ஸூரதுன் நூர் விளக்கவுரை

ஸூரதுன் நூரானது பின்வரும் அம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது:

1. ஸூரதுன் நூரின் முக்கியத்துவம்.

2. விபச்சாரம் தொடர்பான சட்டங்கள்.

3. குற்றவியல் தண்டனைகள் நிறைவேற்றப்படும் போது என்னென்ன ஒழுங்குகளைக் கடைபிடிக்க வேண்டும்? என்பது பற்றிய தகவல்கள்.

4. அவதூறு தொடர்பான சட்டங்கள்.

5. கணவனும் மனைவியும் தங்களுக்கிடையில் சாபமிட்டு பிரிந்து கொள்வது தொடர்பான சட்டங்கள்.

6. ஆயிஷா (ரழி) அவர்கள் மீது அவதூறு கூறப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்கள்.

7. அவதூறு பரப்புவதின் விபரீதம் குறித்து விசுவாசிகளுக்கு எச்சரித்தல்.

8. ஷைத்தானின் சதிவலைகள் தொடர்பான தகவல்கள்.

9. தர்மம் மற்றும் மன்னிக்கும் மனப்பான்மை ஆகியவற்றின் மாண்புகள்.

10. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் சிறப்புக்கள்.

11. வீட்டினுள் பிரவேசிக்கும் போது பேண வேண்டிய ஒழுங்குகள்.

12. பார்வையைத் தாழ்த்துவதின் முக்கியத்துவம்.

13. ஹிஜாப் பற்றிய சட்டங்கள்.

14. ஓர் இஸ்லாமியப் பெண்ணின் நடத்தை எப்படி இருக்க வேண்டும்? என்பது பற்றிய சட்டதிட்டங்கள்.

15. திருமணம் தொடர்பான சட்டதிட்டங்கள்.

16. அடிமைகள் தொடர்பான சட்டதிட்டங்கள்.

17. அல்லாஹ்வின் ஒளிக்கு உதாரணம்.

18. பள்ளிவாசல்களின் சிறப்புகளும் அங்கு கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளும்.

19. காபீர்களில் உள்ள இரு வகையினருக்கான உதாரணங்கள்.

20. இறைபடைப்புக்கள் குறித்து சிந்தனையைத் தூண்டல்.

21. நயவஞ்சகர்களின் சூழ்ச்சிகளும் விசுவாசிகளின் நிலையும்.

22. பூமியை நிர்வகிக்கும் பொறுப்பு விசுவாசிகளுக்கு வழங்கப்படுவது தொடர்பாக அல்லாஹ்வின் வாக்கு.

23. தொழுகை, ஸகாத், வழிப்படுதல், இறை நிராகரிப்பாளர்களின் பலவீனம் மற்றும் அவர்களின் போக்கு பற்றிய தகவல்கள்.

24. அடிமைகள் மற்றும் சிறுவர்களுக்கு பிரவேசிக்க அனுமதி கேட்க வழங்கப்பட்ட நேரங்கள்.

25. உறவினர் வீடுகளில் உணவு பரிமாறுவது தொடர்பான சட்டங்கள்.

26. நாம் நபியவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றிய தகவல்கள்.

27. அல்லாஹுத்தஆலாவின் அறிவு பற்றிய விளக்கம்.

இவ்வத்தியாயத்தின் உள்ளடக்கத்தில் குறிப்பிடப்பட்ட தலைப்புக்கள் தொடர்பான விரிவான தகவல்ளை எமது அடுத்த தொடர்களில் எதிர்பாருங்கள். இன்ஷா அல்லாஹ்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK