‘சீனா தேசம் சென்றாலும் சீர் கல்வி கற்றுக் கொள்!’

بسم الله الرحمن الرحيم

கேள்வி: 'சீனா தேசம் சென்றாலும் சீர் கல்வி கற்றுக் கொள்!' என்ற செய்தி நபியவர்களைத் தொட்டும் உறுதிசெய்யப்பட்ட ஒன்றா?

விடை: 'சீனா தேசம் சென்றாலும் சீர் கல்வி கற்றுக் கொள்!' என்பது பிழையான ஒரு செய்தியாகும். சில அறிஞர்கள் இச்செய்திக்கு எவ்வித அடிப்படையும் இல்லை என்று கூறுகின்றார்கள். மற்றும் சிலர் இச்செய்தி நபியவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்றும் கூறுகின்றார்கள். இச்செய்தியை இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அல்மீஸான்” எனும் நூலில் “அபூ ஆதிகா தரீப் இப்னு சுலைமான்” என்பவருடைய அறிமுகவுரையில் குறிப்பிட்டு இதனை அவருடைய நிராகரிக்கத்தக்க செய்திகளில் உள்ளது என்றும் இவருடைய ஹதீஸ்கள் எழுதப்படமாட்டாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

-           பார்க்க: “அல்கன்ஸுஸ் ஸமீன் பில் இஜாபதி அலா அஸ்இலதி தலபதில் இல்ம் வஸ்ஸாஇரீன்” பகுதி - 02

-           தமிழில்: அபூஹுனைப்