கையடக்கத் தொலைபேசியின் சத்தத்தின் மூலம் பள்ளிவாசலினுள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போரை இடையூறு செய்வதின் சட்டம்.

بسم الله الرحمن الرحيم

கேள்வி: தொழுகையாளியை தொழுகையின் நேரத்திலும் கல்விசார் பாடங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்போரை அதன் நேரத்திலும் இடையூறு செய்யும் அமைப்பில் தொலைபேசியின் ஓசையை ஒலி பெருக்க வைப்பதின் சட்டம் யாது?

பதில்: எவர்கள் தொழுகையில் அல்லது பாடங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை இடையூறு செய்யும் விதத்தில் இவ்வாறு நடந்து கொள்வது கூடாது. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாகத் தொழுகையில் ஓர் ஈடுபாடு இருக்கிறது.” மேலும் கூறினார்கள்: "உங்களில் சிலர் சிலருக்கு இடைஞ்சலாக அல்குர்ஆனை சத்தமிட்டு ஓதாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒவ்வொருவரும் தன்னுடைய இரட்சகனிடம் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள்.”

இப்படியிருக்க, அல்லாஹ்வுடன் உரையாடிக் கொண்டிருப்பவரை இடையூறு செய்வதற்கு உனக்கு என்ன நேர்ந்தது?! எனவே, எவர் பள்ளிவாசலுக்கு அல்லது பாடத்திற்கு சமுகம் தருகிறாரோ அவர் தனது கையடக்கத் தொலைபேசியை செயலிழக்கச் செய்யட்டும்! பின்பு தொழுகையில் அல்லது பாடத்தில் பிரவேசிக்கட்டும்!

வழங்கியவர்: அபூஅப்திர் ரஹ்மான் யஹ்யா இப்னு அலீ அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ்

தமிழில்: அபூஹுனைப்