புதுவீட்டு விருந்தின் சட்டம் என்ன?

بسم الله الرحمن الرحيم

வினா: 

நாம் ஒரு புதிய வீட்டுக்கு இடம் மாறியுள்ளோம். அவ்வீட்டை அறிமுகப்படுத்துவதற்கும் அயலவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை ஒன்று சேர்ப்பதற்கும் ஒரு விருந்தைத் தயார் செய்ய விரும்புகிறோம். அதன் சட்டம் என்ன?

விடை:

களிப்பு, சந்தோஷம் என்ற அடிப்படையில் அது இருந்தால் நண்பர்களையும் உறவினர்களையும் ஒன்று சேர்ப்பதற்காக வேண்டி புதுவீட்டில் நுழைந்ததை முன்னிட்டு விருந்து தயாரிப்பதில் குற்றமில்லை. ஆனால், அவ்விருந்து ஜின்களின் தீங்கைத் தடுத்துவிடும் என்ற நம்பிக்கை அதனுடன் சேர்ந்து காணப்படின் அச்செயல் ஆகுமாகாது. ஏனென்றால், அது ஷிர்க்கும் தீய நம்பிக்கையுமாகும். ஆனால், வழமை என்ற அடிப்படையில் இந்நடைமுறை இருந்தால் குற்றமில்லை.

வழங்கியவர்: அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்சான் ஹபிழஹுல்லாஹ்

தமிழில்: அஸ்கி இப்னு ஷம்ஷிலாப்தீன்