இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 06

بسم الله الرحمن الرحيم

“ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா”

 (“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”)

அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ்.

18. அல் குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் நாம் விளங்கும் போது இந்த உம்மத்தினுடைய ஹதீஸ் கலையைச்சார்ந்த ஸலபுகளின் விளக்கத்தைக்கொண்டு விளங்க வேண்டும் என்று நாம் வரையறுத்து வைத்திருக்கின்றோம். அவர்களில் இருக்கக்கூடிய தனி நபர்களில் எவரையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற மாட்டோம். மாற்றமாக எவர் சத்தியத்தைக் கொண்டு வருகின்றாரோ அதனை நாம் எடுத்துக்கொள்வோம்.