அபூஅய்யூப், பிலால் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர் நபியவர்களின் கப்ரைத் தொட்டு முத்தமிட்டார்களா?

 

بسم الله الرحمن الرحيم

கப்ரைத் தொட்டு பரகத் தேடுவது, அதனை முத்தமிடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியமே என்று பரவலாக வட்ஸப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு அவர்கள் ஆதாரமாக அபூஅய்யூப் அல்அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களினதும் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களினதும் சம்பவத்தை முன்வைக்கின்றனர். பொதுவாகவே கப்ருபக்தி கொண்டவர்கள் அவர்களது கருத்துக்களை நியாயப்படுத்துவதற்கு பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையே முன்வைத்து வருகின்றனர் என்பது பொதுமக்களும் அறிந்த விடயமாகிவிட்டது. ஒரு சிலரின் தீர்ப்பை மாத்திரம் முன்வைத்து ஏனைய இமாம்களின் தீர்ப்புக்களை ஆழமாக ஆராயாமல் முடிவு காணக்கூடியவர்களே இவர்கள்.