காபிர்களின் பண்டிகைகளில் பங்கேற்க முடியுமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: சில முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களின் பண்டிகைகளில் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் எவ்வாறான வழிகாட்டலை வழங்குவீர்கள்?

பதில்: முஸ்லிமான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் கிறிஸ்தவர்கள் அல்லது யூதர்கள் அல்லது அவர்களல்லாத காபிர்களின் பண்டிகைகளில் கலந்து கொள்ள முடியாது. மாற்றமாக, அதனைத் தவிர்ப்பது வாஜிபாகும். ஏனெனில், "யார் ஒரு கூட்டத்தாரை ஒத்து நடக்கிறாரோ அவர் அக்கூட்டத்தாரைச் சார்ந்தவராவார்.” நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பொறுத்தளவில் அத்தகையவர்களுக்கு ஒப்பாக நடத்தல் மற்றும் அவர்களுடைய பண்பாடுகளை உள்வாங்கல் போன்றவற்றிலிருந்தும் எங்களை எச்சரித்துள்ளார்கள். எனவே, விசுவாசியான ஆணும் பெண்ணும் இது விடயத்தில் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். மேலும், எந்தவிதத்திலும் இவ்விருசாராரும் அதற்கு உறுதுணையாக இருக்கக் கூடாது. ஏனெனில், அப்பண்டிகைகள் மார்க்கத்திற்கு முரணானவையாகும். எனவே, அவற்றில் பங்கேற்கவோ அவர்களுக்கு எந்தவிதத்திலும் உதவி ஒத்தாசைகள் செய்திடவோ முடியாது. (அத்தகைய உதவி ஒத்தாசைகள்) கோப்பி தேநீர் மற்றும் பாத்திர வசதி போன்றவற்றைச் செய்து கொடுப்பதாக இருந்தாலும் சரியே! ஏனெனில், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "நல்ல காரியத்திலும் இறையச்சமுள்ள காரியத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து கொள்ளுங்கள்! மேலும், பாவமான காரியத்திலும் அத்துமீறக்கூடிய காரியத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்! இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவனாக இருக்கின்றான்.” எனவே, காபிர்களுடன் அவர்களது பண்டிகைகளில் பங்கேற்பது பாவத்திற்கும் அத்துமீறலுக்கும் அவர்களுக்கு உதவியாக இருப்பதைப் போன்றாகும்.

-    பார்க்க: மஜ்மூஉ பதாவா ஷெய்க் இப்னி பாஸ் (6/405)

-    தமிழில்: அபூஹுனைப்