கன்ஸுல் அத்பால் – 01

بسم الله الرحمن الرحيم

1.   "பரகத்" என்றால் என்ன?

•   பரகத் என்பது ஒரு விடயத்தில் இறை நலவு நிலைத்திருப்பதாகும்.

2.   ஒரு நூற்றாண்டின் கால எல்லை யாது?

•   நூறு வருடங்கள்

3.   தீய காரியங்கள் உண்டாவதற்குத் துணை நிற்கும் மூலப் பொருள் யாது?

•   மதுபானம்

4.   "ரகூப்” என்ற பதம் யாரைக் குறிக்கும்?

•   தனக்கு முன்னதாகத் தனது குழந்தைகளை இழக்காதவரைக் குறிக்கும்.

5.   "உம்மு மில்தம்” என்ற பதம் யாரைக் குறிக்கும்?

•   தோலிற்கும் சதையிற்கும் மத்தியில் உண்டாகும் காய்ச்சலைக் குறிக்கும்.

6.   "உம்மீ” என்பவர் யார்?

•   எழுத வாசிக்கத் தெரியாதவர்

7.   ஒரு முஃமினுடைய ஆயுதம் யாது?

•   துஆ

8.   ஆமீன் என்ற வார்த்தையின் பொருள் யாது?

•   இறைவா! பதிலளிப்பாயாக என்பதாகும்.

9.  பாரசீகம். ஹபஷா, ரோஃமாபுரி, எகிப்து மற்றும் யமன் ஆகிய நாடுகளின் மன்னர்கள் எப்பெயர்கள் கொண்டு அழைக்கப்படுவார்கள்?

•   பாரசீக மன்னன் - கிஸ்ரா

•   ஹபஷா நாட்டு மன்னன் - நஜ்ஜாஷி

•   ரோஃமாபுரி மன்னன் - கைஸர்

•   எகிப்து நாட்டு மன்னன் - முகவ்கிஸ்

•   யமன் நாட்டு மன்னன் - துப்பஉ

10.  இந்த உம்மத்தில் இறுதியாக வருவோரை எது சீர் செய்யும்?

•   அதன் ஆரம்பத்தை எது சீர் செய்ததோ அதுவே அதன் இறுதியையும் சீர் செய்யும்.

11.  "இஸ்லாத்தைக் கொண்டு அல்லாஹ் கௌரவப்படுத்திய ஒரு கூட்டம் தான் நாங்கள், எனவே நாங்கள் கண்ணியத்தை அதுவல்லாத ஒன்றைக் கொண்டு தேட முயற்சித்திருந்தால், அல்லாஹ் எங்களை இழிவுபடுத்தியிருப்பான்” என்ற வார்த்தையைக் கூறியவர் யார்?

•   உமர் இப்னுல் ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்

12.  "ஸைதிய்யா என்ற கொள்கை, செல்லும் பாதை எதுவென்ற அறிவில்லாத நிலைப்பாட்டில் உருப்பெற்றதாகும்” என்ற கருத்தைக் கூறிய அறிஞர் யார்?

•   அஷ்ஷெய்க் முக்பில் இப்னு ஹாதி அல்வாதிஇ ரஹிமஹுல்லாஹ் அவர்கள்

13.  "அல்இஹ்வானுல் முஸ்லிமூன் என்ற பிரிவு மார்க்கத்திற்குத் தலைமை தாங்குபவர்களல்லர்” என்று கூறிய அறிஞர் யார்?

•   அஷ்ஷெய்க் முக்பில் இப்னு ஹாதி அல்வாதிஇ ரஹிமஹுல்லாஹ்.

14.  ஹிஸ்பிய்யா - பிரிவினைவாதம் - இன் அடிப்படைகள் யாவை?

•   பொய், இருட்டடிப்பு, மோசடி

15.  ஒரு மனிதனில் காணப்படும் தீங்கான குணாதிசயங்கள் யாவை?

•   அதிகமாகப் பயப்படக்கூடிய உலோபித்தனமும் கிள்ளி எறியப்படத்தக்க கோழைத்தனமும் ஆகும்.

16.  "யவ்முல் மஸீத்” என்பது எத்தினத்தைக் குறிக்கும்?

•   வெள்ளிக்கிழமையைக் குறிக்கும்.

17.  இலைகள் விழாத, முஸ்லிமுக்கு ஒப்பான ஒரு மரம் உள்ளது அது எந்த மரம்?

•   ஈச்சம் மரம்

18.  மனிதனுடன் ஷைத்தான் எந்த இடத்தில் இராப் பொழுதைக் கழிக்கின்றான்?

•   அவனது மூக்கின் உச்ச பகுதியில்

19.  மனிதர்களுக்காக வேண்டி அமைக்கப்பட்ட முதல் ஆலயம் எது?

•   மக்காவில் உள்ள அல்பைத்துல் ஹராம் ஆகும்.

20.  அல்பைத்துல் ஹராமில் காணப்படும் தெளிவான அத்தாட்சிகள் சிலவற்றைக் குறிப்பிடுக.

•   மகாமு இப்றாஹீம், யார் அதனில் நுழைகிறாரோ அவர் அபயம் பெறுவார்.

21.  புனிதமிக்க மூன்று பள்ளிவாசல்களும் யாவை?

•   அல்மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிது ரஹூலில்லாஹ், அல்மஸ்ஜிதுல் அக்ஸா

22.  வருடத்தில் மகத்துவம் மிக்க இரவு எது?

•   ரமளானில் உள்ள லைலதுல் கத்ர் இரவு ஆகும்.

23.  வாரத்தில் மகத்துவம் மிக்க நாள் எது?

•   வெள்ளிக் கிழமை ஆகும்.

24.  முஸ்லிம்களின் பெருநாட்களைக் குறிப்பிடுக.

•   ஈதுல் அழ்ஹா, ஈதுல் பித்ர், வெள்ளிக் கிழமை, அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்கள்

25.  "பஹீமதுல் அன்ஆம்” என்ற வார்த்தை மூலம் நாடப்படும் கால் நடைகள் யாவை?

•   ஒட்டகம், மாடு, ஆடு

26.  மறுமை எப்போது நிகழும்?

•   அல்லாஹ்வைத் தவிர அதனை யாரும் அறியமாட்டார்கள்.

27.  "அஸ்ஸிராஜுன் வஹ்ஹாஜ்” (பிரகாசிக்கும் ஒளி விளக்கு) என்பதன் மூலம் நாடப்படுவது யாது?

•   சூரியன்

28.  சூரதுல் பாதிஹாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோபத்திற்குரியவர்களும் வழிதவறியவர்களும் யாவர்?

•   கோபத்திற்குரியவர்கள் யூதர்களும் வழிதவறியவர்கள் கிறிஸ்தவர்களும் ஆவர்.

29.  அல்லாஹ் பூமியை எதனைக் கொண்டு உறுதிப்படுத்தியுள்ளான்?

•   மலைகளைக் கொண்டு

30.  அல்லாஹ்விடத்தில் ஒரு நாளின் அளவு எவ்வளவு?

•   நாங்கள் மட்டிடக்கூடிய ஆயிரம் வருடங்களாகும்.

31.  வீடுகளில் மிக பலவீனமான வீடு எது?

•   சிலந்தி வலை

32.  அல்லாஹுத்தஆலா புனிதத்துவப்படுத்திய நகரம் யாது?

•   மக்கா

33.  "உம்முல் குரா” என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் நகரம் யாது?

•   மக்கா

34.  "தைபா”, "தாபா” ஆகிய பெயர்களைக் கொண்டு அழைக்கப்படும் நகரம் யாது?

•   மதீனா

35.  பின்வரும் வார்த்தைகளால் நாடப்படும் இரட்டைப் பொருட்கள் யாவை? ஸகலான், உமரான், கிப்லதான், ஹரமான், ஸஹீஹான், கமரான், அஸ்கரான், அஸ்வதான்

•   ஸகலான்: மனித ஜின் வர்க்கங்கள், உமரான்: அபூபக்கர் உமர் ரழியல்லாஹு அன்ஹுமா, கிப்லதான்: கஃபா அல்மஸ்ஜிதுல் அக்ஸா, ஹரமான்: மக்கா மதீனா, ஸஹீஹான்: புகாரி முஸ்லிம், கமரான்: சூரியன் சந்திரன், அஸ்கரான்: உள்ளம் நாவு, அஸ்வதான்: ஈச்சம் பழம் தண்ணீர்; அல்லது, பாம்பு தேள்

36.  அல்பகரா அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் மனிதர்களின் வர்க்கங்கள் யாவை?

•   முஃமின், காபிர், முனாபிக்

37.  அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மிக விருப்பதிற்குரிய நகரம் எது?

•   மக்கா

38.  பூமியில் அல்லாஹ்வுக்கு மிக உவப்பான இடங்கள் யாவை?

•   பள்ளிவாசல்கள்

39.  பூமியில் அல்லாஹ்வுக்கு மிகக் கோபத்திற்குரிய இடங்கள் யாவை?

•   கடைத்தொருக்கள்

40.  மனிதனின் மூட்டுக்கள் எத்தனை?

•   360

41.  ஹிஜ்ரி மாதங்களின் எண்ணிக்கை எத்தனை?

•   12

42.  ஹிஜ்ரி மாதங்களின் பெயர்களைக் குறிப்பிடுக?

•   முஹர்ரம், ஸபர், ரபீஉ அவ்வல், ரபீஉ ஸானி, ஜுமாதல் அவ்வல், ஜுமாதஸ் ஸானி, ரஜப், ஷஃபான், ரமளான், ஷவ்வால், துல் கிஃதா, துல் ஹிஜ்ஜா

43.  கண்ணியத்திற்குரிய மாதங்கள் யாவை?

•   துல் கிஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப்

44.  அநாதை என்பவர் யார்?

•   யார் பருவ வயதை அடைவதற்கு முன்பு அவருடைய தந்தையை இழக்கிறாரோ அவரே அநாதையாவார்.

45.  "இறைவா! இரு பலவீனமானவர்களின் உரிமைகளை நான் ஹராமாக்குகின்றேன்” என்று நபியவர்கள் கூறினார்கள். அவர்கள் இருசாராரும் யாவர்?

•   அநாதைகள், பெண்கள்

46.  எங்களுடைய நோன்பிற்கும் வேதம் கொடுக்கப்பட்டோரின் நோன்பிற்கும் மத்தியில் உள்ள வேறுபாடு யாது?

•   ஸகர் உணவை உற்கொள்வது

47.  அரபாத் தினம் எப்போது வரும்?

•   துல்ஹஜ் மாதத்தின் 9ஆவது நாள்

48.  ஆஷூரத் தினம் எப்போது வரும்?

•   முஹர்ரம் மாதத்தின் 10ஆவது நாள்

49.  நபியவர்கள் தனது ஹஜ்ஜின் போது தனது கரத்தினால் எத்தனை ஒட்டகங்களை அறுத்தார்கள்?

•   63 ஒட்டகங்களை

50.  அதன் போது எஞ்சிய ஒட்டகங்களை அறுத்தவர் யார்?

•   அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்

-    தொகுப்பு: அபூஹுனைப்