அல்கவாஇதுல் அர்பஉ தமிழாக்கம் – 03

بِسْــــــمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيـــــمِ

الْقَاعِدَةُ الثَّالِثَةُ
 
أَنَّ النَّبِيَّ ـ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ ظَهَرَ عَلَى أُنَاسٍ مُتَفَرِّقِينَ فِي عِبَادَاتِهِمْ، مِنْهُمْ مَنْ يَعْبُدُ الْمَلائِكَةَ، وَمِنْهُمْ مَنْ يَعْبُدُ الأَنْبِيَاءَ وَالصَّالِحِينَ، وَمِنْهُمْ مَنْ يَعْبُدُ الأَشْجَارَ وَالأَحْجَارَ، وَمِنْهُمْ مَنْ يَعْبُدُ الشَّمْسَ وَالْقَمَرَ، وَقَاتَلَهُمْ رَسُولُ اللهِ ـ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ وَلَمْ يُفَرِّقْ بَيْنَهُمْ؛ وَالدَّلِيلُ قَوْلُهُ تَعَالَى: وَقَاتِلُوهُمْ حَتَّى لاَ تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلّه -   الأنفال: 39.
 وَدَلِيلُ الشَّمْسِ وَالْقَمَرِ؛ قَوْلُهُ تَعَالَى: وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لاَ تَسْجُدُوا لِلشَّمْسِ وَلاَ لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ -  فصلت: 37.
وَدَلِيلُ الْمَلائِكَةِ؛ قَوْلُهُ تَعَالَى: وَلاَ يَأْمُرَكُمْ أَن تَتَّخِذُواْ الْمَلاَئِكَةَ وَالنِّبِيِّيْنَ أَرْبَاباً... الآية -  آل عمران: 80. وَدَلِيلُ الأَنْبِيَاءِ؛ قَوْلُهُ تَعَالَى: وَإِذْ قَالَ اللّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ ءَأَنتَ قُلتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَـهَيْنِ مِن دُونِ اللّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ -  الآية المائدة: 116
وَدَلِيلُ الصَّالِحِينَ؛ قَوْلُهُ تَعَالَى: أُولَـئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ...  -الآية الإسراء: 57.
وَدَلِيلُ الأَشْجَارِ وَالأَحْجَارِ؛ قَوْلُهُ تَعَالَى: أَفَرَأَيْتُمُ اللاَّتَ وَالْعُزَّى ، وَمَنَاةَ الثَّالِثَةَ الأُخْرَى -  النجم: 91 ، 20
وَحَدِيُث أَبِي وَاقِد اللَّيْثِيِّ ـ رَضِيَ اللهُ عَنْهُ ـ قَالَ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ ـ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ إِلَى حُنَيْنٍ وَنَحْنُ حُدَثَاءُ عَهْدٍ بِكُفْرٍ، وَلِلِمُشْرِكِينَ سِدْرَةٌ، يَعْكُفُونَ عِنْدَهَا وَيُنَوِّطُونَ بِهَا أَسْلِحَتَهُمْ، يُقَالَ لَهَا ذَاتُ أَنْوَاطٍ، فَمَرَرْنَا بِسِدْرَةٍ فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ. الحَدِيثَ.

 

மூன்றாவது கோட்பாடு

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வணக்க வழிபாடுகளில் வேறுபட்டிருக்கும் மக்களிடமே வெளிப்பட்டார்கள். அவர்களில் சிலர் மலாஇகாமார்களை வணங்குபவர்களாக இருந்தனர். இன்னும் சிலர் நபிமார்களையும் நல்லடியார்களையும் வணங்குபவர்களாக இருந்தனர். இன்னும் சிலர் கற்களையும் மரங்களையும் வணங்குபவர்களாக இருந்தனர். இன்னும் சிலர் சூரியனையும் சந்திரனையும் வணங்குபவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவருடனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போரிட்டார்கள். அவர்களுக்கு மத்தியில் அவர் பிரித்துப் பார்க்கவில்லை.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: குழப்பம் நீங்கி மார்க்கம் அல்லாஹ்வுக்கு உரித்தாகும் வரை அவர்களுடன் போரிடுங்கள்.

-     அல்பகறா: 193

சூரியனையும் சந்திரனையும் வணங்குபவர்களாக இருந்தார்கள் என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையே இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியனவாகும். சூரியனுக்கோ சந்திரனுக்கோ நீங்கள் சிரம்பணிய வேண்டாம்.

-     புஸ்ஸிலத்: 37

மலாஇகாமார்களை வணங்குபவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: வானவர்களையும் நபிமார்களையும் கடவுள்களாக எடுத்துக் கொள்ளுமாறு உங்களை ஏவுவதற்கும் - அவருக்கு அனுமதியில்லை -

-     ஆல இம்ரான்: 80

நபிமார்களை வணங்குபவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும் எனது தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா? என அல்லாஹ் கேட்கும்போது  அதற்கவர்: நீ மிகத்தூய்மையானவன், எனக்கு உரிமையில்லாதவற்றை நான் சொல்வதற்கு எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் இருப்பதை நீ அறிவாய். ஆனால் உன் உள்ளத்தில் இருப்பதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன் என்று கூறுவார்.

-     அல்மாஇதா: 116

நல்லவர்களை வணங்குபவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: யாரை இவர்கள் அழைக்கின்றார்களோ அவர்களில் - அல்லாஹ்வுக்கு - மிக நெருக்கமானவர்களும் தமது இரட்சகனின் பால் நெருங்கும் வழியைத் தேடுகின்றனர். இன்னும் அவனது அருளை ஆதரவு வைக்கின்றனர். இன்னும் அவனது தண்டனையை அஞ்சுகின்றனர்.

-     அல்இஸ்ரா: 57

கற்களையும் மரங்களையும் வணங்குபவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: லாத்தையும் உஸ்ஸாவையும் மூன்றாவதான மற்றொரு மனாத்தையும் நீங்கள் பார்த்தீர்களா?

 - அந்நஜ்ம்: 19,20

அபூவாகித் அல்லைஸீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஹதீஸும் இதற்கு ஆதாரமாகும். அவர்கள் கூறுகின்றார்: நாங்கள் புதிதாக இஸ்லாத்தை ஏற்று இருக்கின்ற நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹுனைனுக்குப் புறப்பட்டோம். இணைவைப்பாளர்களுக்கு அவர்கள் தங்கியிருக்கக்கூடிய ஒரு பெரிய மரம் காணப்பட்டது. அதிலே அவர்கள் அவர்களுடைய ஆயுதங்களை கொழுவி வைப்பார்கள். அதற்கு தாது அன்வாத் என்று கூறப்படும். நாங்களும் ஒரு பெரிய மரத்தை கடந்து சென்றோம். அப்போது நாம்: அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு தாது அன்வாத் என்ற மரம் இருக்கின்றதைப் போன்று எங்களுக்கும் தாது அன்வாத் என்ற மரமொன்றை ஏற்படுத்தித் தாருங்கள் என்று நாம் கூறினோம்.

 

الْقَاعِدَةُ الرَّابِعَةُ
 
أَنَّ مُشْرِكِي زَمَانِنَا أَغْلَظُ شِرْكًا مِنَ الأَوَّلِينَ، لأَنَّ الأَوَّلِينَ يُشْرِكُونَ فِي الرَّخَاءِ، وَيُخْلِصُونَ فِي الشِّدَّةِ، وَمُشْرِكُو زَمَانِنَا شِرْكُهُمْ دَائِمٌ فِي الرَّخَاءِ وَالشِّدَّة؛ وَالدَّلِيلُ قَوْلُهُ تَعَالَى: فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ  العنكبوت: 65
تَمَّتْ وَصَلَّى اللهُ عَلَى مُحَمَّدٍ وعلى َآلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ
 

நான்காவது கோட்பாடு

எமது காலத்தில் உள்ள இணைவைப்பாளர்கள் ஆரம்பத்தில் இருந்தவர்களைவிட இணைவைக்கின்ற விடயத்தில் மிகக்கடுமையானவர்கள். ஏனென்றால் ஆரம்பத்தில் இருந்தவர்கள் வசதியான காலத்தில் இணைவைப்பார்கள், கடுமையான நேரங்களில் உளத்தூய்மையுடன் இருப்பார்கள். எங்களுடைய காலத்தில் இருக்கின்ற இணைவைப்பாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுடைய இணைவைப்பு வசதியான காலத்திலும் கடுமையான நேரங்களிலும் தொடர்ந்து இருக்கின்றது.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவர்கள் கப்பலில் ஏறிப் பயணித்தால் கலப்பற்றவர்களாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனை அழைப்பார்கள். அவன் அவர்களைக் கரையின்பால் காப்பாற்றும் பொழுது அவர்கள் அவனுக்கு இணைவைக்கின்றனர்.

-     அல்அன்கபூத்: 65

இத்துடன் நிறைவுறுகின்றது.  நபியவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள் அனைவர்கள் மீதும் ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக!

குறிப்பு: இந்நூலுக்கான விளக்கவுரைகளைப் பல அறிஞர்கள் எழுத்து மூலமாகவும் உரைகள் மூலமாகவும் வழங்கியிருக்கின்றார்கள். அவர்களுள் தற்காலத்தில் சவூதி அரேபியாவின் அறிஞர்கள் மூதவையின் உறுப்பினர்களில் ஒருவராக அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்களும் ஒருவராவார். அவர் வழங்கிய விளக்கவுரையை மையமாக வைத்து எமது அத்தார் அஸ்ஸலபிய்யாப் பள்ளிவாசலில் தினம் தோறும் சுபஹுத் தொழுகையைத் தொடர்ந்து ஒரு வகுப்பு நடைபெற்று வந்தது. இன்ஷா அல்லாஹ் அதன் ஒலிப்பதிவுகளை அடுத்தடுத்த தொடர்களில் உங்களுக்கு வழங்கவுள்ளோம். தாங்களும் கேட்டுப் பயன்பெறுவதுடன் பிறரையும் பயனடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

-     அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்