ஸலபிய்யா என்றால் என்ன? அது குறித்து உங்கள் கருத்து என்ன?

ஸலபிய்யா என்பது ஸலபுகளின் பக்கம் சேர்க்கப்பட்ட ஒன்றாகும். ஸலப் என்பவர்கள் முதல் மூன்று நூற்றாண்டைச் சேர்ந்த ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர்களும் நேர்வழியின் இமாம்களுமாவார்கள். அவர்களுக்கு ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சிறப்பைக் கொண்டு பின்வரும் ஹதீஸில் சான்று பகருகின்றார்கள்.

மனிதர்களில் சிறந்தவர்கள் எனது நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாவர். அதன் பின்பு அவர்களை அடுத்துவரக்கூடியவர்களாவர். அதன் பின்பு அவர்களை அடுத்துவரக்கூடியவர்களாவர். பின்பு பல கூட்டங்கள் தோன்றும். அவர்களில் ஒருவருடைய சாட்சி அவருடைய சத்தியத்தை முந்திவிடும். அவருடைய சத்தியம் அவருடைய சாட்சியை முந்திவிடும். (அஹ்மத், புஹாரீ, முஸ்லிம்)

ஸலபிய்யூன் என்பது ஸலபி என்பதின் பன்மைச் சொல்லாகும். அது ஸலபுகளின் பக்கம் சேர்க்கப்பட்ட ஒன்றாகும். இதன் கருத்து முன்பு சென்றுவிட்டது. இவர்கள் தான் குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றி, அவ்விரண்டின்பால் அழைப்புவிடுத்து, அவ்விரண்டையும் நடைமுறைப்படுத்தியவர்கள். இதன் காரணமாக இவர்கள் சுன்னாவையும் ஜமாஅத்தையும் சார்ந்தவர்களாக ஆகிவிட்டார்கள்.

-    சஊதி அரேபியா பத்வாக் குழு

By: ASKI IBNU SHAMSIL ABDEEN