பெண்கள் அலங்காரம் – 04

بسم الله الرحمن الرحيم

தலைமுடியைப் பிரித்து வாருதல்

பெண்கள் தலைவாரும் போது தலையின் ஒரு புறத்தால் பிரித்து வாருவதின் சட்டம் யாது? என்பது தொடர்பாக அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் வினவப்பட்டபோது: "முடியை தலையின் மத்திய பகுதியால் பிரித்து வாருவதே சுன்னாவான நடைமுறையாகும். பொதுவாகத் தலை முடியானது முன்னால், பின்னால், வலதால், இடதால் என பல திசைகளினால் வார முடியுமானதாக இருந்த போதிலும் தலையின் மத்திய பகுதியால் பிரித்து வாருவதே மாக்கமாக்கப்பட்ட அமைப்பாகும். மாற்றமாக, ஒரு புறத்தால் பிரித்து வாருவது மாக்கமாக்கப்படாததும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஒப்பாவதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்த வெட்கம், மார்க்கம் ஆகியவற்றைவிட்டும் சாய்ந்து செல்லக்கூடிய பெண்களுக்கு ஒப்பாவதுமான செயலாக உள்ளது” என்கிறார்கள். (பதாவா ஸீனதி வதஜ்மீலின் நிஸா: 34)

மேலும், இது விடயம் குறித்து அஷ்ஷெய்க் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் வினவப்பட்டபோது: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைக்கு மாற்றமாக அமைவதால் நிச்சயமாக அது வெறுக்கத்தக்கதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பொறுத்தளவில் தனது இறுதிக்காலப்பகுதியில் தலையை மத்திய பகுதியால் பிரித்து வாரக்கூடியவர்களாக இருந்தார்கள்."

-    அபூஹுனைப்