சிங்களப் பேரினவாதிகளின் தீவிரவாத நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட எம் சகோதரர்களுக்காகக் கையேந்துவோம்.

بسم الله الرحمن الرحيم

தினந்தோறும் சிங்களப் பேரினவாதிகளினால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலசூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். முஸ்லிம்களை முழுமையாகத் தாழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில் அவர்களின் உடைமைகளைத் தீக்கிரையாக்கிவருகிறார்கள் என்பதையும் நீங்கள் கண்ணுற்றிருப்பீர்கள். பௌத்தர்களின் இத்தீவிரவாத நடவடிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் காட்டுத் தீ போன்று பரவிக்கொண்டிருக்கின்றது. இதுவரைக்கும் பல கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இத்தனைக்கும் மத்தியில் மக்களின் உரிமைகளுக்குப் பொறுப்புதாரர்களாக இருக்கக்கூடிய அரசியல் தலைமைகளும் பாதுகாப்புத்தரப்பினர்களும் பயிர்களை மேய்கின்றன வேலிகளாகச் செயற்பட்டுவருகின்றன. அல்லாஹ் போதுமானவன்!

இத்தகைய சந்தர்ப்பத்தில் பௌத்தர்களின் கெடுபிடிகளில் இருந்தும் ஈடேற்றம் பெற்றிருக்கின்ற சகோதரர்களாகிய எம்மீது ஒரு பெரும் பொறுப்பு உள்ளது. அதுவே அவர்களுக்காக துஆச் செய்வதாகும். அதிலும் குறிப்பாக நபியவர்கள் சுன்னாவில் இருந்தும் காட்டித்தந்த குனூதுந் நாஸிலாவை ஐங்காலத் தொழுகைகளில் ஓதிவர வேண்டும். நபியவர்கள் மற்றும் ஸகாபாக்களின் காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக காபீர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது நபியவர்களும் ஸகாபாக்களும் குனூதுந் நாஸிலாவை ஓதி வந்தார்கள். இதனை உறுதி செய்யக்கூடிய சில ஆதாரங்கள் முஸ்லிம் எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளன. அவைகுறித்த சுருக்க விளக்கம் ஒன்றை அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் ஹிஜ்ரி 18 ஷஃபான் 1435 அன்று இஷாத் தொழுகையைத் தொடர்ந்து நடாத்தினார்கள். அதன் தமிழ் மொழிபெயர்ப்பையே இங்கு பதிவு செய்துள்ளோம்.

எனவே, நாமும் நம் சகோதரர்களுக்காக வேண்டி குனூதுந் நாஸிலா ஓதிப் பிரார்த்     திப்போம்!

[audio:http://www.salafvoice.org/audio_db/45541212.mp3]

Click Here to Download