அல்கவாஇதுல் அர்பஉ தமிழாக்கம் – 02

بِسْــــــمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيـــــمِ

الْقَاعِدَةُ الأُولَى
 
أَنْ تَعْلَمَ أَنَّ الْكُفَّارَ الَّذِينَ قَاتَلَهُمْ رَسُولُ اللهِ ـ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ مُقِرُّونَ بِأَنَّ اللهَ ـ تَعَالَى ـ هُوُ الْخَالِقُ، الْمُدَبِّرُ، وَأَنَّ ذَلِكَ لَمْ يُدْخِلَهُمْ فِي الإِسْلامِ؛ وَالدَّلِيلُ قَوْلُهُ تَعَالَى: قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالأَرْضِ أَمَّن يَمْلِكُ السَّمْعَ والأَبْصَارَ وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيَّتَ مِنَ الْحَيِّ وَمَن يُدَبِّرُ الأَمْرَ فَسَيَقُولُونَ اللّهُ فَقُلْ أَفَلاَ تَتَّقُون  يونس: 31.
 

முதலாவது கோட்பாடு

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர் செய்த நிராகரிப்பாளர்கள் நிச்சயமாக அல்லாஹ் தான் படைப்பாளன், நிர்வாகிக்கக்கூடியவன் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்பதை நீ அறிந்து கொள்வதாகும். நிச்சயமாக அது அவர்களை இஸ்லாத்தில் நுழைவிக்கவில்லை.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும் பார்வைகளையும் உரிமையாக்கிக் கொள்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துபவனும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துபவனும் யார்? மேலும், - அகிலத்தின் - காரியத்தை நிர்வகிப்பவர்கள் யாவர்? என்று - நபியே! - நீர் கேட்பீராக! அதற்கவர்கள் அல்லாஹ்தான் என்று கூறுவார்கள். எனவே நீங்கள் அவனை அஞ்சி நடக்க வேண்டாமா? என்று நீர் கேட்பீராக.

-     யூனுஸ்: 31

الْقَاعِدَةُ الثَّانِيَةُ
 
أُنَّهُمْ يَقُولُونَ: مَا دَعَوْنَاهُمْ وَتَوَجَّهْنَا إِلَيْهِمْ إِلا لِطَلَبِ الْقُرْبَةِ وَالشَّفَاعَةِ، فَدَلِيلُ الْقُرْبَةِ؛ قَوْلُهُ تَعَالَى: وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَآء مَا نَعْبُدُهُمْ إِلاَّ لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ إِنَّ اللَّهَ لاَ يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ. الزمر: 3. وَدَلِيلُ الشَّفَاعَةِ، قَوْلُهُ تَعَالَى: وَيَعْبُدُونَ مِن دُونِ اللّهِ مَا لاَ يَضُرُّهُمْ وَلاَ يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَـؤُلاء شُفَعَاؤُنَا عِندَ اللّهِ . يونس: 18
وَالشَّفَاعَةُ شَفَاعَتَانِ: شَفَاعَةٌ مَنْفِيَّةٌ، وَشَفَاعَةٌ مُثْبَتَةٌ.
فَالشَّفَاعَةُ الْمَنْفِيَّةُ: مَا كَانَتْ تُطْلَبُ مِنْ غَيْرِ اللهِ فِيمَا لا يَقْدِرُ عَلَيْهِ إِلا اللهُ؛ وَالدَّلِيلُ قَوْلُهُ تَعَالَى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ أَنفِقُواْ مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لاَّ بَيْعٌ فِيهِ وَلاَ خُلَّةٌ وَلاَ شَفَاعَةٌ وَالْكَافِرُونَ هُمُ الظَّالِمُونَ .  البقرة: 254
وَالشَّفَاعَةُ الْمُثْبَتَةُ: هِيَ الَّتِي تُطْلَبُ مِنَ اللهِ ، وَالشَّافِعُ مُكَرَّمٌ بِالشَّفَاعَةِ، وَالْمَشْفُوعُ لَهُ مَنْ رَضِيَ اللهُ قَوْلَهُ وَعَمَلَهُ بَعْدَ الإِذْنِ ؛ كَمَا قَالَ تَعَالَى: مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ . البقرة: 255
 

இரண்டாவது கோட்பாடு

அவர்கள் - காபிர்கள் - நாம் அவைகளை அழைத்ததும் அவைகளின்பால் முன்னோக்கிச் சென்றதும் நெருக்கத்தையும் பரிந்துரையையும் தேடுவதற்காகவே அன்றி வேறில்லை என்று கூறுகின்றார்கள்.

அவர்கள் நெருக்கத்தை தேடுவதற்குரிய ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: எவர்கள் அவனையன்றி வேறு பாதுகாவலர்களை எடுத்திக்கொண்டார்களோ அவர்கள், இவர்கள் அல்லாஹ்விடம் எமக்கு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்திவைப்பதற்காகவே நாம் இவர்களை வணங்குகின்றோம் - எனக்கூறுகின்றனர். - அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ, அதில் அவர்களுக்கிடையே நிச்சயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் பொய்யனையும் நிராகரிப்பவனையும் நேர்வழியில் செலுத்தமாட்டான்.

-     அஸ்ஸுமர்: 3

அவர்கள் பரிந்தரை செய்வதற்குரிய ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவர்கள் அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீங்களிக்காத இன்னும் பயனளிக்காதவற்றை வணங்குகின்றார்கள். இன்னும், இவைகள்தாம் அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு பரிந்துரை செய்பவர்கள் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

-     யூனுஸ்: 18

பரிந்துரை இரண்டு வகையான பரிந்துரையாகும்.

முதலாவது: இல்லாமலாக்கப்பட்ட பரிந்துரை

இரண்டாவது: உறுதியாக்கப்பட்ட பரிந்துரை

இல்லாமாலாக்கப்பட்ட பரிந்துரை என்றால் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் சக்திபெறாத விடயங்களில் அல்லாஹ் அல்லாதவர்களிடம் வேண்டப்படக்கூடிய பரிந்துரையாகும்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: விசுவாசிகளே! எவ்விதப் பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத ஒரு நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவு செய்யுங்கள். நிராகரிப்பாளர்களே அநியாயக்காரர்கள்.

-     அல்பகறா: 254

உறுதியான பரிந்துரை என்றால் அதுவே அல்லாஹ்விடம் வேண்டப்படக்கூடியதாகும். பரிந்துரை செய்பவர் அப்பரிந்துரையைக்கொண்டு கண்ணியப்படுத்தப்பட்டவராவார். பரிந்துரை செய்யப்பட்டவர் யாரென்றால் அனுமதிக்குப் பின் அல்லாஹ் யாருடைய வார்த்தையையும் செயலையும் பொருத்திக் கொள்கின்றானோ அப்படிப்பட்டவராவார்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யார்தான் பரிந்துரை செய்ய முடியும்?

-     அல்பகறா: 255

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்