மார்க்கத்தை அறியாத உனக்கு கலாநிதிப் பட்டத்தால் என்ன பயன்?

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்ஹ் முக்பில் இப்னு ஹாதீ அல்வாதிஈ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:
எத்தனையோ மனிதர்கள் இஸ்லாமிய பிக்ஹ் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றிருப்பார்கள். ஆனால் பிக்ஹில் எதையும் விளங்காதவர்களாக இருப்பார்கள்.
இன்னும் எத்தனையோ மனிதர்கள் ஹதீஸ் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றிருப்பார்கள். ஆனால் ஹதீஸை விளங்காதவர்களாக இருப்பார்கள்.
இந்தப் பட்டங்கள் எல்லாம் அதிகமான மனிதர்களை தகுதியற்ற பதவிகளுக்கு வழியமைக்கின்றது.
நீ அல்லாஹ்வின் மார்க்கத்தை அறியாதிருக்கும் போது இந்தக் கலாநிதிப் பட்டத்தால் உனக்கு என்ன பயன்?
நூல்: அல்மஹ்ரஜ் மினல் பித்னா (193)
குறிப்பு: இங்கு ஷெய்ஹ் அவர்கள் கலாநிதிப் பட்டத்தை குறை காணவில்லை. இஸ்லாமியத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்று, இஸ்லாத்தை சரியாக விளங்காதவர்களைப் பற்றியே குறிப்பிட்டுள்ளார்.