ரமழானின் கடைசிப் பத்து நாட்களின் சிறப்புக்கள்

بسم الله الرحمن الرحيم

கேள்வி: ரமழானின் கடைசிப் பத்து நாட்களின் சிறப்புக்களை பிரயோசனம் பெறும் நோக்கில் எமக்குக் கூறுவீர்களா?

பதில்: ரமழானின் கடைசிப் பத்து நாட்களின் சிறப்புக்கள் மிக்க மகத்துவம் வாய்ந்தவை. அதனால் தான் நபியவர்கள் ரமழானின் ஆரம்ப நாட்களை விட அதன் இறுதி நாட்களில் வணக்க வழிபாடுகளில் கூடிய கவனம் எடுத்துள்ளார்கள். அந்தவிதத்தில் நபியவர்கள் அதன் ஆரம்ப நாட்களின் இரவுகளைவிட அதன் கடைசி நாட்களின் இரவுகளில் தஹஜ்ஜத் விடயத்தில் அதிக கவனம் எடுத்துள்ளார்கள். மேலும், நபியவர்கள் ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் பள்ளிவாசலில் இஃதிகாப் இருந்துள்ளார்கள். அதாவது, பள்ளிவாசலில் அல்லாஹ்வை திக்ரு செய்வதற்காகவும் வணக்கம் புரிவதற்காகவும் தங்கியிருந்தார்கள். அப்பத்து நாட்களிலும் மனிதன் என்ற அடிப்படையில் அத்தியவசியத் தேவை தவிர்ந்த வேறு தேவைகளுக்காக வெளியேறமாட்டார்கள். இத்தகைய நடவடிக்கை குறித்த நாட்களின் விசேட தன்மையையும் சிறப்பம்சத்தையும் எமக்கு எடுத்தியம்புகின்றது. அத்தோடு, லைலதுல் கத்ர் இரவு ஏற்பட முடியுமான இரவு இப்பத்து நாட்களிலேயே இருக்கின்றது. ஏனெனின், நபியவர்கள் அந்நாட்களை விசேடமாகக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்கள். எனவே, அதன் அடிப்படையில் நபியவர்கள் லைலதுல் கத்ர் இரவைத் தேடியவர்களாக அவ்விரவுகளில் முயற்சி செய்பவர்களாக இருந்தார்கள்.

-    வழங்கியவர்: அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ்

-    தமிழில்: அபூஹுனைப்