ஹதீஸ் விளக்கம்

بسم الله الرحمن الرحيم

إن الحمد لله نحمده و نستعينه و نستغفره و نعود بالله من شرور أنفسنا و من سيئات أعمالنا، من يهديه الله فلا مضل له و من يضلل فلا هادي له و أشهد ان لا إله إلا الله وحده لا شريك له و أشهد أن محمدا عبده ورسوله۔

يَا أيّها الّذِينَ ٱمَنُوا اتّقوا اللّهَ حَقّ تُقَاتِهِ وَ لَا تَمُوتُنّ إِلّا و أنتُم مّسلِمُون

آل عمران : ١٠٢

يَا أَيّهَا النّاسُ اتّقُوا رَبّكُمُ الّذِي خَلَقَكُم مّن نّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتّقُوا اللّهَ الّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأرْحَامَ إِنّ اللّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

النساء: ١

يَا أَيّهَا الّذِينَ آمَنُوا اتّقُوا اللّهَ وَقُولُوا قَوْلًا سَدِيد اً يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًاعَظِيمًا

الأحزاب: ٧١

أما بعد، فإن خير الحديث كتاب الله و خير الهدي هدي محمد صلى الله عليه و سلم، و شرالأمور محدثاتها، وكل محدثة بدعة، و كل بدعة ضلالة، وكل ضلالة في النار

أن عمر بن أبي سلمة يقول :كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك فما زالت تلك طعمتي بعد - صحيح البخاري ومسلم

நிச்சயமாக உமர் பின் அபீ ஸலமா ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறுகின்றார்கள் "நான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொறுப்பில் இருந்தேன், உணவுத் தட்டிலே என் கரம் அங்கும் இங்கும் அழைந்து திரிந்தது (அப்போது) நபியவர்கள் "சிறுவனே! அல்லாஹ்வின் நாமம் கூறுவீராக, இன்னும் உனது வலக்கரத்தால் உண்பாயாக, இன்னும் உன் புறத்தில் உள்ளதைச் சாப்பிடுவாயாக" என்று எனக்குக் கூறினார்கள். "அதற்குப் பின் எனது உணவுப் பரிமாற்றம் இப்படியே இருந்தது."
(நூல் - புகாரி முஸ்லிம்)

இந்த நபிமொழியில் உணவுப் பரிமாற்றத்தின் போது பேணப்பட வேண்டிய சில ஒழுங்கு முறைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

1. அல்லாஹ்வின் பெயர் கூறுதல்.

2. வலக்கரத்தால் சாப்பிடுதல்.

3. பக்கத்தில் உள்ளதைச் சாப்பிடுதல்.

முதலாவது - அல்லாஹ்வின் நாமம் கூறுதல்

இதனை நாம் மூன்று வகையில் நோக்கலாம்

1. அல்லாஹ்வின் நாமம் கூறப்பட வேண்டிய முறை

2. அதற்குரிய சட்டம்

3. ஏன் அல்லாஹ்வின் நாமம் கூறப்பட வேண்டும்

அல்லாஹ்வின் நாமம் கூறப்பட வேண்டிய முறை

بسم الله என்று தான் கூற வேண்டும்

عن ‏عائشة ‏ ‏قالت ‏ قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏إذا أكل أحدكم طعاما فليقل بسم الله فإن نسي في أوله فليقل بسم الله في أوله وآخره ‏(الترمذي وأبو داود

உங்களில் ஒருவர் உணவை உண்டால் "பிஸ்மில்லாஹ்" என்று கூறட்டும், அவர் ஆரம்பத்தில் அதனைக் கூற மறந்து விட்டால் "பிஸ்மில்லாஹி பீ அவ்வலிஹி வஆஹிரிஹி " என்று கூறட்டும் என ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அறிவிப்பவர் - ஆயிஷா ரழியல்லாஹூ அன்ஹா
நூல் - திர்மிதி, அபூதாவூத்

بسم الله الرحمن الرحيم என்று சாப்பிடும் போது கூறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?

ஒவ்வொரு கவளத்திற்கும் بسم الله என்று கூற வேண்டுமா?

بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسول الله என்று கூறுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா?

இவ்வாறான எந்த வார்த்தைக்கும் அல்லது ஒவ்வொரு கவளத்திற்கும் "பிஸ்மில்லாஹ்" என்று கூற வேண்டும் என்று எந்த ஆதாரங்களும் கிடையாது. இது ஷரீஅத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். அல்லாஹ்வின் நாமங்களைக் கூறுவது பிழையா? என்றும் சிலர் கேட்பதுண்டு. பிழை என்று தான் நாம் கூறுவோம். ஏனெனில், இம்மார்க்கத்தை நமக்கு வழங்கியன் இறைவன் அவன் தன் தூதருக்கு எந்தெந்த விடயங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவன் தான் கற்றுக் கொடுத்திருக்கின்றான். எனவே உண்ணும் போது ஆரம்பத்தில் 'பிஸ்மில்லாஹ்' என்று கூற வேண்டும் என்று அவன் தான் நபியவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளான். அல்;;;;லாஹ் தான் மார்க்கமாக்காத ஒன்றை மார்க்கமாக நாம் செய்வதை அங்கீகரிக்க மாட்டான். அதற்கு பாவமே நமக்குக் கிட்டும். ஷரீஅத்தில் கூறப்பட்ட அம்சங்களை மாத்திரம் ஏற்று நடைமுறைப்படுத்துவது தான் ஒரு முஸ்லிமின் பண்பாகும்.

அல்லாஹ்வின் பெயர் கூறுவதன் சட்டம்

இமாம் நவவி ரஹிமஹூல்லாஹ் 'முஸ்தஹப்' என்று கூறுகின்றார்கள். ஆனால், பெரும்பான்மையான உலமாக்கள் 'வாஜிப்' என்று கூறுகின்றார்கள். ஏனெனில், நபியவர்கள் "சிறுவனே அல்லாஹ்வின் நாமம் கூறு" என்றும் உங்களில் ஒருவர் உணவை உண்டால் பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும் நிச்சயமாக அவர் ஆரம்பத்தில் அதனைக் கூற மறந்து விட்டால் "பிஸ்மில்லாஹி பீ அவ்வலிஹி வஆஹிரிஹி" என்று கூறட்டும் என கட்டளையிட்டுக் கூறுகின்றார்கள்.

ஏன் அல்லாஹ்வின் நாமம் கூற வேண்டும் ?

இதில் மூன்று ஹிக்மத்கள் (எதார்த்தங்கள்) காணப்படுகின்றன

1. உண்பதில், விழுங்குவதில், உணவைத் தேடுவதில் மற்றுமுள்ள விடயங்களில் அல்லாஹ்வைக் கொண்டு உதவி தேடுதல்.

2. அல்லாஹ்வின் பெயர் கூறுவது கொண்டு பரகத் நாடப்படுகின்றது.

3. ஷைத்தான் எமது உணவில் உண்பதிலிருந்தும் குடிப்பதிலிருந்தும் தடுக்கப்படுகின்றான்.

عن جابر بن عبد الله أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إذا دخل الرجل بيته فذكر الله عند دخوله وعند طعامه قال الشيطان لا مبيت لكم ولا عشاء وإذا دخل فلم يذكر الله عند دخوله قال الشيطان أدركتم المبيت وإذا لم يذكر الله عند طعامه قال أدركتم المبيت والعشاء - مسلم

ஒரு மனிதன் தனது வீட்டிற்குள் நுழையும் போதும், தனது உணவின் போதும் அல்லாஹ்வை ஞாபகமூட்டினால் உங்களுக்கு தங்குவதற்கு இடமுமில்லை இன்னும் இரவு உணவுமில்லை என்று ஷைதான் கூறுவான். யார் நுழையும் போது அல்லாஹ்வை ஞாபகமூட்டாமல் நுழைகின்றாரோ நீங்கள் தங்குவதற்கு இடத்தை அடைந்து விட்டீர்கள் என்று ஷைதான் கூறுகின்றான். தனது சாப்பாட்டின் போது யார் அல்லாஹ்வை ஞாபகமூட்ட வில்லையோ அப்போது (ஷைதான்) தங்குவதற்கு இடத்தையும் இரவு உணவையும் நீங்கள் அடைந்து விட்டீர்கள் என்று கூறுவான் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூற நான் கேட்டேன் என்று ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் - முஸ்லிம்)

عن حذيفة قال كنا إذا حضرنا مع النبي صلى الله عليه وسلم طعاما لم نضع أيدينا حتى يبدأ رسول الله صلى الله عليه وسلم فيضع يده وإنا حضرنا معه مرة طعاما فجاءت جارية كأنها تدفع فذهبت لتضع يدها في الطعام فأخذ رسول الله صلى الله عليه وسلم بيدها ثم جاء أعرابي كأنما يدفع فأخذ بيده فقال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يستحل الطعام أن لا يذكر اسم الله عليه وإنه جاء بهذه الجارية ليستحل بها فأخذت بيدها فجاء بهذا الأعرابي ليستحل به فأخذت بيده والذي نفسي بيده إن يده في يدي مع يدها -مسلم

ஹூதைபா ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள். நாங்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு உணவில் கலந்து கொண்டால் ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தன் கரத்தை வைத்து ஆரம்பிக்கும் வரை நாம் எமது கைகளை வைக்க மாட்டோம். எனவே அவர்கள் தமது கரத்தை வைப்பார் (நாங்களும் வைப்போம்.) அவ்வாறு தான் ஒரு முறை நாம் ஒரு சாப்பாட்டிலே கலந்து கொண்டோம் அப்போது ஒரு பெண் உணவிலே கையை வைப்பதற்காக சென்றாள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவளின் கையை தட்டி விட்டார்கள். பின்னர் ஒரு நாட்டுப்புற அறபி வந்து தனது கையை வைக்க முணைந்தார் நபியவர்கள் அவரது கையையும் தட்டி விட்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள் நிச்சயமாக ஷைதான் அல்லாஹ்வின் பெயர் கூறப்படாத போது உணவை அவன் ஹலாலாக்கிக் கொள்கின்றான். நிச்சயமாக இந்தப் பெண்ணைக் கொண்டு அவன் அதனை ஆகுமாக்கிக் கொள்ள முணைந்தான் நான் அவள் கையை எடுத்து விட்டேன், இந்த நாட்டுப் புற அறபியைக் கொண்டு ஆகுமாக்கிக் கொள்ள முணைந்தான் நான் அவரது கையையும் எடுத்து விட்டேன். என்னுயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக நிச்சயமாக அவனது கரம் என் கரத்திலே அவளது கரத்துடன் இருந்தது என்று நபியவர்கள் கூறினார்கள். ( நூல் - முஸ்லிம்)

وقال تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ وَمَن يَتَّبِعْ خُطُوَاتِ الشَّيْطَانِ فَإِنَّهُ يَأْمُرُ بِالْفَحْشَاءِ وَالْمُنْكَرِ -النور - 21

விசுவாசம் கொண்டோரே! ஷைதானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்;;, எவன் ஷைதானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்றானோ அவனை, மானக் கேடானதைக் கொண்டும், வெறுக்கப்பட்டதைக் கொண்டும் நிச்சயமாக (ஷைதானாகிய) அவன் ஏவுவான். (அந்நூர்:21)

பிஸ்மில்லாஹ் கூறுவது ஷைதானுக்கு உணவைத் தடை செய்கின்றது. மற்றும் அதன் மூலம் பரகத்தும் கிடைக்கின்றது.

عن وحشي بن حرب رضي الله عنه أن أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا: يا رسول الله إنا نأكل ولا نشبع؟ قال: فلعلكم تفترقون قالوا: نعم قال فاجتمعوا على طعامكم واذكروا اسم الله يبارك لكم فيه - رواه أبو داود

நபியவர்களின் தோழர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் அவர்களே நிச்சயமாக நாம் உண்ணுகின்றோம் நாம் வைறு நிறம்புவதில்லை என்றார்கள். நீங்கள் பிரிந்தவர்களாக இருக்கின்றீர்கள் போலும் என்றார்கள். ஆம். என்று நபித்தோழர்கள் கூறினார்கள். உங்களின் உணவில் நீங்கள் கூடியிருங்கள் இன்னும் அல்லாஹ்வின் பெயர் கூறுங்கள் அல்லாஹ் அதிலே அபிவிருத்தி செய்வான் என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் - வஹ்ஷி பின் ஹர்ப் ரழியல்லாஹூ அன்ஹூ (நூல் - அபூதாவூத்)

இரண்டாவது – வலக்கரத்தால் சாப்பிடுதல்

நாம் இதனையும் மூன்று வகையில் நோக்கலாம்.

1. சாப்பிட வேண்டிய முறை

2. வலது கையால் சாப்பிடுவதன் சட்டம்

3. வலது கையால் சாப்பிடுவதற்குரிய ஹிக்மத்கள் (எதார்த்தங்கள்)

சாப்பிட வேண்டிய முறை

மூன்று விரல்களால் சாப்பிட முடியுமான உணவு வகைகளை வலது கையின் மூன்று விரல்களால் சாப்பிட வேண்டும்.

وعن كعب بن مالك رضي الله عنه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم يأكل بثلاث أصابع فإذا فرغ لعقها -رواه مسلم

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடுவதையும் சாப்பிட்டு முடித்த பின்னர் அவற்றை சுவைப்பதையும் நான் கண்டேன் என கஃப் பின் மாலிக் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறகின்றார்கள். (நூல் - முஸ்லிம்)

வலது கையால் சாப்பிடுவதன் சட்டம்

வலது கையினால் சாப்பிடுவது கட்டாயமானதாகும். ஏனெனில், நபியவர்கள் "நீ உன் வலக்கரத்தால் சாப்பிடு" எனக் கட்டளையிட்டார்கள்.

وعن سلمة بن الأكوع رضي الله عنه أن رجلاً أكل عند النبي صلى الله عليه وسلم بشماله، فقال: كل بيمينك، قال: لا أستطيع قال: لا استطعت، ما منعه إلا الكبر، فما رفعها إلى فيه -رواه مسلم

நிச்சயமாக ஒரு மனிதர் நபியவர்களிடத்தில் இருந்து கொண்டு தனது இடது கையினால் சாப்பிட்டார், அவருக்கு நபியவர்கள் "நீ உன் வலக்கரத்தால் சாப்பிடு" என்றார்கள், அதற்கு அம்மனிதர் "என்னால் முடியாது" என்று கூறினார். "உன்னால் முடியாமலே பேகட்டும்" என்று நபியவர்கள் கூறினார்கள்! பெறுமையைத் தவிர வேரெதுவும் அவரைத் தடுக்க வில்லை", அதன் பின்னர் அவர் தன் வாயின் பக்கம் எதனையும் உயர்த்த முடியாமல் ஆகிவிட்டார்.
அறிவிப்பவர் - ஸலமத் பின் அல்அக்வஃ ரழியல்லாஹூ அன்ஹூ
நூல் - முஸ்லிம்

இடது கையினால் சாப்பிடுவது ஷைதானின் பண்பாகும்.

வலது கையால் சாப்பிடுவதற்குரிய ஹிக்மத்கள் (எதார்த்தங்கள்)

வலது கையினால் சாப்பிடுவது ஷைதானுக்கு முரண்படுவதாகும்.

عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: إذا أكل أحدكم فليأكل بيمينه وإذا شرب فليشرب بيمينه؛ فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله -رواه مسلم

உங்களில் ஒருவர் சாப்பிட்டால் தனது வலக்கரத்தினால் சாப்பிடட்டும் இன்னும் குடித்தால் தனது வலக்கரத்தால் குடிக்கட்டும், ஏனெனில், ஷைதான் ஆகிரவனே தனது இடது கையினால் சாப்பிடுகின்றான் மற்றும், தனது இடது கையினால் குடிக்கின்றான் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் - இப்னு உமர் ரழியல்லாஹூ அன்ஹூமா
நூல் - முஸ்லிம்

இடது கையினால் சாப்பிடுவது ஷைதானுக்கு வழிப்படுவதாகவும் ஸூன்னாவுக்கு முரண்படக் கூடியதாகவும் நபியவர்களின் எச்சரிக்கைக்குரிய விடயமாகவும் அல்லாஹ்வின் தண்டனைக்குரிய செயலாகவும் இச்செயல் காணப்படுகின்றது.

மூன்றாவது – பக்கத்தில் உள்ளதைச் சாப்பிடுதல்

இதனையும் மூன்று வகையில் நோக்கலாம்.

1. சாப்பிட வேண்டிய முறை

2. தம் பக்கத்தில் உள்ளதைச் சாப்பிடுவதன் சட்டம்

3. அதற்குரிய ஹிக்மத்கள் (எதார்த்தங்கள்)

சாப்பிட வேண்டிய முறை

எவரொருவர் சாப்பிடுகின்றாரோ அவர் தன் பக்கத்தில் உள்ளதைச் சாப்பிட வேண்டும். தனது கையை அங்குமிங்கும் அலைவதற்கு விடக் கூடாது. மற்றவரின் பகுதில் உள்ள உணவின் பக்கம் தன் கையை செலுத்தக் கூடாது.

தம் பக்கத்தில் உள்ளதைச் சாப்பிடுவதன் சட்டம்

தம் பக்கத்தில் உள்ள உணவைச் சாப்பிடுவது வாஜிபாகும் - நபியவர்கள் "நீ உன் பக்கத்தில் உள்ளதைச் சாப்பிடுவாயாக" என்ற வாசகம் இதனை உணர்த்தி நிற்கின்றது.

قال الشافعي رحمه الله إذا أكل الشخص مما يلي غيره عالما بالنهي كان عاصيا آثما

இமாம் ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள் : "யார் மற்றவரின் பகுதியில் உள்ளதைச் சாப்பிடுவது கூடாது என்பதை அறிந்த நிலையில் சாப்பிடுகின்றாரோ அவர் பிழை செய்தவராகவும் பாவம் செய்தவராகவும் இருக்கின்றார்."

அதற்குரிய ஹிக்மத்கள் (எதார்த்தங்கள்)

ஒழுங்கு மற்றும் மற்றவர் உரிமையை மீறாதிருத்தல்.

அது நல்ல பழக்கவழக்கமாகக் கருதப்படமாட்டாது.

பேராசையைத் தடுக்கின்றது.

இந்த நபிமொழி தரக்கூடிய பலன்கள்

1. ஷைதானை விட்டும் நாம் தூரமாகி இருக்க வேண்டும், காபிர்களுக்கு ஒப்பாகுவது தடுக்கப்பட்டுள்ளது என்பதனை இந்நபிமொழி உணர்த்திக் கொண்டிருக்கின்றது.

من تشبه بقوم فهو منهم سنن أبي داود رقم 4031، وقال الألباني: حسن صحيح، صحيح سنن أبي داود للألباني 2:504

யார் ஒரு சமூகத்தை ஒப்பாகின்றாரோ அவர் அச்சமூகத்தைச் சார்ந்தவர்" என ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அபூதாவூத்)

إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا إِنَّمَا يَدْعُو حِزْبَهُ لِيَكُونُواْ مِنْ أَصْحَابِ السَّعِيرِ -سورة فاطر: الآية 6

அல்லாஹ் கூறுகின்றான்: "நிச்சயமாக ஷைதான் உங்களுக்கு எதிரியாக இருக்;கின்றான்ளூ எனவே, நீங்கள் அவனை எதிரியாகவே எடுத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக அவன் (தனக்கு வழிப்பட்ட) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரகவாசிகளில் ஆகிவிடுவதற்காகவேதான்." (பாதிர் - 6)

2. ஷைதானுக்கு இரண்டு கைகள் உண்டு, அவன் தனது இடது கையால் சாப்பிடுகின்றான் இடது கையால் குடிக்கின்றான்.

3. நிச்சயமாக ஷைதான் சாப்பிடுகின்றான் இன்னும் குடிக்கின்றான்.

4. நிச்சயமாக ஷைதான் எடுக்கின்றான் இன்னும் கொடுக்கின்றான்.

5. எவர்கள் வேண்டுமென்று ஸூன்னாவுக்கு எதிராக செயல் படுகின்றார்களோ அவர்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்யலாம். (தனக்கு முடியாது என்ற போது முடியாமலே போகட்டும் என்று நபியவர்கள் அவருக்கு எதிராக பிரார்த்தித்தார்கள்.)

6. சாப்பிடுகின்ற போது நன்மையை ஏவித் தீமையைத் தடுக்க முடியும்.

7. சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் சாப்பிடுகின்ற போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளைக் கற்றுக் கொடுக்க முடியும்.

8. நபியவர்களுக்கு நபித்தோழர்கள் வழிப்பட்ட விதம் இந்த நபிமொழியில் விளக்கப்பட்டுள்ளது. நபியவர்கள் கற்றுக் கொடுத்த பின் தனது சாப்பாட்டு முறை இப்படித்தான் அமைந்தது என்று அந்நபித் தோழர் கூறினார்.

by: ABU MUAAD JAMALUD DEEN (GHAFOORI)