இஸ்லாமிய வங்கிகள் என்று கூறப்படும் இடங்களில் பணி புரியலாமா?

بسم الله الرحمن الرحيم

வட்டியுடன் இயங்கக்கூடிய அனைத்து வங்கிகளிலும் வேலை செய்வதை விட்டும் தூரமாகிக் கொள்வது அவசியமாகும். இப்பெயர் அதற்குச் சூட்டப்பட்டாலும் சூட்டப்படாவிட்டாலும் சரியே! வட்டி சார்ந்த வங்கிகளில் வேலை செய்வதைப் பொறுத்தவரையில் அதன் உரிமையாளர் ஹராத்தையே சாப்பிடுகிறார். ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "மோசமான சம்பாத்தியத்தின் மூலம் வளர்ந்த எந்த மாமிசமும் நிச்சயமாக சுவனம் நுழையாது”. ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்ற அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் உள்ளதுபோல்: "அல்லாஹ் சிறந்தவன், அவன் சிறந்ததைத் தவிர வேறெதனையும் ஏற்றுக் கொள்ளமாட்டான்”. வட்டியைப் பொறுத்தவரையில் அது மோசமானதாகும். சிறந்த ஒன்றல்ல!

-    வழங்கியவர்: அஷ்ஷெய்ஹ் யஹ்யா அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ்

- நூல்: அல்கன்ஸுஸ் ஸமீன்

- தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்