சிரியதொரு உரையையாவது வேண்டிக்கொள்கிறோம்.

- அதைக்கொண்டு அல்லாஹ் அவர்களுக்கு பிரயோசனமளிக்கக்கூடும் -

அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக!

இப்படிக்கு:

உங்கள் மாணவன்

நவ்வாஸ் அல் ஹின்தீ.

பதில்:

அல்லாஹ் உமக்கும் நற்கூலியை வழங்குவானாக!

மேலும் உம்மை

பாதுகாப்பானாக!

எங்களிடம் வேண்டப்பட்ட இந்த விடயத்தின் பக்கம் நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.

நாம் நலவின் மீது உறுதியாக இருக்க வேண்டும் . நோவினைகள் வரும் போது பொறுமையாக இருக்க வேண்டும்.

மேலும் எங்களுக்கு ஏற்படும் நெருக்கடிக்காகவும்; பயமுறுத்தல்களுக்காகவும்; நாம் எமது இடங்களிலிருந்து விரட்டப்பட்டு, வெளியேற்றப்படுவதற்காகவும் மக்களின் மீது எந்த ஒரு தீங்கையும் நாம் ஏற்படுத்திவிடக்கூடாது.

இவைகள் அனைத்திற்கும் அல்லாஹ்விடத்திலே நாம் கூலியை எதிர்ப்பார்க்கின்றோம். மேலும் அதற்கான நன்மையை எங்களுடைய இரட்சகனான அந்தக் கொடையாளனிடம் பெற்றுக்கொள்ள விரும்புகின்றோம்.

இந்த அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் வெளியேரக்கூடிய ஒரு வழி அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கப்பெறும்.

அல்லாஹ்வைத்தவிர வேறு எவராலும் எங்களை விட்டும் இவைகளை திருப்பிவிட முடியாது.

அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை புரியவும்;

மேலும் அல்லாஹ்வுடைய எதிரிகளிடமிருந்து எமக்கு ஏற்படும் நெருக்கடிகளையும் பயமுறுத்தல்களையும் பொய்யான குற்றச்சாட்டுகளையும் அல்லாஹ் எம்மை விட்டும் நீக்கி விட வேண்டுமென்று உடனே அவனிடத்தில் நாம் அடிபணிந்து பிரார்த்திக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.

நிச்சயமாக அல்லாஹ்வின் எதிரிகள் தமது நாடுகளை, அவர்களின் பிள்ளைகளை, அவர்களின் பெண்களை நோக்கி இந்த நலவு வந்து பரவுவதை கண்ட பின்னரும் உன்னைப் பார்த்து "அல்லாஹ் உனக்கு நற்கூலியை வழங்குவானாக "என்று கூறுவார்கள் என்பதை நீ ஒருபோதும் நினைத்தும் பார்க்காதே; எதிர்ப்பார்த்து நிற்காதே.!

மேலும் "அல்லாஹ் உன்னுடைய ஆயுளை நீடித்து வைக்கட்டும் ஏனெனில் நீ எமது பிள்ளைகளுக்கும்; பெண்களுக்கும் நேர்வழி காட்டிவிட்டாய். " என்று அவர்கள் உன்னைப் பார்த்து கூறுவார்கள் என்பதை ஒருபோதும் நினைத்துப்பார்க்கவும் முடியாது; எதிர்ப்பார்கப்படவும் மாட்டாது.

எனவே எங்களுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளிலும் பொய்யான குற்றச்சாட்டுகளிலும் சோதனைகளிலும் எம்மை நாமே உறுதிப்படுத்திக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

ஏனெனில் நாம் அல்லாஹ்வை சந்திக்கும் வரை சோதனைகளுக்குள்ளாக்கப்படுவோராவோம்.

அல்லாஹ்வுத்தஆலா கூறுகின்றான்: (பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக்கொண்டும், செல்வங்கள், உயிர்கள், கனிகள் ஆகியவற்றில் குறைவை ஏற்படுத்துவதைக்கொண்டும் நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம். மேலும் நபியே நீர் பொறுமையாளர்களுக்கு நன்மாராயங்கூறுவீராக.)

(அவர்கள் எத்தகையோர்கள் என்றால் அவர்களுக்கு ஏதாவது ஒரு சோதனை ஏற்பட்டால் அவர்கள் "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காக வேண்டியே இருக்கின்றோம். மேலும் அவனிடமே நாம் மீள இருக்கின்றோம் ."என்று கூறுவார்கள்.)

(அவர்களின் மீதே அவர்களுடைய இரட்சகனிடமிருந்து நல்லாசிகளும்; இரக்கமும் உண்டாகும். மேலும் அவர்களே நேர்வழிப்பெற்றவர்களாக இருக்கின்றனர்). சூரதுல் பகரா: 155 - 157

எனவே ஒரு மனிதன் சோதனைகளின் போது நேர்வழி பெறுவதற்கும், நேர்வழி பெறுவதற்கான காரணங்களை கடைப்பிடிப்பதற்கும் கடமைப்பட்டுள்ளான்.

அவைகள் யாதெனில் பொறுமையாக இருப்பது மேலும் "இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்" என்ற இஸ்திர்ஜா என்று சொல்லப்படக்கூடிய அந்த துஆவை ஓதிக்கொள்வதுமாகும்.எனவே இப்பாதையை அவர் கடைப்பிடிக்க வேண்டும்.

இப்படியான வழியை அவர் கையாண்டால், அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு அவர் நேர்வழி பெற்றவராக இருப்பார்.

எனவே "இன்னா லில்லாஹ் வயின்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹும்மா உஃஜுர்னா பீ முஸீபதினா ஆதிஹி வஹ்லுப் லனா ஹைரன் மின்ஹா."

என்று அவர் கூறிக்கொள்ள வேண்டும்.

இதை ஒருவர் தனது விருப்பத்திற்குறிய ஒருவரை அவர் இழக்கும் போதும் கூறலாம்; அதே போன்று ஒரு நலவை இழக்கும் போதும் கூறலாம்.

நிச்சயமாக நாம் ஒரு நலவை இழப்பதே எமக்கு ஏற்படும் பெரிய சோதனையாக இருந்துக்கொண்டிருக்கின்றது.

நாம் அந்த ஊரிலும் (தம்மாஜ்) அதுவல்லாத வேறு ஊர்களிலும் இந்த நலவிலிருந்து பிரயோசனம் பெற்றுக்கொண்டிருந்தோம். பிறகு அது இழக்கப்பட்டு விட்டது.

இது ஸலபிக்கொள்கையை பின்பற்றுபவர்களுக்கு பெரிய சோதனையாக இருந்தது.

நிச்சயமாக நாம் எங்களுக்கு விருப்பமான ஒரு சகோதரரை யுத்தத்தில் இழப்பதை விட, (என்றாலும் அவர் ஷஹீதாக இருக்கின்றார்). நாம் அவரை ஷஹீதாக கருதுகின்றோம். அல்லாஹ்வே அவருக்கு கூலி கொடுக்கக்கூடியவனாக இருக்கின்றான். அவரைக்கொண்டு அல்லாஹ் மக்களுக்கு பிரயோசனமளிக்க வேண்டும் என்றே நாம் ஆசை வைத்திருந்தோம்.- இந்த நலவை சில நாடுகளிலே நாம் இழப்பது எமக்கு ஏற்படுகின்ற பெரிய சோதனையாக இருந்துக்கொண்டிருக்கின்றது.

அதே போன்றே அந்த நாடுகளிலே எமக்கு நெருக்கடிகள் தரப்படுவதும், அவைகளிலிருந்து நாம் விரட்டப்படுவதும் எமது உள்ளத்திலே நெருக்கடியை ஏற்படுத்துகின்றது.

என்றாலும் எமக்கு என்ன செய்ய முடியும்?

நாம் இறுதிக்காலப்பகுதிகளில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம். எனவே நாம் அதிகமாக பொறுமை செய்யவேண்டிய கடமைப்பாட்டில் இருக்கின்றோம்.

எமது ஸலபுகள் கூறுகின்றார்கள்: (எமது வாழ்வின் நலவை நாம் பொறுமையைக் கொண்டு பெற்றுக் கொண்டோம்.)

எனவே நாம் எமது வாழ்விலே நலவு ஏற்பட வேண்டுமென்று நாடினால், எங்களின் மீது பொறுமை கடமையாகின்றது.

கடுமையான கட்டங்களில் அல்லாஹ் நாடிய வீரர்களாக,  உண்மையான ஆண்களாக நாம் இருக்க வேண்டும்.

எதிரிகளுக்கு முன்னால் பலவீனமடைந்து விடக்கூடாது.

அல்லாஹ் கூறுகின்றான்: (மேலும் பகைவரின் கூட்டத்தை தேடிச்செல்வதில் நீங்கள் சோர்வடைந்து விடாதீர்கள். நீங்கள் துன்பமடைந்திருப்பீர்களானால் நீங்கள் துன்பமடைந்தது போன்று நிச்சயமாக அவர்கள் துன்பமடைவர். மேலும் அவர்கள் ஆதரவு வைக்காதவற்றை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் ஆதரவு வைக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், தீர்க்கமான அறிவுடையவனாகவும்,  இருக்கின்றான்.) சூரதுந் நிஸா: 104

இதுவே எமக்கும் அவர்களுக்குமிடையிலான வேறுபாடு. அவர்கள் இந்த நலவின் மூலமாக மிகவும் நோவினை அடைகின்றனர். ஏனெனில் இந்த நலவு அவர்களை பிரித்து விட்டது மேலும் அவர்களின் நாடுகளுக்குச் சென்று விட்டது.

இன்னும் எமக்கும் அவர்களுக்குமிடையிலான பிரிவு அல்லாஹ்விடமிருந்து அவர்கள் ஆதரவு வைக்காத வற்றை நாம் ஆதரவு வைக்கின்றோம் .

இதைக்கொண்டே இலங்கை,  இந்தியா போன்ற நாடுகளில் இருக்கின்ற எமது சகோதரர்களை உபதேசிக்கின்றோம்.

அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மேலும் அல்லாஹ்விடத்தில் அதிகமாக பிரார்த்திக்க வேண்டும்.

உங்களுக்கு உமது பள்ளிகளிலும், கலாசாலைகளிலும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டால் அங்கே வேறொரு வழியிலே தஃவாவை, நலவை பரப்ப முடியும். அல்லாஹ் உமக்கு ஒரு வழியை ஏற்படுத்தி தரும் வரை, எமது வீடுகளில் நாம் இருந்துக்கொண்டு எம்மிடம் படிக்க வரக்கூடிய மக்களுக்கு படித்துக்கொடுக்க முடியும்.

மேலும் வீடுகளிலும் எமக்கு நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டால், நாம் நலவை எழுத வேண்டும். ஏனென்றால் அவர்கள் இணையத்தை தடுக்க சக்தி பெறமாட்டார்கள்.

இப்படியே அஹ்லுஸ்ஸுன்னாக்கள் அந்நாட்டிலே நலவை பரப்பிக்கொண்டே இருப்பார்கள்.

அந்நலவு, அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு இலங்கை, இந்திய நாட்டு மக்களுக்குப் போய்ச்சேரும்.

இந்நலவின் பக்கம் அழைப்பு விடுப்பவர் அக்கூட்டத்தின் மொழியிலேயே உரையாட வேண்டும். அல்லது பேசப்படுகின்ற விடயம் அவர்களின் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட வேண்டும் .

மேலும் அவர் யாரைப்பெற்றுக்கொண்டாலும் அவருக்கு உபதேசம் செய்ய வேண்டும் .

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அவரது மக்கா வாழ்க்கையில் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட போது இது போன்ற அழைப்புகளை மேற்கொண்டார்கள்.

ஒரு சில காலங்களில் சில வீடுகளில் மறைந்திருந்து தஃவா செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.

மேலும் அவர்களின் சந்தைகளுக்குச் சென்று தஃவா செய்வார்கள்.

அல்லாஹ் அவருக்கு ஒரு வழியை திறந்து கொடுக்கும் வரை அதிலே அவர்கள் பொறுமையாக இருந்தார்கள்.

மேலும் அவர்களுக்கு நெருக்கடிகள் அதிகரித்தால், அதையும் செய்ய முடியாது இதையும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டால், அவர்கள் அந்நாட்டை விட்டும் ஹிஜ்ரத் செய்யட்டும். அல்லது அதிலிருந்து வெளியேறட்டும்.

மேலும் அவர்களுக்கு அதிகமாக நெருக்கடிகள் ஏற்பட்டு, அடிக்கப்பட்டு, துன்புருத்தப்பட்டு, அவர்களுக்கு தாங்க முடியாத அளவிற்கு நோவினை செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டால்,

அல்லாஹ் நாடிய விதத்தில் அவனுடைய மார்க்கத்தை அவர்கள் நிலை நாட்டுவதற்காக அங்கிருந்து அவர்கள் ஹிஜ்ரத் செய்ய வேண்டும். அல்லது அங்கிருந்து வெளியேறி விட வேண்டும்.

எவருக்கு அங்கிருந்து வெளியேற சக்தி இருக்கின்றதோ அவருக்கே இந்த சட்டமாகும்.

யாருக்கு வெளியேற சக்தி இல்லையோ அவருக்கு இவ்விடயங்களை அல்லாஹ் இலகுபடுத்திக் கொடுக்கும் வரை அவர் பொறுமையாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வே உதவி செய்யப் போதுமானவன்.

எங்களுடைய சகோதரர் அஷ்ஷேய்ஹ் நவ்வாஸ் அவரைக் கொண்டு அல்லாஹ் இலங்கையிலே பெரிய, மகத்தான ஒரு தஃவாவை உண்டு பன்னினான்.

அவருக்கு பல நெருக்கடிகள் செய்யப்பட்டது . அவரை அங்கிருந்து வெளியேற்றி விடுவதற்காக ஒரு ஷைத்தானிய தந்திரத்தை அல்லாஹ்வின் எதிரிகள் செய்தார்கள்.

எப்படி அவரை வெளியாக்க முடியும்!!! ???

நீங்கள் அறிந்துக்கொள்ளுங்கள்!

அல்லாஹ் உங்களை பாதுகாக்கட்டும்.

நிச்சயமாக அஹ்லுஸ்ஸுன்னாவுடைய தஃவாவிலே அல்லாஹ்வின் எதிரிகளுக்குத் தோல்வி இருக்கின்றது.

அஷ்ஷேய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் எமக்கு பல தடவைகள் கூறுகின்ற ஒரு கூற்றை நான் இப்பொழுது ஞாபகப்படுத்துகின்றேன்:

(நிச்சயமாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக அமெரிக்கா எமது ஏவுகணைகளுக்கோ, பீரங்கிகளுக்கோ பயப்படுவதில்லை. என்றாலும் நாங்கள் இருந்து கொண்டிருக்கிற இந்த நலவிற்கே அது பயப்படுகின்றது.

ஏனென்றால் எங்களுடைய ஏவுகணைகளை விடவும், பீரங்கிகளை விடவும் மிகவும் நல்ல பீரங்கிகளும், ஏவுகணைகளும் அவர்களிடம் இருக்கின்றன.

எமக்கு அவர்களிடமிருந்து வரக்கூடிய எந்த ஒரு ஆயுதமாக இருந்தாலும் அவர்கள் அதற்கு எதிரான ஒரு ஆயுதத்தை செய்து விடுகின்றனர்.

அவர்கள் செய்கின்ற ஆயுதங்களில் மிகவும் தரம் குறைந்த ஆயுதங்களையே அவர்கள் எமக்குத் தருகின்றனர். அதை திருப்பித்தாக்குவதற்கான ஆயுதங்களும் அவர்களிடம் உள்ளன.

 

அவர்களிடத்தில் மிகவும் தரம் வாய்ந்த ஆயுதங்களை அவர்கள் வைத்துக் கொள்கின்றனர்.

ஷேய்ஹ் அவர்கள் எமக்கு இப்படி கூறும் போதெல்லாம் இதுவெல்லாம் சாத்தியமான விடயங்களா!!!???

என்று நாம் கூறிக்கொள்வோம்.

பிறகு அந்த சில நாட்கள் கடந்தவுடன் நாம் எமது வாழ்க்கையில் அவைகளைக் கண்கூடாகக் கண்டோம்.

ஆம். நிச்சயமாக அமெரிக்கா அஹ்லுஸ்ஸுன்னாவுடன் கடுமையாகப் போர்த் தொடுக்கின்றது.

ஏனென்றால் ஸலபிக்கொள்கையை பின்பற்றுகின்ற அஹ்லுஸ்ஸுன்னாவிடமிருந்து அல்லாஹ்வின் எதிரிகளுக்கு ஏற்படும் தோல்விகளை அவர்கள் கண்கூடாகக் காண்கின்றனர்.

மேலும் அவர்களின் நலவையும், அவர்களின் மக்கள் பக்கம் முன்னோக்கி வருவதையும் காண்கின்றனர்.

அஹ்லுஸ்ஸுன்னாவே! இது அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு கிடைக்கப்பெற்ற சிறப்பாக இருந்துக்கொண்டிருக்கின்றது.

எனவே இந்த நலவை எங்களுக்கு அவன் தந்ததற்காக வேண்டி நாம் அவனைப் புகழ வேண்டும்.

நாம் மேற்கொள்கின்ற இந்த விடயமே அவர்களின் மனதிலே பல தாக்கங்களை உண்டுபன்னுகின்றது.

ஆனால் யுத்தத்திற்காக படைத்திரட்டுவதை பொறுத்தமட்டில், அவர்களிடம் எமது படைகளை விட அதிகமான பல படைகள் உள்ளன.

மாறாக அவர்கள் படைகளின் பக்கம் தேவைகாணவே மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தமது நாடுகளில் இருந்துக்கொண்டே கணனியின் மூலமாக உங்களுக்கு எதிராக போர்த் தொடுக்கின்றனர் .

அவர்களின் நாடுகளிலே இருந்துக்கொண்டு பல யுக்திகளைக் கையாண்டு பலவற்றையும் எமது நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இவைகளைக்கொண்டு அவர்கள் அங்கிருந்துகொண்டே எம்முடன் போராடுகின்றனர்.

நாம் படைத்திரட்டுவதும் கூடுமான விடயமே.

முஸ்லிம்களுடன் நேருக்கு நேராக நின்று எம்மால் போர் செய்ய முடியாது என்று அவர்களே அவர்களின் பலவீனத்தை அறிந்தவுடன் இப்படியான விடயங்களை செய்தார்கள்.

உங்களுடன் நேருக்குநேர் யுத்தம் செய்யாமல், அவர்கள் அவர்களின் நாடுகளில் இருந்துக்கொண்டு வேறு பல நவீன கண்டுப்பிடிப்புகளைக் கண்டுப்பிடித்து உங்களுடன் போரிடுகின்றனர்.

இவைகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனாலேயே அன்றி வேறு எவராலும் நீக்கி விட முடியாது.

எனவே எதைக்கொண்டு எம்மால் அல்லாஹ்வின் எதிரிகளை தோற்கடிக்க முடியும்? என்பதை நாம் பார்க்க வேண்டும்.

மக்களுக்கு மார்க்கத்தை படித்துக்கொடுத்தல், மேலும் அவர்களுக்கு மார்க்க விடயங்களை விளங்கப்படுத்தல், மேலும் இறைநிராகரிப்போரின் பழக்கவழக்கங்களை விட்டும், செயற்பாடுகளை விட்டும், கொள்கைகோற்பாடுகளை விட்டும், முற்று முழுதாக மாறு செய்யுமாறு அவர்களுக்கு ஏவுதல் போன்ற விடயங்களின் மூலமாக அவர்களுடன் எமக்குப் போராடலாம்.

இதுவே பிரயோசனமளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது .

இதன் மூலமாகவே சமூகத்தில் வீரர்களும், உண்மையான ஆண்களும் உருவாகின்றனர்.

அவர்களே இந்த ஒழுங்கான பராமரிப்புக்குப்பின்னால் அல்லாஹ்வுடைய பாதையில் அல்லாஹ்வின் எதிரிகளுக்கு எதிராக நின்று போரிடக்கூடியவர்களாக இருப்பார்கள் .

அஹ்லுஸ்ஸுன்னாவின்  நலவுகள்  அல்லாஹ்வுக்குறியதாகும்.            (அரேபியர்கள்,  எவரிடத்தில் அதிகமான நலவுகள் காணப்படுகின்றனவோ அவரை  புகழுவதற்காகவும் ;  அவருக்கு வாழ்த்துக்கூறுவதற்காகவும்; அவருடைய எதாவது ஒரு நல்ல விடயத்தைப் பார்த்து ஆச்சரியப் படும் போதும் இவ்வார்த்தையை பயன்படுத்துவார்கள் . )

ஏனென்றால் அவர்கள்,

" குறைகளை, பாவங்களை, நீக்குதல் மேலும் அல் குர்ஆன் அஸ்ஸுன்னாவின் படி வளர்தல்" என்ற அடிப்படையின் பக்கம் மக்களை அழைத்தார்கள்.

இந்த விடயத்தைக்கொண்டு அதிகமாக அவர்கள் பிரயோசனம் பெற்ற பின்னர் அதற்கு மேலும் மேலும் முக்கியத்துவம் காட்டினார்கள்.

அவர்களலல்லாத வேறு பிரிவினர்கள் அதிலே முக்கியத்துவம் காட்டாததின் காரணமாக பல விளைவுகளை அவர்கள் முன்னோக்கினார்கள்.

அஹ்லுஸ்ஸுன்னா அழைப்பதைப்போன்று "குறைகளை, பாவங்களை நீக்குதல் மேலும் அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் படி வளர்தல்" என்ற அடிப்படையின் பக்கம் அனைத்து அழைப்பாளர்களும் சேர்ந்து அழைத்திருந்தால் அதிகமான நலவுகள் நடந்திருக்கும்.

என்றாலும் அஹ்லுஸ்ஸுன்னாவுடைய இது போன்ற அடிப்படைகளின் பக்கம் அவர்கள் விழிப்புணர்வு பெறவில்லை.

அல்லாஹ்வே உதவி புரிய வேண்டும்.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻  ✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻

மொழிபெயர்த்தோன்: அபூ அப்திர் ரஹ்மான்  அப்துர்ரஸ்ஸாக் இப்னு முஹம்மத் நஸார்  அஸ்ஸைலானீ.