கன்ஸுல் அத்பால் – 02

بسم الله الرحمن الرحيم

51. மறுமை நாளில் மனிதர்களுக்கு மத்தியில் முதலாவது தீர்ப்பளிக்கப்படும் விடயம் யாது?

•    அல்லாஹ்வின் உரிமைகளில் முதலாவது விசாரிக்கப்படுவது தொழுகையாகும். அதேபோன்று, படைப்பினங்களின் உரிமைகளில் முதலாவது விசாரிக்கப்படுவது (அநியாயமாக) சிந்தப்பட்ட இரத்தமாகும்.

52. தீய உயிரினங்கள் ஐந்தும் யாவை?

•    விசர்நாய், காகம், தேள், எலி, பாம்பு ஆகியனவாகும்.

53. இவ்வைந்து தீய உயிரினங்களினதும் சட்டம் யாது?

•    மக்கா, மதீனா எல்லையிலும் அதற்கு வெளியிலும் கொள்ளப்பட வேண்டும்.

54. நபியவர்கள் கொள்வதற்குத் தடைசெய்த நான்கு பிராணிகளும் யாவை?

•    எறும்பு, தேன் பூச்சி, மரம் கொத்திப் பறவை, ஸுரத் என்று அறபியில் அழைக்கப்படும் ஒரு வகையான வளைந்த அலகுடைய பறவை. இதற்கு ஆங்கிலத்தில் shrike bird என்று அழைக்கப்படும்.

55. குழந்தை தன் தாயின் கருவறையில் கழிக்கும் காலகட்டங்களைக்  குறிப்பிடுக.

•    40 நாட்கள் இந்திரியத் துளியாகவும், பின்னர் 40 நாட்கள் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருளாகவும், பின்னர் 40 நாட்கள் சதைப்பிண்டமாகவும், பின்னர் எலும்பாகவும், பின்னர் அவ்வெலும்பு தசையால் அணிவிக்கப்படும்.

56. குழந்தை தன் தாயின் கருவறையில் இருக்கும் போது அங்கு சமூகமளிக்கும் மலக்கு எழுதும் நான்கு வார்த்தைகளும் யாவை?

•    அதனுடைய உணவு, ஆயுள், அமல், மற்றும் அது நல்லதா? அல்லது கொட்டதா? என்பதைப் பற்றிய வார்த்தைகள்.

57. மறுமையில் மனிதர்களில் மிக நீளமான கழுத்துக்களுடன் காட்சியளிப்பவர்கள் யாவர்?

•    அதான் கூறியவர்கள்

58. சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்த நாள் எது?

•    வெள்ளிக்கிழமை

59. அடியார்களின் அமல்கள் எத்தினத்தில் அல்லாஹ்விடத்தில் ஒப்புவிக்கப்படும்?

•    திங்கள், வியாழன் ஆகிய தினங்களில்

60. பெரிய ஹஜ்  - அல்ஹஜ்ஜுல் அக்பர் - என்று அழைக்கப்படும் தினம் யாது?

•    அறுப்புப் பிராணிகள் பலியிடப்படும் தினம்

61. பிரயாணத்தில் மேட்டுப் பகுதிகளில் ஏறும் போது எவ்விடயம் சுன்னாவாக்கப்பட்டுள்ளது?

•    தக்பீர் கூறுவது

62. பிரயாணத்தில் பள்ளத்தாக்குகளில் இறங்கும் போது எவ்விடயம் சுன்னாவாக்கப்பட்டுள்ளது?

•    தஸ்பீஹ் செய்வது

63. நபியவர்கள் எந்த நாளையில் பிரயாணம் செய்வதை விரும்புவார்கள்?

•    வியாழக்கிழமையில்

64. வாகனத்தில் ஏறிப் பிரயாணிக்கும் போது ஓதும் துஆ எது?

•    سُبْحَانَ الذِيْ سَخَّر لنَا هَذا وَمَا كُنَّا لَه مُقْرِنِيْن وَإنَّا إلى رَبِّنَا لَمُنْقلبُون

65. எந்த மரத்தினுடைய நீர் கண்ணுக்கு நிவாரணமாக இருக்கும்?

•    வசந்த காலத்தில் பூமிக்குக் கீழால் காணப்படும் ஒரு வகைத் தாவரமாகும். அது உருளைக் கிழங்கு போன்ற வடிவாகவும் தண்டற்றதாகவும் தூசியின் நிறத்தையுடையதாகவும் இருக்கும்.

66. நபியவர்கள் எந்தக் காற்றைக் கொண்டு உதவி செய்யப்பட்டார்கள்?

•    அஸ்ஸபா எனும் காற்றைக் கொண்டு

67. ஆத் சமூகம் எந்தக் காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டது?

•    அத்தபூர் எனும் காற்றைக் கொண்டு

68. அஸ்ஸபா என்றால் என்ன?

•    கிழக்கில் இருந்து வீசும் காற்றாகும்

69. அத்தபூர் என்றால் என்ன?

•    மேற்கில் இருந்து வீசும் காற்றாகும்.

70. கடைசிக் காலப்பகுதியில் கஃபாவைப் பாழ்படுத்துபவன் யார்?

•    ஹபஷா நாட்டைச் சோர்ந்த துஸ்ஸுவைகதைன் என்பவனாவான்.

71. குறைஷிகளின் கோடை காலப் பிரயாணம் எங்கு நோக்கி இருந்தது?

•    ஷாமை நோக்கி

72. குறைஷிகளின் மாரி காலப் பிரயாணம் எங்கு நோக்கி இருந்தது?

•    யமனை நோக்கி

73. ஹனீப் என்பவர் யார்?

•    அல்லாஹ்வை முன்னோக்கிச் செல்பவனும் அவனல்லாதவற்றைப் புறக்கணிப்பவனுமாவான்.

74. மனிதர்களில் அல்லாஹ்வை கடுமையாகப் பயப்படக்கூடியவர்கள் யாவர்?

•    உலமாக்கள்

75. இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நெருப்பின் மீது ஊதக்கூடிய பிராணியாக இருந்தது எது?

•    பல்லி

76. பல்லியைக் கொள்பவருக்குள்ள கூலி யாது?

•    யார் ஒரேயடியாக அதனைக் கொள்கிறாரோ அவருக்கு 100 நன்மைகள் உண்டு.

77. நபியவர்கள் விரும்பியதும் பாத்திரமாக உபயோகிப்பதற்கு நாடியதுமான மரத்தின் பெயர் என்ன?

•    அத்துப்பா என்று அழைக்கப்படும் மரமாகும்.

78. அத்துப்பா என்று அழைக்கப்படும் மரத்தின் சிறப்பம்சங்கள் யாவை?

•    வேகமாக வளரக்கூடியது.

•    மிகச் சிறந்த கனியைத் தரக்கூடியது.

•    பச்சையாகவும் சமைத்தும் உண்ணக் கூடியது.

•    பெரிய இலைகளைக் கொண்டிருப்பதால் நிழல்தரக்கூடியது.

•    அதனை ஈ நெருங்காது.

79. அல்லாஹ் ஏன் நட்சத்திரங்களைப் படைத்தான்?

•    வானத்திற்கு அலங்காரமாக

•    ஷைத்தான்களுக்கு எரிகற்களாக

•    பாதையை அறிந்து கொள்ள வழிகாட்டியாக

80. அல்லாஹ் ஏன் கால்நடைகளைப் படைத்தான்?

•    கால் நடைகளில் சிலவற்றை ஏறிப்பிரயாணம் செய்வதற்கும், மேலும் சிலவற்றை உணவுக்கும், இன்னும் சிலவற்றை தூர இடங்களுக்கு பொதிகளைச் சுமந்து செல்வதற்கும், இன்னும் இவையல்லாத வேறு நலவுகளையும் கருத்திற்கொண்டு படைத்தான்.

81. "உங்களுடைய தாய்மார்களின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் மற்றொரு படைப்பாக மூன்று இருள்களில் (அவைகளுக்கிடையில்) உங்களைப் படைக்கின்றான்.” (அல்ஜுமர்: 06) என்ற வசனத்தில் அல்லாஹுத்தஆலா குறிப்பிடும் மூன்று இருள்களும் யாவை?

•    கருவறையின்  இருள், குழந்தைக்குப் பாதுகாப்பாக இருக்கும் மூடிய திறையின் இருள் (placenta), வயிற்றின் இருள்

82. இறுதிக் காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் மத்தியில் நடைபெறும் போரின் போது யூதர்களைக் காட்டிக் கொடுக்கும் மரத்தின் பெயர் என்ன?

•    அல்கர்கத்

83. கஃபாவுடைய உயரம் யாது?

•    13 மீட்டர்

84. அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் ஈச்சம் வித்து பற்றி மூன்று விடயங்களைக் குறிப்பிடுகின்றான். அவை எவை?

•    ஈச்சம் வித்தின் மேற்புறத்தில் குழியாகத் தென்படும் பகுதி

•    ஈச்சம் வித்தின் நடுவில் நூல் போன்ற அமைப்பில் தென்படும் பகுதி

•    ஈச்சம் வித்தை சூழவுள்ள மெல்லிய தோல் பகுதி

85. அல்லாஹ் அருள் புரிந்தவர்கள் யாவர்?

•    நபிமார்கள், உண்மையாளர்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள்

86. புத்தி எங்கே உள்ளது?

•    உள்ளத்தில்

87. நபியவர்களின் மரணத்தின் பின் அவர்களது மோதிரம் யாரிடம் இருந்தது?

•    ஆரம்பமாக அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பிறகு, உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பிறகு, உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் இருந்தது. பின்பு அது அவரிடமிருந்து அரீஸ் என்ற கிணற்றில் விழுந்தது.

88. ஒருவருக்கு இரு உள்ளங்கள் இருக்க முடியுமா?

•    முடியாது. அல்லாஹ் கூறுகின்றான்: "எம்மனிதனுக்கும் அவனுடைய உட்புறத்தில் இரண்டு இதயங்களை அல்லாஹ் அமைக்கவில்லை”. (அல்அஹ்ஸாப்: 04)

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்

-    தமிழாக்கம்: அபூஹுனைப்