எண்ணை தடவப்பட்ட நிலையில் தலையை மஸ்ஹு செய்வதின் சட்டம்.

بسم الله الرحمن الرحيم

கேள்வி: தலையில் அல்லது உடம்பில் எண்ணை பூசியிருக்கும் நிலையில் வுழூச் செய்தால் அவருடைய வுழூ அங்கீகரிக்கப்படுமா?

பதில்: எண்ணை மற்றும் மருதாணி போன்றவற்றைப் பயன்படுத்தியவர் தலையை மஸ்ஹு செய்தால் அவருடைய வுழூ செல்லுபடியாகும். அதன் போது, நீர் முடியை சென்றடையாமல் இருந்தாலும் சரியே! இப்படியான விடயங்கள் குற்றம் பிடிக்கப்படாமல் விடப்படக்கூடியனவாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் தனது தலைக்கு எண்ணையிட்டார்கள் என்ற செய்தி இதற்குப் போதிய சான்றாகும்.

வழங்கியவர்: இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் (திறந்த சந்திப்பு இல: 25)

தமிழில்: அபூஹுனைப்