ஒரு பொருளை வாங்குவதாக வாக்களிப்பது அப்பொருள் விடயத்தில் நடந்து முடிந்த வியபாரமாகக் கருதப்படுமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: ஒருவர் தனது பொருளை மற்றொருவருக்கு விற்றுவிட்டதாகக் கூற, வாடிக்கையாளர் தான் அதனைப் பிறகு பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதாகக் கூறினால், அது நடந்து முடிந்த செல்லுபடியான வியாபாரமாகக் கருதப்படுமா?

பதில்: அது நடந்து முடிந்த செல்லுபடியான வியாபாரமாகக் கருதப்பட மாட்டாது. ஏனெனில், இங்கு குறித்த பொருளை வாங்குவதாக மாத்திரமே வாக்களிக்கப்பட்டுள்ளது. வியாபாரமானது ஒருவொருக்கொருவர் விருப்பத்துடனும் அவரவருடைய கடமையைப் பேணி நடப்பதுடனும் சம்பந்தப்பட்டது. ஆனால், பிறகு வாங்குவதாகச் சொல்வது வெறும் வாக்காகவே கருதப்படும். அதனை மீறுவது வாக்குமீறலில் உள்ளடங்கும். மாறாக, வியாபாரத்தில் காணப்படும் நிபந்தனைகள் இத்தகைய அமைப்பில் காணப்படுவதில்லை.

பார்க்க: அல்பிக்ஹு அலா மதாஹிபில் அர்பஅதி : 2 / 156