ஷஃபானின் நடுப்பகுதி இரவில் ஏன் விழாக் கொண்டாடப்பட வேண்டும்?

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், "ஹுக்முல் இஹ்திபால் பிலைலதின் நிஸ்ப் மின் ஷஃபான்” எனும் தனது நூலில் கூறுகையில்: "அதிகமான அறிஞர்களிடத்தில் ஷஃபானுடைய நடுப்பகுதியின் இரவை தொழுகை அல்லது, ஏனைய கிரியைகளைக் கொண்டு விழாக்கொண்டாடுவதும், அதன் பகல் பொழுதை நோன்பைக் கொண்டு குறிப்பாக்குவதும் நிராகரிக்கத்தக்க பித்அத்களாகும். மேலும், தூய மார்க்கத்தில் இதற்கு எவ்வித அடிப்படையும் கிடையாது” என்கிறார்கள்.
தொடர்ந்து கூறுகையில்: "ஷஃபானின் நடுப்பகுதி இரவு தொடர்பாக எவ்வித ஸஹீஹான ஹதீஸும் பதிவாகவில்லை. மாறாக, இது தொடர்பாகப் பதிவான அனைத்தும் எவ்வித அடிப்படையுமில்லாத இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான ஹதீஸ்களாகும். குறித்த இரவைப் பொறுத்தளவில் அதற்கு அல்குர்ஆனை ஓதுவது கொண்டோ அல்லது, தனிப்பட்ட தொழுகைகளைக் கொண்டோ அல்லது, கூட்டுத் தொழுகைகளைக் கொண்டோ எவ்விதச் சிறப்பம்சங்களும் கிடையாது. மாறாக, சில அறிஞர்கள் அதற்குச் சிறப்பு இருப்பதாகக் கூறுவது பலவீனமான கூற்றாகும். எனவே, எந்த ஒன்றைக் கொண்டும் அவ்விரவைக் குறிப்பாக்கக்கூடாது. இதுவே இதுவிடயத்தில் சரியான நிலைப்பாடாகும்” என்கிறார்கள். (பதாவா இஸ்லாமிய்யா: 4/511)

- தமிழில்: அபூஹுனைப்