திருமணத்தைப் பள்ளிவாசலில் பகிரங்கப்படுத்துதல்!

بسم الله الرحمن الرحيم

'இத்திருமணத்தைப் பள்ளிவாசலில் பகிரங்கப்படுத்துங்கள். மேலும், அதற்காக மேளம் கொட்டுங்கள்" என்ற செய்தி நபியவர்களைத் தொட்டும் உறுதி செய்யப்பட்ட ஒன்றா?

மேற்குறித்த செய்தியில் இடம்பெறும் பள்ளிவாசல் என்ற வாசகம் உறுதி செய்யப்பட்ட அறிவிப்பன்று. மாற்றமாக 'இத்திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்! மேலும், அதற்காக மேளம் கொட்டுங்கள்" என்பதுவே உறுதி செய்யப்பட்ட அறிவிப்பாகும்.

-           பார்க்க: “அல்கன்ஸுஸ் ஸமீன் பில் இஜாபதி அலா அஸ்இலதி தலபதில் இல்ம் வஸ்ஸாஇரீன்” பகுதி – 02

-           தமிழில்: அபூஹுனைப்