ரமழானில் நிகழக்கூடிய தவறுகள்

بسم الله الرحمن الرحيم

சிறப்புவாய்ந்த ரமழான் மாதம் எம்மை அன்மித்து விட்டது. இம்மாதம் பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. கடமையான நோன்பு, லைலதுல் கத்ர், பத்ர் யுத்தம், அல்குர்ஆன் இறக்கப்பட்டமை போன்றன இம்மாதத்தின் சிறப்பம்சங்களாகும். இம்மாதத்தை எவ்வாறு நபிவழியில் ஒரு முஸ்லிம் கழித்திட வேண்டும் என்பதை இம்மார்க்கம் எமக்குக் கற்றுத் தந்துள்ளது. இம்மாதத்தை சிறப்பிக்கும் நோக்கில் பலர் மார்க்கத்திற்கு முரணான அம்சங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தவறுகளை இனங்கண்டு அவற்றைத் திருத்துவதற்குரிய முயற்சியை நாம் மேற்கொள்ள அவசியப்பட்டுள்ளோம். அத்தவறுகளை இவ்வாக்கத்தில் சுருக்கமாக உங்களுக்கு இனங்காட்டியுள்ளோம்.

1. நாற்காட்டியை அடிப்படையாக வைத்து நோன்பை ஆரம்பித்தல்.

2. நோன்பின் நிய்யத்தை வாயால் மொழிதல்.

3. ஸஹர் உண்பதை நடு இரவுக்கு முற்படுத்துதல்.

4. மணியோசையின் மூலம் மக்களுக்கு ஸஹர் நேரத்தை விழிப்பூட்டல்.

5. நாற்காட்டியில் காணப்படும் ஸஹர் முடிவு நேரத்தை வைத்து அதானுக்கு முன்பே உண்பதை நிறுத்திக் கொள்ளல்.

6. வுழூச் செய்யும்போது அதிகமாக மூக்கிற்கு நீர் செலுத்துதல்.

7. நோன்பாளிகளுக்கு சிரமத்தை அளிக்கின்றவாறு மக்ரிப் தொழுகையை அவசரப்படுத்துதல்.

8. சிறுவர்கள் நோன்பு நோற்க ஆர்வமாக இருக்கும்போதும் அதற்கு அவர்கள் சக்தி பெற்றிருந்தபோதும் அவர்களை நோன்பு நோற்க விடாமல் தடுத்தல்.

9. நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள் சிரமத்திற்கு மத்தியிலும் அதனை நோற்றல்.

10. வேலை, சம்பாத்தியம், தொழில் ஆகியவற்றைக் காரணமாகக் கொண்டு நோன்பை விடுதல்.

11. சூரியன் மறைந்துவிட்டதை உறுதி செய்ய முன்பு நோன்பு திறத்தல்.

12. நோன்பு திறக்கும்போது துஆச் செய்வதை வழமையாக்குதல்.

13. நோன்பு திறக்கும்போது அதானுக்கு பதிலளிக்காமலும் அதானுடைய துஆவை ஓதாமலும் உண்பதில் கரிசனையாக இருத்தல்.

14. பெருமைக்காக பள்ளிவாசல்களில் இப்தார் விருந்துபசாரங்களை மேற்கொள்ளல்.

15. ருகூஇலும் ஸுஜூதிலும் அமைதியைப் பேணாதவாறு மனிதர்களின் விருப்பத்திற்கேற்ப மிக அவசரமாக தராவீஹ் தொழுவித்தல்.

16. தராவீஹ் தொழுகையில் இரண்டு ரக்அத்களுக்கு மத்தியில் அல்லது நான்கு ரக்அத்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட சில துஆக்களை அல்லது, ஸலவாத்தை கூட்டாத சத்தமிட்டு ஓதுதல். அல்லது, பயான் நிகழ்ச்சிகளை நடாத்துதல்.

17. தொழுவதற்கு சோம்பேறித்தனம் கொண்டவர்கள் பள்ளிவாசலின் பிற்பகுதியில் சென்று அமர்ந்து, பின்பு  இமாம் ருகூஉ செய்யும்போது தொழுகையில் இணைந்து கொள்ளல்.

18. ஒரு ரக்அத்தைப் போன்று வித்ரு தொழுகையில் குனூத்தை நீட்டுதல்.

19. எல்லா நாட்களிலும் வித்ரில் குனூத் ஓதுதல்.

20. குனூத்தை குர்ஆன் ஓதுவது போன்று ராகமெடுத்து ஓதுதல்.

21. லைலதுல் கத்ர் என்ற பெயரில் விழாக்களை நடாத்துதல்.

22. பதினேழாவது தினத்தில் பத்ர் யுத்த நிகழ்வைக் கொண்டாடுதல்.

23. ஸகாத் விநியோகம் செய்தவற்குப் பணம் சேர்ப்பதற்காக பள்ளிவாசலிலும் கடைத் தெருக்களிலும் உண்டியல் வைத்தல்.

24. தராவீஹ் தொழுபவர்கள் கையில் குர்ஆனை வைத்து இமாம் ஓதுவதைப் பின்தொடர்தல்.

25. வீண் விளையாட்டுக்களிலும் களியாட்டங்களிலும் ஈடுபடல்.

26. ஜமாஅத் தொழுகைகளில் கலந்து கொள்ளாமல் உறங்குதல்.

27. சக்தியிருந்தும் ஸகாதுல் பித்ரை வழங்காதிருத்தல்.

28. ஸகாதுல் பித்ரைப் பணமாக வழங்குதல்.

29. மார்க்கம் விதித்த அளவுக்கு அதிகமாக ஸகாதுல் பித்ரை வழங்குதல்.

30. நோன்பு திறப்பதை பிற்படுத்தல்.

31. நோன்பு திறக்கும் போது ஆதாரபூர்வமற்ற துஆக்களை ஓதுதல்.

நோன்புப் பெருநாள் தினத்தில் நிகழக்கூடிய தவறுகள்

1. பேரீச்சம் பழத்தை உண்ணாமல் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுதல்.

2. பேரீச்சம் பழத்தை உண்ணாமல் வரும் தொழுகையாளிகளுக்கு பள்ளிவாசலில் உணவு மரவையில் பேரீச்சம் பழங்களைப் பங்கிடுதல்.

3. ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள் கழிந்த பின்பு மீண்டும் ஒரு பெருநாள் தினத்தை உருவாக்குதல்.

4. ஒரே சத்தத்தில் அனைவரும் தக்பீர் கூறுதல்.

5. ஐந்து நேரத் தொழுகைகளுக்குப் பின்பு சத்தமிட்டு தக்பீர் கூறுவதை குறிப்பாக்குதல்.

6. அவசியத் தேவையின்றி பெருநாள் தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றல்.

7. பெருநாள் திடலுக்கு மின்பரைக் கொண்டு வருதல்.

8. பெருநாள் திடலில் சுன்னத் தொழுதல்.

9. பெருநாள் தொழுகையில் இமாம் சுத்ரா வைக்காமல் தொழுதல்.

10. சோம்பேறித்தனமாகப் பெருநாள் தொழுகையில் பங்குபற்றாமல் இருத்தல்.

11. பெருநாள் குத்பாவை தக்பீரைக் கொண்டு ஆரம்பித்தல்.

12. குத்பாவைச் செவிமடுக்காமல் தொழுது முடிந்த பின்பு எழுந்து செல்லல்.

13. மக்களுக்குச் சோர்வை ஏற்படுத்துகின்றவாறு குத்பாவை நீட்டுதல்.

14. வாழ்த்துத் தெரிவிப்பதற்காகவும் முஸாபஹா செய்வதற்காகவும் திடலில் நீண்ட நேரம் தங்கியிருத்தல்.

15. திடலிலிருந்து திரும்பி வருவதற்கு வேறொரு பாதை காணப்பட்ட போதிலும் வந்த பாதையினாலே வீட்டுக்குச் செல்லல்.

16. பெருநாள் தினத்தில் குறிப்பாக கப்ருகளை தரிசித்தல்.

17. ஆடை அலங்காரம், உணவு, குடிபானம் ஆகியவற்றில் பணத்தை வீண்விரயம் செய்தல்.

18. ஒரே பள்ளிவாசலில் ஆண்களுக்கு ஒரு நேரத்திலும் பெண்களுக்கு ஒரு நேரத்திலும் பெருநாள் தொழுவித்தல்.

19. பெருநாள் திடலில் ஆண்களும் பெண்களும் ஒன்றறக் கலந்திருத்தல்.

20. இசை, சினிமா, தாடி வழித்தல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடுதல்.

- தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்