ஹிஸ்னுல் முஃமின் மின் அத்காரி வஅத்இயதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் – 2

1. திக்ரின் சிறப்பு குறிப்பு :

(இத்தலைப்பை) அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் எனும் நூலில் கிதாபுத் தாவாத் வல்அத்கார் எனும் பகுதியில் பாடம்: 65 (இல் காணலாம்.)

அல்லாஹ் கூறுகின்றான்: 'அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறும் ஆண்களும் நினைவு கூறும் பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.' (அல்அஹ்ஸாப்: 35)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: 'நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் அமைதி பெறுகின்றன.

அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.' (அர்ரஃத்: 28) இன்னும் அல்லாஹ் கூறுகின்றான்: 'ஆகவே, என்னை நீங்கள் நினைவு கூறுங்கள். உங்களை நான் நினைவு கூறுகின்றேன்.' (அல்பகரா: 152)

மற்றும் கூறுகின்றான்: 'அல்லாஹ்வை நினைவு கூறுவது மிகப் பெரியதாகும்.' (அல்அன்கபூத்: 45)

1. ஹதீஸுல் குத்ஸியில் இடம்பெற்றுள்ளதாவது: 'அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: எனது அடியான் என்னை நினைவு கூறுவதுடன் நான் (அவனிடத்தில்) உள்ளேன். அவன் என்னை நினைவு கூர்ந்தால் நான் அவனுடன் இருப்பேன். அவன் தனது உள்ளத்தில் என்னை ஞாபகித்தால் நானும் அவனை என் உள்ளத்தில் ஞாபகிப்பேன். மேலும், அவன் என்னை ஒரு கூட்டத்திற்கு மத்தியில் ஞாபகித்தால் நான் அவனை அவர்களை விட மிகச் சிறந்த ஒரு கூட்டத்திற்கு மத்தியில் ஞாபகிப்பேன்.'

குறிப்பு :

(இச்செய்தி) அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (7405), முஸ்லிம் (2675) ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

மற்றோர் அறிவிப்பில், 'மேலும், அவன் என்னை ஞாபகிக்கும் தருணத்தில் நான் அவனுடன் இருப்பேன்' என்று இடம்பெற்றுள்ளது.

பிறிதோர் அறிவிப்பில், 'இன்னும், அவன் என்னை ஞாபகிக்கும் விதத்தில் நான் அவனுடன் இருப்பேன்' என்று இடம்பெற்றுள்ளது.

மேலும் ஓர் அறிவிப்பில், 'இன்னும், அவன் என்னை அழைத்தால் நான் அவனுடன் இருப்பேன்' என்று பதிவாகியுள்ளது.

2. (நபியவர்கள் கூறினார்கள்) : 'உங்களது செயல்களில் சிறந்ததையும் உங்களது நாயனிடத்தில் தூய்மைக்குரியதையும் உங்களது அந்தஸ்துக்களில் மிக உயர்வானதையும் தங்கம் வெள்ளி ஆகியவற்றைச் செலவிடுவதிலும் பார்க்க உங்களுக்கு மிகச் சிறந்ததையும் உங்களது விரோதியை நீங்கள் சந்தித்து நீங்கள் அவர்களது கழுத்துக்களைத் துண்டிப்பதும் அவர்கள் உங்களது கழுத்துக்களைத் துண்டிப்பதிலும் பார்க்க உங்களுக்குச் சிறந்ததையும் அறிவித்துத் தரட்டுமா? என (நபியவர்கள் வினவினார்கள்.) அதற்குத் தோழர்கள்: ஆம். என்று கூற, அல்லாஹுத்தஆலாவை ஞாபகிப்பதாகும் என பதிலளித்தார்கள்.'

குறிப்பு :

(இச்செய்தி) அபூத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் திர்மிதி (3377) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேலும், அதன் இறுதிப்பகுதியில் (இடம்பெற்றுள்ளதாவது), முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வை ஞாபகிப்பதைவிட அவனுடைய வேதனையில் இருந்தும் பாதுகாக்கக்கூடியதாக வேறு எதுவும் இருக்க முடியாது.' மேலும், (இச்செய்தியை) எங்களது ஆசிரியரான முக்பில் இப்னு ஹாதி அல்வாதிஇ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்ஸஹீஹ் அல்முஸ்னத் (1038) எனும் நூலில் ஸஹீஹ் எனும் தரத்தில் காணலாம். மேலும், அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸஹீஹுத் திர்மிதி (2688) எனும் நூலிலும் ஸஹீஹ் இப்னு மாஜா (2790) எனும் நூலிலும் சரி கண்டுள்ளார்கள்.

3. (நபியவர்கள் கூறினார்கள்) : 'தனித்தவர்கள் முந்திவிட்டார்கள் (என நபியவர்கள் கூறிய போது, அவர்களை நோக்கித் தோழர்கள்), அல்லாஹ்வின் தூதரே! தனித்தவர்கள் என்போர் யாவர்? என வினவினார்கள். (அதற்கு நபியவர்கள்), அல்லாஹ்வை அதிகமாக ஞாபகிக்கும் ஆண்களும் பெண்களுமாவார்கள்' என பதிலளித்தார்கள்.

குறிப்பு :

(இச்செய்தி) அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் முஸ்லிம் (2676) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

4. (நபியவர்கள் கூறினார்கள்) : 'தன்னுடைய இரட்சகனை ஞாபகிப்பவனுக்கும் ஞாபகிக்காதவனுக்கும் உதாரணம் உயிரோடு உள்ளவனுக்கும் மரணித்தவனுக்கும் போலுள்ள உதாரணமாகும்.'

குறிப்பு :

(இச்செய்தி) அபூ மூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (6407) எனும் நூலில் பதிவாகியுள்ளது.

5. (நபியவர்கள் கூறினார்கள்) : 'அல்லாஹ்வை ஞாபகிக்கின்ற வீட்டிற்கும் அல்லாஹ்வை ஞாபகிக்காத வீட்டிற்கும் உதாரணம் உயிருடன் இருப்பவருக்கும் மரணித்தவருக்கும் போலுள்ள உதாரணமாகும்.'

குறிப்பு :

(இச்செய்தி) அபூ மூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் முஸ்லிம் (779) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

6. (நபியவர்கள் கூறினார்கள்) : 'மேலும், நீங்கள் அல்லாஹ்வை ஞாபகிப்பதைக் கொண்டு உங்களை நான் பணிக்கின்றேன். நிச்சயமாக அதற்கு உதாரணம், ஒரு மனிதன் தன்னுடைய அடையாளங்களை வேகமாகப் பின்துயர்ந்தும் செல்லும் விரோதிகளை விட்டும் வெளியாகிப் பாதுகாப்பான ஓர் அரணில் பிரவேசித்து அவர்களை விட்டும் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றான். அதேபோன்றே அடியான், அல்லாஹ்வை ஞாபகிப்பதின் மூலம் அன்றி வேறு எதனைக் கொண்டும் ஷைத்தானைவிட்டும் (தன்னைப்) பாதுகாத்துக் கொள்ளமாட்டான்.'

குறிப்பு :

திர்மித் (2863), அஹ்மத் (4/130) (இந்நபிமொழி) அபுல் ஹாரிஸ் அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் இருந்தும் ஒரு பகுதியாகும். (மற்றும்) அஸ்ஸஹீஹ் அல்முஸ்னத் (285), ஸஹீஹ் அல்ஜாமிஇ (1724) ஆகிய நூட்களிலும் காணலாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரு