புதிய மாணவர் தெரிவு – 1438/2017

அல்கமா அறபுக் கல்லூரி 

بسم الله الرحمن الرحيم

  • அல்கமா அறபுக் கல்லூரி தனது மனனப் பிரிவுக்கும் கிதாப் பிரிவுக்கும் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

  • அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் விளக்கத்தை அடிப்படையாக வைத்து கற்றுக் கொடுப்பதை வழிமுறையாகக் கொண்டு செயற்படும் இம்மத்ரஸா அதனை வாழ்வில் நிலை நாட்டுவதற்குரிய பயிற்சிகளை வழங்குகின்றது.

  • கற்றல், நடைமுறைப்படுத்தல், பிறருக்கு எத்திவைத்தல் ஆகிய இந்த மூன்று அடிப்படை அம்சங்களையும் இம்மத்ரஸா தனது குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றது.

  • அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் கரங்களால் பதியப்பட்ட தலையாய நூற்கள் இம்மத்ரஸாவின் பாடத்திட்டத்தில் இடம் பிடித்துள்ளன.

  • மேலும், இங்கிருந்து வெளியாகும் மாணவர்கள் அல்குர்ஆனையும் ஆயிரக்கணக்கான ஹதீஸ்களையும் அகீதாவின் மூலநூற்களையும் மனனமிட்டவர்களாகவும் மற்றும் அதன் விளக்கங்களைப் பெற்றவர்களாகவும் திகழுவார்கள். இன்ஷா அல்லாஹ்.

  • மனனப் பிரிவுக்குத் தெரிவாகும் மாணவர்கள் 9 வயதை அடைந்தவர்களாகவும் அல்குர்ஆனை நன்றாக ஓதத்தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். மற்றும், கிதாப் பிரிவுக்கு தெரிவாகும் மாணவர்கள் 13 வயதை அடைந்தவர்களாகவும் சாதாரணமாக அல்குர்ஆனை ஓதத்தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

  • எம்மிடத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் உலக வாழ்க்கைக்குத் தேவையான, மார்க்கத்திற்கு முரணற்ற, முக்கியமான சில பாடங்களையும் வழங்க இருக்கின்றோம்.

  • விண்ணப்பங்கள் யாவும் டிசம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக எமக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

தொடர்புகளுக்கு:

MADRASA ALQAMAH, 56/1, THAKKIYA ROAD, PORUTHOTA, KOCHCHIKADE.

Telephone : 0312274013, 0758024306, 0755668976, 0777671660

Â