மழையைக் காரணமாகக் கொண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவதாக இருந்தால்…

بسم الله الرحمن الرحيم

கேள்வி: இரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவதற்குக் காரணமாக அமையும் மழையின் வரையறை யாது?

பதில்: அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "அதிகமான மழையின் காரணமாக ஆடை ஈரமாகுமென்றால் இச்சந்தர்ப்பத்தில் மஃரிப், இஷாத் தொழுகைகளை ஒன்று சேர்த்துத் தொழுது கொள்ளலாம். ஆடையை ஈரமாக்காத மழையாக இருந்தால் இச்சந்தர்ப்பத்தில் சேர்த்துத் தொழுவது கூடாது. ஏனெனில், இவ்வாறான மழையில் மனிதர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை.

ஆடை ஈரமாகுவதின் வரையறை என்ன? என்று யாராவது கேட்டால், அவருக்கு நாம் கூறும் பதில்: ஆடையைப் பிளியும் போது நீர் வடியுமென்றால் அதுவே ஈரத்திற்குரிய வரையறையாகும்”. (அஷ்ஷர்ஹுல் மும்திஉ: 4/391)

கேள்வி: பொழிகின்ற மழை, சேர்த்துத் தொழுவதற்கு முடியுமான மழையா? அல்லது, இல்லையா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டால் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

பதில்: அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "சேர்த்துத் தொழுவதற்குரிய காரணம் உறுதியானதா? அல்லது, உறுதியற்றதா? என்று மனிதர்கள் சந்தேகம் கொண்டால் அச்சந்தர்ப்பத்தில் ஒன்று சேர்த்துத் தொழ முடியாது. ஏனென்றால், கட்டாயமாகத் தொழுகைகளை அதனுடைய நேரங்களில் நிறைவேற்றுவதே அடிப்படையாகும்”. (பதாவா இப்னி உஸைமீன்: 15/399)

-     தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்